India’s development journey will continue to receive the blessings of Bhagwan Swaminarayan: PM Modi

January 23rd, 02:12 pm

PM Modi shared his remarks during the Shikshapatri Dwishatabdi Mahotsav, marking 200 years of Bhagwan Swaminarayan’s Shikshapatri. He said that through the Shikshapatri, Bhagwan Swaminarayan provided invaluable guidance for life, and today his followers are running numerous campaigns dedicated to society, the nation and humanity. The PM also urged all enlightened organizations to extend greater cooperation in the Gyan Bharatam Mission.

சிக்‌ஷாபத்ரி த்விஷாதப்தி பெருவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

January 23rd, 02:00 pm

சிக்‌ஷாபத்ரி த்விஷாதப்தி பெருவிழாவில் காணொலிக்காட்சி மூலம் இன்று நிகழ்த்திய உரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். பகவான் சுவாமி நாராயணனின் சிக்‌ஷாபத்ரியின் 200-வது ஆண்டினை குறிக்கும் வகையில் இந்த சிறப்பு நிகழ்வு நடைபெறுவது பற்றி திரு மோடி எடுத்துரைத்தார். பகவான் சுவாமி நாராயணனை பின்பற்றும் கோடிக்கணக்கானவர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

The history of Somnath is not one of destruction or defeat, it is a history of victory and renewal: PM Modi during Somnath Swabhiman Parv

January 11th, 12:00 pm

PM Modi addressed the Somnath Swabhiman Parv in Somnath, recalling the sacrifices of those who dedicated their lives to the protection and reconstruction of the temple. Emphasising that the festival is not merely a remembrance of the destruction that took place a thousand years ago, the PM said it is a celebration of a thousand-year journey of resilience, as well as of India’s existence and pride. He underscored the resolve to move forward with the vision of “Dev se Desh.”

குஜராத்தின் சோம்நாத்தில், சோம்நாத் சுயமரியாதைப் பெருவிழா நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

January 11th, 11:41 am

குஜராத்தின் சோம்நாத்தில் இன்று (11.01.2026) நடைபெற்ற சோம்நாத் ஸ்வாபிமான் பர்வ் எனப்படும் சோம்நாத் சுயமரியாதைப் பெருவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்தச் சூழலும், இந்த கொண்டாட்டமும் அசாதாரணமானது என்று பிரதமர் குறிப்பிட்டார். ஒருபுறம் பகவான் மகாதேவரின் அருளும், மறுபுறம் சூரியனின் கதிர்களும், மந்திரங்களின் எதிரொலியும், பக்தியின் எழுச்சியும் இணைந்திருப்பதை அவர் எடுத்துரைத்தார். இந்த தெய்வீக சூழல் இந்த நிகழ்வை மேலும் அதிக தெய்வீகமாகவும், பிரமாண்டமாகவும் ஆக்குகிறது என்று அவர் கூறினார். சோம்நாத் கோயில் அறக்கட்டளையின் தலைவராக, சோம்நாத் சுயமரியாதைப் பெருவிழாவில் தீவிரமாக பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றதை ஒரு பெரிய அதிர்ஷ்டமாகக் கருதுவதாக திரு நரேந்திர மோடி தெரிவித்தார். இந்த கொண்டாட்டம் பெருமை, மரியாதை, கண்ணியம் மற்றும் அறிவு, மகத்துவம், பாரம்பரியம், ஆன்மீகம், உணர்தல், அனுபவம், மகிழ்ச்சி, நெருக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது என்று பிரதமர் எடுத்துரைத்தார். எல்லாவற்றிற்கும் மேலாக, இது மகாதேவரின் ஆசீர்வாதங்களைக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

சோம்நாத் பயணத்தின் சில காட்சிகளைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

January 10th, 11:00 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி குஜராத் மாநிலம் சோம்நாத் பயணத்தின் சில காட்சிகளைப் பகிர்ந்துள்ளார்.

குஜராத்தில் உள்ள சோம்நாத்துக்கு ஜனவரி 10-11 தேதிகளில் பிரதமர் பயணம்

January 09th, 12:10 pm

குஜராத்தில் உள்ள சோமநாத்துக்கு 2026, ஜனவரி 10-11 தேதிகளில் செல்லும் பிரதமர் திரு நரேந்திர மோடி சோமநாதர் சுயமரியாதை விழாவில் பங்கேற்பார். ஜனவரி 10 அன்று இரவு சுமார் 8 மணியளவில், பிரதமர் ஓம்கார் மந்திரம் பாராயணம் நிகழ்வில் பங்கேற்பார். பின்னர் சோமநாதர் ஆலயத்தில் ட்ரோன் நிகழ்ச்சியைப் பார்வையிடுவார்.

ஜனவரி 10-12 தேதிகளில் பிரதமர் குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறார்

January 09th, 12:02 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி 2026, ஜனவரி 10 முதல் 12 வரை குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறார். ஜனவரி 10 அன்று மாலை பிரதமர் சோமநாதர் ஆலயத்திற்கு வந்து சேர்வார். இரவு சுமார் 8 மணியளவில் பிரதமர் ஓம்கார மந்திரம் பாராயணம் நிகழ்வில் பங்கேற்பார். அதன் பின் சோமநாதர் ஆலயத்தில் ட்ரோன் நிகழ்ச்சியைப் பார்வையிடுவார்.

நாட்டின் கூட்டான உணர்வை விழிப்புறச்செய்வதில் சோம்நாத் தாம் வகிக்கும் காலத்தால் அழியாத பங்களிப்பை ஒரு சுபாஷிதம் மூலம் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்

January 09th, 08:44 am

நாட்டின் கூட்டான உணர்வை விழிப்புறச்செய்வதில் சோமநாத் ஆலயம் தாம் வகிக்கும் காலத்தால் அழியாத பங்களிப்பை சுட்டிக்காட்டி அதற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று புகழாரம் சூட்டியுள்ளார்.

சோம்நாத் சுயமரியாதை திருவிழாவையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

January 08th, 10:22 am

சோம்நாத் சுயமரியாதை திருவிழா தொடங்குவதையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பல நூற்றாண்டுகளாக லட்சக்கணக்கான மக்கள் மனங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும் காலத்தால் அழியாத நாகரீக உணர்வை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.