The energy here today, especially among the youth, says it all - ‘Phir Ek Baar, NDA Sarkar’: PM Modi in Nawada, Bihar
November 02nd, 02:15 pm
In a public rally in Nawada, PM Modi highlighted the enthusiasm among the women of Bihar whenever he visited the state. He noted that from Jeevika Didis powering the rural economy to Lakhpati Didis setting examples of self-reliance, and to Krishi Sakhis, Bank Sakhis and Namo Drone Didis, women are leading the Bihar's transformation. Urging the crowd to switch on their mobile flashlights, he gathered support for the NDAPM Modi addresses large public gatherings in Arrah and Nawada, Bihar
November 02nd, 01:45 pm
Massive crowd attended PM Modi’s rallies in Arrah and Nawada, Bihar, today. Addressing the gathering in Arrah, the PM said that when he sees the enthusiasm of the people, the resolve for a Viksit Bihar becomes even stronger. He emphasized that a Viksit Bihar is the foundation of a Viksit Bharat and explained that by a Viksit Bihar, he envisions strong industrial growth in the state and employment opportunities for the youth within Bihar itself.குஜராத்தின் பாவ்நகரில் நடைபெற்ற ‘கடலில் இருந்து வளம்’ என்ற நிகழ்வில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
September 20th, 11:00 am
குஜராத் முதல்வர் திரு புபேந்திர படேல் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது நண்பர்கள் திரு சர்பானந்த சோனோவால் அவர்களே, சி.ஆர்.பாட்டில் அவர்களே, திரு மன்சுக் மாண்டவியா அவர்களே, திரு சாந்தனு தாக்கூர் அவர்களே, திருமிகு நிமுபென் பம்பானியா அவர்களே, நாடு முழுவதும் சுமார் 40 இடங்களில் இருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பிரமுகர்களே, முக்கிய துறைமுகங்களுடன் தொடர்புடைய மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்களே, உயர் அதிகாரிகளே, இதர முக்கிய விருந்தினர்களே, எனது அன்பான சகோதர, சகோதரிகளே வணக்கம்!!குஜராத்தின் பாவ்நகரில் 'கடலில் இருந்து வளம்' என்ற நிகழ்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார் - ₹34,200 கோடிக்கும் அதிக மதிப்புள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்
September 20th, 10:30 am
குஜராத்தின் பாவ்நகரில் இன்று (20.09.2025) ₹34,200 கோடிக்கும் அதிக மதிப்புள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 'சமுத்திர சே சம்ரிதி' எனப்படும் கடலில் இருந்து வளம் என்ற நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை, நாடு முழுவதும் சேவை இயக்கம் நடைபெறுவதை எடுத்துரைத்தார். கடந்த சில நாட்களில் குஜராத்தில் பல சேவை சார்ந்த நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நூற்றுக்கணக்கான இடங்களில் ரத்த தான முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன எனவும் இவற்றில் இதுவரை ஒரு லட்சம் பேர் ரத்த தானம் செய்துள்ளனர் என்றும் பிரதமர் கூறினார். ஏராளமான நகரங்களில் தூய்மை இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், லட்சக்கணக்கான மக்கள் அதில் தீவிரமாக பங்கேற்றுள்ளதாகவும் அவர் கூறினார். மாநிலம் முழுவதும் 30,000-க்கும் மேற்பட்ட சுகாதார முகாம்கள் நடைபெறுவதாகவும் பிரதமர் தெரிவித்தார். நாடு முழுவதும் சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் அவர் தனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தார்.‘உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுங்கள்’ – ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில், பிரதமர் மோடி சுதேசி பெருமையுடன் பண்டிகைகளைக் கொண்டாட வலியுறுத்துகிறார்.
August 31st, 11:30 am
இந்த மாத ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) உரையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய பாதுகாப்புப் படையினர் மற்றும் குடிமக்களுக்கு பிரதமர் மோடி மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் விளையாட்டு நிகழ்வுகள், சூரிய சக்தி, ‘ஆபரேஷன் போலோ’ மற்றும் இந்திய கலாச்சாரத்தின் உலகளாவிய பரவல் போன்ற முக்கியமான தலைப்புகளையும் அவர் தொட்டார். பண்டிகைக் காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதன் முக்கியத்துவத்தையும், தூய்மையைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் குடிமக்களுக்கு நினைவூட்டினார்.இந்தியா – ஜப்பான் பொருளாதார மன்றத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
August 29th, 11:20 am
உங்களில் பலரை நான் நன்றாக அறிவேன், குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த போதும், பிறகு தில்லியில் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகும், உங்களில் பலருடன் நான் நெருங்கிய நட்பு கொண்டுள்ளேன். இன்று உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.இந்தியா-ஜப்பான் பொருளாதார மன்றக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பு
August 29th, 11:02 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் திரு. ஷிகெரு இஷிபா ஆகியோர் ஆகஸ்ட் 29, 2025 அன்று டோக்கியோவில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் கெய்டன்ரென் [ஜப்பான் வணிக கூட்டமைப்பு] ஏற்பாடு செய்த இந்தியா-ஜப்பான் பொருளாதார மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தியா-ஜப்பான் வணிகத் தலைவர்கள் மன்றத்தின் தலைமை நிர்வாக அதிகாரிகள் உட்பட இந்தியா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த முன்னணி தொழில்துறை பிரமுகர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.குஜராத்தின் அகமதாபாத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் சுருக்கம்
August 25th, 06:42 pm
இன்று, நீங்கள் அனைவரும் உண்மையிலேயே ஒரு அருமையான சூழலை உருவாக்கியுள்ளீர்கள். இந்த லட்சக்கணக்கான மக்களின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் பெறுவது எனக்கு எவ்வளவு அதிர்ஷ்டம். நான் உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும், அது ஒருபோதும் போதாதுகுஜராத்தின் அகமதாபாத்தில் ரூ.5,400 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்
August 25th, 06:15 pm
குஜராத்தின் அகமதாபாத்தில் ரூ.5,400 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், விநாயகர் சதுர்த்தியின் உற்சாகத்தில் ஒட்டுமொத்த நாடும் மூழ்கியிருப்பதாகக் குறிப்பிட்டார். விநாயகரின் ஆசிகளுடன், குஜராத்தின் முன்னேற்றம் சார்ந்த பல வளர்ச்சித் திட்டங்களின் மங்களகரமான தொடக்கத்தை குறிக்கிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். மக்களின் காலடியில் பல திட்டங்களை அர்ப்பணிக்கும் பாக்கியம் தனக்கு கிடைத்துள்ளதாகவும், இந்த வளர்ச்சி சார்ந்த முயற்சிகளுக்காக அனைத்து குடிமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.எகனாமிக் டைம்ஸ் உலகத் தலைவர்கள் மன்றக் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
August 23rd, 10:10 pm
உலகத் தலைவர்கள் மன்றக் கூட்டத்திற்கு வந்துள்ள அனைத்து விருந்தினர்களையும் வரவேற்கிறேன். இந்த கூட்டம் நடத்தப்படும் நேரம் மிகவும் சரியானது. எனவே நான் அதைப் பாராட்டுகிறேன். கடந்த வாரம்தான், செங்கோட்டையிலிருந்து அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களைப் பற்றிப் பேசினேன். இப்போது இந்த மன்றம் அந்த உணர்வின் பலத்தைப் பெருக்குவதாகச் செயல்படுகிறது.புது தில்லியில் நடைபெற்ற எகனாமிக் டைம்ஸ் உலகத் தலைவர்கள் மன்றக் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
August 23rd, 05:43 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று புதுதில்லியில் நடைபெற்ற எகனாமிக் டைம்ஸ் உலகத் தலைவர்கள் மன்றக் கூட்டத்தில் உரையாற்றினார். இந்த நிகழ்வில், உலகத் தலைவர்கள் மன்றத்தில் கலந்து கொண்ட அனைத்து சிறப்பு விருந்தினர்களையும் பிரதமர் வரவேற்றார். இந்த மன்றக் கூட்டத்தை நடத்த மிகவும் சரியான நேரம் என்று குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, இதற்காக ஏற்பாட்டாளர்களைப் பாராட்டினார். கடந்த வாரம் தான் செங்கோட்டையில் இருந்து அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் குறித்துப் பேசியதை அவர் எடுத்துரைத்தார். மேலும் இந்த மன்றம் இப்போது அந்த உணர்வைப் பெருக்கும் சக்தியாகச் செயல்படுகிறது என்றும் அவர் கூறினார்.100 ஜிகாவாட் சூரிய மின்னுற்பத்தி திறனை எட்டியதற்காகவும், தூய்மையான எரிசக்தியைப் பரவலாக்கும் முயற்சிகளில் இந்தியா தன்னிறைவை நோக்கி முன்னேறுவதற்கும் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்
August 13th, 08:48 pm
100 ஜிகாவாட் சூரிய மின்னுற்பத்தி திறனை அடைந்ததற்காகவும், தூய்மையான எரிசக்தியைப் பிரபலப்படுத்தும் முயற்சிகளில் இந்தியா தன்னிறைவை நோக்கி முன்னேறுவதற்காகவும் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பாராட்டு தெரிவித்துள்ளார்.புதுதில்லி கடமைப்பாதையில் கடமை மாளிகை தொடக்க நிகழ்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
August 06th, 07:00 pm
மத்திய அமைச்சரவையின் சகாக்களே, மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்களே, அரசு ஊழியர்களே, சிறப்பு விருந்தினர்களே, பெரியோர்களே, தாய்மார்களே!பிரதமர் திரு. நரேந்திர மோடி, புதுதில்லியில் உள்ள கடமைப் பாதையில் நடைபெற்ற கடமை மாளிகையின் திறப்பு விழாவில் உரையாற்றினார்
August 06th, 06:30 pm
புதுதில்லியில் உள்ள கடமைப் பாதையில் இன்று நடைபெற்ற கடமை மாளிகை -3-ன் திறப்பு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வில் பேசிய அவர், ஆகஸ்ட் 15-ம் தேதிக்கு முன்னதாக ,புரட்சி மாதமான ஆகஸ்ட், மற்றொரு வரலாற்று மைல்கல்லைக் கொண்டு வந்துள்ளது என்று குறிப்பிட்டார். நவீன இந்தியாவை உருவாக்குவதில் தொடர்புடைய முக்கிய சாதனைகளை இந்தியா ஒன்றன் பின் ஒன்றாகக் காண்கிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். புதுதில்லியைப் பற்றி குறிப்பிட்டு, கடமைப் பாதை, புதிய நாடாளுமன்றக் கட்டிடம், புதிய பாதுகாப்பு அலுவலக வளாகம், பாரத மண்டபம், யசோபூமி, தியாகிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தேசிய போர் நினைவுச்சின்னம், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலை மற்றும் இப்போது கடமை மாளிகை போன்ற சமீபத்திய உள்கட்டமைப்பு அடையாளங்களை திரு மோடி பட்டியலிட்டார். இவை வெறும் புதிய கட்டிடங்கள் அல்லது வழக்கமான உள்கட்டமைப்பு அல்ல என்பதை வலியுறுத்திய பிரதமர், அமிர்த காலத்தில், வளர்ந்த இந்தியாவை வடிவமைக்கும் கொள்கைகள் இந்தக் கட்டமைப்புகளிலேயே வகுக்கப்படும் என்றும், வரும் தசாப்தங்களில், இந்த இடங்களிலிருந்தே நாட்டின் பாதை தீர்மானிக்கப்படும் என்றும் கூறினார். கடமை மாளிகையின் திறப்பு விழாவிற்காக அனைத்து குடிமக்களுக்கும் அவர் வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, அதன் கட்டுமானத்தில் ஈடுபட்ட பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.வேலை வாய்ப்புத் திருவிழாவின் கீழ் 51,000- க்கும் மேற்பட்டோருக்குப் பணி நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
July 12th, 11:30 am
மத்திய அரசில் இளைஞர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான எங்கள் இயக்கம் சீராகத் தொடர்கிறது. பரிந்துரை இல்லை, ஊழல் இல்லை. இன்று, 51,000 க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற வேலைவாய்ப்புத் திருவிழாக்கள் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏற்கெனவே மத்திய அரசுத் துறைகளில் நிரந்தர வேலைகளைப் பெற்றுள்ளனர். இந்த இளைஞர்கள் இப்போது தேசத்தைக் கட்டியெழுப்புவதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறார்கள். இன்று, உங்களில் பலர் இந்திய ரயில்வேயில் உங்கள் பொறுப்புகளைத் தொடங்கியுள்ளீர்கள். சிலர் இப்போது பாதுகாப்பு துறையில் இணைந்து நாட்டின் பாதுகாவலர்களாக மாறுகிறீர்கள். அஞ்சல் துறையில் நியமிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் அரசு சேவைகளை வழங்க உதவுவார்கள். சிலர் அனைவருக்கும் சுகாதாரம் என்ற திட்டத்தில் பங்களிப்பை வழங்குவார்கள். பல இளம் தொழில் வல்லுநர்கள் நிதி சேர்க்கையை விரைவுபடுத்த உதவுவார்கள். மற்றவர்கள் இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சியை முன்னோக்கி நகர்த்துவார்கள். உங்கள் துறைகள் வேறுபட்டிருக்கலாம், ஆனால் இலக்கு ஒன்றுதான். அந்த இலக்கு என்ன? நாம் அதை மீண்டும் மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும். துறை, பணி, பதவி அல்லது பிராந்தியம் எதுவாக இருந்தாலும் ஒரே குறிக்கோள் தேசத்திற்கு சேவை செய்வதே. வழிகாட்டும் கொள்கை என்பது மக்களே முதன்மையானவர்கள் என்பதாகும். நாட்டு மக்களுக்கு சேவை செய்ய உங்களுக்கு ஒரு சிறந்த தளம் வழங்கப்பட்டுள்ளது. வாழ்க்கையின் ஒரு முக்கியமான கட்டத்தில் இந்த பெரிய வெற்றியை அடைந்ததற்காக உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். உங்கள் வாழ்க்கையில் இந்த புதிய பயணத்திற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பிரதமர் திரு. நரேந்திர மோடி வேலைவாய்ப்பு திருவிழாவில் உரையாற்றினார்
July 12th, 11:00 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வேலைவாய்ப்பு திருவிழாவில் உரையாற்றினார். மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞர்களுக்கு இன்று காணொலி மூலம் 51,000க்கும் மேற்பட்ட பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார். கூட்டத்தில் உரையாற்றிய அவர், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இந்த இளைஞர்களுக்கு புதிய பொறுப்புகள் இன்று தொடங்குகின்றன என்று கூறினார். பல்வேறு துறைகளில் தங்கள் சேவையைத் தொடங்கிய இளைஞர்களை அவர் வாழ்த்தினார். இளைஞர்களுக்கு வெவ்வேறு பொறுப்புகள் இருந்தபோதிலும், அவர்களின் பொதுவான குறிக்கோள் முதலில் குடிமகன் என்ற கொள்கையால் வழிநடத்தப்படும் தேசிய சேவை என்பதை அவர் வலியுறுத்தினார்.வளர்ச்சியடைந்த வேளாண் சங்கல்ப இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் காணொலி மூலம் ஆற்றிய உரை
May 29th, 06:45 pm
இன்று, ஜெகநாதரின் ஆசியுடன், நாட்டின் விவசாயிகளுக்காக ஒரு பெரிய இயக்கம் தொடங்கப்படுகிறது. வளர்ச்சியடைந்த வேளாண் சங்கல்ப இயக்கம் என்பது ஒரு தனித்துவமான முயற்சியாகும். பருவமழை நெருங்கி வருகிறது, காரீஃப் பருவத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அடுத்த 12 முதல் 15 நாட்களில், விஞ்ஞானிகள், நிபுணர்கள், அதிகாரிகள் மற்றும் முற்போக்கான விவசாயிகள் அடங்கிய 2,000க்கும் மேற்பட்ட குழுக்கள் நாடு முழுவதும் உள்ள கிராமங்களுக்குச் செல்ல உள்ளன. இந்தக் குழுக்கள் 700-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகளைச் சந்திக்க உள்ளனர். இந்தப் பிரமாண்டமான இயக்கம், இந்த லட்சியத் திட்டம் மற்றும் இந்திய விவசாயத்தின் அடித்தளமாக பிரகாசமான எதிர்காலம் ஆகியவற்றுக்காக நாட்டின் அனைத்து விவசாயிகளுக்கும், இந்தக் குழுக்களின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பிரதமர் திரு. நரேந்திர மோடி வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றினார்
May 29th, 06:44 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்க நிகழ்ச்சியில் உரையாற்றினார். இந்த இயக்கம் தொடங்கப்பட்டிருப்பது, விவசாயிகளுக்கான ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி என்றும், வேளாண் வளர்ச்சியை ஆதரிப்பதற்கான ஒரு தனித்துவமான முயற்சி என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார். பருவமழை நெருங்கி, வருவதுடன் காரீஃப் பருவத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கும் வேளையில், அடுத்த 12 முதல் 15 நாட்களில், விஞ்ஞானிகள், நிபுணர்கள், அதிகாரிகள் மற்றும் முற்போக்கான விவசாயிகள் அடங்கிய 2000 குழுக்கள் 700க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்குப் பயணம் செய்து கிராமங்கள் முழுவதும் லட்சக் கணக்கான விவசாயிகளைச் சென்றடையும் என்று பிரதமர் எடுத்துரைத்தார். இந்தியாவின் விவசாயத் துறையை வலுப்படுத்துவதற்கான அவர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டி, அனைத்து விவசாயிகளுக்கும், இந்தக் குழுக்களின் பங்கேற்பாளர்களுக்கும் அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.குஜராத் மாநிலம் புஜ் பகுதியில் வளர்ச்சிப்பணிகள் தொடக்க நிகழ்வில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
May 26th, 05:00 pm
குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகா திரு மனோகர் லால் அவர்களே, அமைச்சரவையின் இதர உறுப்பினர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டப்பேரவை உறுப்பினர்களே, இதர மதிப்பிற்குரிய பிரமுகர்களே, கட்ச் பகுதியின் எனதருமை சகோதர, சகோதரிகளே!குஜராத்தின் புஜ்ஜில் சுமார் ரூ.53,400 கோடி மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார்
May 26th, 04:45 pm
குஜராத்தின் புஜ்ஜில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி சுமார் ரூ.53,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்தவற்றைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். கூட்டத்தில் உரையாற்றிய அவர், கட்ச் மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். புரட்சியாளர்கள் மற்றும் தியாகிகளுக்கு, குறிப்பாக தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் திரு. ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவுக்கு மரியாதை செலுத்தினார். கட்ச்சின் மகன்கள் மற்றும் மகள்களுக்கு அவர்களின் உறுதிப்பாடு மற்றும் பங்களிப்புகளை பிரதமர் விவரித்தார்.