The inauguration of Micron’s semiconductor facility marks a milestone in India’s journey towards technology leadership: PM Modi in Sanand, Gujarat
February 28th, 02:45 pm
During the inauguration of the Micron ATMP facility in Sanand, Gujarat, PM Modi said that India is now rapidly strengthening its identity in the hardware sector. He highlighted the project’s rapid progress and emphasized that the facility is a testament to the robust India-US partnership. He expressed confidence that the Micron facility would anchor a new semiconductor ecosystem in the country and asserted that India is ready, reliable and delivers.குஜராத் மாநிலம் சனந்தில் செமிகண்டக்டர் தொழிற்சாலையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
February 28th, 02:37 pm
குஜராத் மாநிலம் சனந்தில் மைக்ரான் ஏடிஎம்பி (சேர்த்தல், பரிசோதித்தல், குறியிடுதல், பேக்கிங் செய்தல்) தொழிற்சாலையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். உலகளாவிய தொழில்நுட்ப தலைமையை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல் கல்லாக வணிக உற்பத்தி தொடங்கும் இந்த நிகழ்வு அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.ஜெருசலேமில் தொழில்நுட்பக் கண்காட்சியைப் பிரதமர் பார்வையிட்டார்
February 26th, 10:37 am
இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து, பிப்ரவரி 25, 2026 அன்று பல்வேறு துறைகளில் சிறப்பான இஸ்ரேலிய கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தும் கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் வேளாண் தொழில்நுட்பம், நீர் தொழில்நுட்பம், பருவநிலை தொழில்நுட்பம், சுகாதார-உயிரி தொழில்நுட்ப, நவீன போக்குவரத்து, செயற்கை நுண்ணறிவு, இணையதள பாதுகாப்பு, குவாண்டம் தொழில்நுட்பம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற முன்னணி நிறுவனங்களும், ஆராய்ச்சி நிறுவனங்களும் தங்களது தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தி இருந்தன.‘இந்தியா சிப் லிமிடெட்’ நிறுவனத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
February 21st, 05:30 pm
உத்தரப் பிரதேச முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத் அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சகாவான திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, திரு.ஜிதின் பிரசாதா அவர்களே, உத்தரப் பிரதேச அரசின் அமைச்சர்களே, ஃபாக்ஸ்கான் செமிகண்டக்டர் நிறுவனத்தின் வர்ததக குழும தலைவர் திரு. பாப் சென், ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் தலைவர் திரு. ரோஷ்னி நாடார் அவர்களே, இந்தத் திட்டத்தில் பங்கேற்றுள்ள தொழில்துறை தலைவர்கள், இதர முக்கியப் பிரமுகர்கள், பெரியோர்களே, தாய்மார்களே!உத்தரப்பிரதேசத்தில் ஹெச்சிஎல்-ஃபாக்ஸ்கான் செமிகண்டக்டர் ஆலையின் அடிக்கல் நாட்டு விழாவில் காணொளி காட்சி வாயிலாக பிரதமர் பங்கேற்றார்
February 21st, 05:00 pm
உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஹெச்சிஎல்-ஃபாக்ஸ்கான் செமிகண்டக்டர் ஆலையின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றார். புதுதில்லியில் நடைபெற்ற உலகளாவிய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, உலகளாவிய செமிகண்டக்டர் மையமாக மாறுவதற்கான இந்தியாவின் பயணத்தில் இந்த விழா ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கிறது.மகாராஷ்டிராவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
October 09th, 01:09 pm
மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களே, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சக ஊழியர்களே, மகாராஷ்டிர துணை முதலமைச்சர்கள் திரு தேவேந்திர ஃபட்னவிஸ் அவர்களே, திரு அஜித் பவார் அவர்களே, இதர பிரமுகர்களே, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த எனதருமை சகோதர, சகோதரிகளேமகாராஷ்டிராவில் ரூ.7,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்
October 09th, 01:00 pm
மகாராஷ்டிர மாநிலத்தில் ரூ.7,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (09.10.2024) காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். நாக்பூரில் உள்ள டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சர்வதேச விமான நிலைய மேம்பாட்டுக்கு அடிக்கல் நாட்டுதல், ஷீரடி விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடம் ஆகியவை இன்று மேற்கொள்ளப்பட்ட திட்டப் பணிகளில் அடங்கும். மகாராஷ்டிராவில் 10 அரசு மருத்துவக் கல்லூரிகளின் செயல்பாட்டையும் தொடங்கி வைத்த திரு நரேந்திர மோடி, மும்பையில் இந்திய திறன் நிறுவனத்தையும், மகாராஷ்டிர மாநிலத்தில் கல்வி ஆராய்ச்சி மையத்தையும் தொடங்கி வைத்தார்.ஜி.பி.ஏ.ஐ உச்சி மாநாடு, 2023 தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
December 12th, 05:20 pm
எனது அமைச்சரவை சகாவான அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, ராஜீவ் சந்திரசேகர் அவர்களே, ஜி.பி.ஏ.ஐ.யின் பொறுப்பில் இருந்து விலகும் தலைவர், ஜப்பான் அமைச்சர் ஹிரோஷி யோஷிதா அவர்களே, உறுப்பு நாடுகளின் பிற அமைச்சர்கள், பிற பிரமுகர்கள், பெண்கள் மற்றும் பெருமக்களே! வணக்கம்!செயற்கை நுண்ணறிவு குறித்த உலகளாவிய கூட்டாண்மை ஆண்டு உச்சி மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்
December 12th, 05:00 pm
புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்த உலகளாவிய கூட்டாண்மை (ஜிபிஏஐ) உச்சி மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். உலகளாவிய செயற்கை நுண்ணறிவு கண்காட்சியிலும் பிரதமர் கலந்து கொண்டார். ஜி.பி.ஏ.ஐ என்பது 29 உறுப்பு நாடுகளைக் கொண்ட தொடர்புடையோர் இணைந்த முன்முயற்சியாகும். இது செயற்கை நுண்ணறிவு தொடர்பான முன்னுரிமைகளில் அதிநவீன ஆராய்ச்சி மற்றும் பயன்பாட்டு நடவடிக்கைகளை ஆதரிப்பதன் மூலம் செயற்கை நுண்ணறிவில் கோட்பாடு மற்றும் நடைமுறைக்கு இடையிலான இடைவெளியை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் ஜி.பி.ஏ.ஐ.யின் முன்னணி தலைவராக இந்தியா உள்ளது.7-வது இந்திய மொபைல் மாநாடு தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 27th, 10:56 am
இந்தியா மொபைல் மாநாட்டின் ஏழாவது பதிப்பில் உங்களுடன் பங்கேற்பது ஒரு மகிழ்ச்சியான அனுபவம். 21-ஆம் நூற்றாண்டின் வேகமாக மாறிவரும் உலகில், இந்த நிகழ்வு லட்சக் கணக்கானவர்களின் இயங்குநிலையை மாற்றும் சக்தியைக் கொண்டுள்ளது. ஒரு காலத்தில் நாம் எதிர்காலத்தைப் பற்றிப் பேசினோம், அது அடுத்த தசாப்தம் அல்லது 20-30 ஆண்டுகளுக்குப் பிறகு அல்லது அடுத்த நூற்றாண்டைக் குறிக்கிறது. ஆனால், இன்று, ஒவ்வொரு நாளும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள விரைவான மாற்றங்களால், ‘எதிர்காலம், இங்கேயும், இப்போதும் உள்ளது’ என்று சொல்கிறோம். தொலைத்தொடர்பு, தொழில்நுட்பம், இணைப்பு, 6ஜி, செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு, குறைக்கடத்திகள், ட்ரோன்கள், விண்வெளித் துறை, ஆழ்கடல் ஆய்வு, பசுமை தொழில்நுட்பம் அல்லது பிற துறைகளாக இருந்தாலும், வரவிருக்கும் காலம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். இளைய தலைமுறையினர் நாட்டின் எதிர்காலத்தை வழிநடத்துகிறார்கள், நமது தொழில்நுட்ப புரட்சியை வழிநடத்துகிறார்கள் என்பது நம் அனைவருக்கும் மகிழ்ச்சியான விஷயம்.7-வது இந்திய மொபைல் மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்
October 27th, 10:35 am
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 7-வது இந்தியா மொபைல் மாநாடு 2023-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (27.10.2023) தொடங்கி வைத்தார். இந்திய மொபைல் மாநாடு (ஐஎம்சி) என்பது ஆசியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு, ஊடக மற்றும் தொழில்நுட்பக் கூட்டமைப்பாகும். இந்த மாநாடு 2023 அக்டோபர் 27 முதல் 29 வரை 'உலகளாவிய டிஜிட்டல் கண்டுபிடிப்பு' என்ற கருப்பொருளுடன் நடைபெறுகிறது. ஐஎம்சி 2023 முக்கிய அதிநவீன தொழில்நுட்பங்களின் மேம்பாடு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு 100 '5ஜி பயன்பாட்டு ஆய்வகங்களை பிரதமர் வழங்கினார்.With 5G, India is setting a global standard in telecom technology: PM Modi
October 01st, 07:06 pm
Ushering in a new technological era, PM Modi launched 5G services during 6th India Mobile Congress at Pragati Maidan in New Delhi. He said, New India will not remain a mere consumer of technology, but India will play an active role in the development and implementation of that technology.PM Modi inaugurates 6th India Mobile Congress at Pragati Maidan, New Delhi
October 01st, 12:05 pm
Ushering in a new technological era, PM Modi launched 5G services during 6th India Mobile Congress at Pragati Maidan in New Delhi. He said, New India will not remain a mere consumer of technology, but India will play an active role in the development and implementation of that technology.குஜராத்தில் 11-வது விளையாட்டு மகா கும்பமேளா தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
March 12th, 06:40 pm
குஜராத்தின் ஆளுனர் ஆச்சாரிய தேவ்வ்ரத் அவர்களே, மாநிலத்தின் முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் அவர்களே, எனது நாடாளுமன்ற சகாவும், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவருமான சி.ஆர்.பாட்டீல் அவர்களே, குஜராத்தின் விளையாட்டுக்கள் துறை இணையமைச்சர் திரு.ஹர்ஷ் சிங்வி அவர்களே, எனது நாடாளுமன்ற சகாக்கள் திரு.ஹஷ்முக் பாய் பட்டேல், திரு.நர்ஹரி அமீன், அகமதாபாத் மேயர் திரு.கிரித் குமார் பார்மர் அவர்களே, இதர பிரமுகர்களே, குஜராத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வந்துள்ள எனது இளம் நண்பர்களே!11-வது விளையாட்டு மகாகும்பமேளாவை பிரதமர் தொடங்கி வைத்தார்
March 12th, 06:30 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி அகமதாபாத்தில் 11-வது விளையாட்டு மகாகும்பமேளாவை தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில், குஜராத் மாநில ஆளுநர் ஆச்சார்ய தேவவிரத், முதலமைச்சர் திரு பூபேந்திர பட்டேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.புனே, சிம்பியோசிஸ் பல்கலைக்கழகத்தின் பொன் விழா தொடக்க நிகழ்வில் பிரதமர் உரையின் தமிழாக்கம்
March 06th, 05:17 pm
மகாராஷ்டிர ஆளுனர் திரு.பகத் சிங் கோஷியாரி அவர்களே, திரு.தேவேந்திர ஃபட்னவிஸ் அவர்களே, திரு.சுபாஷ் தேசாய் அவர்களே, இந்தப் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் தலைவர் பேராசிரியர் எஸ்.பி.மஜூம்தார் அவர்களே, முதன்மை இயக்குனர் டாக்டர் வித்யா எராவ்டேகர் அவர்களே, அனைத்துத் துறைகளின் உறுப்பினர்களே, சிறப்பு விருந்தினர்களே, எனது இளம் நண்பர்களே!புனே சிம்பயாசிஸ் பல்கலைக்கழகத்தின் பொன்விழா கொண்டாட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்
March 06th, 01:36 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று புனேயில் சிம்பயாசிஸ் பல்கலைக் கழகத்தின் பொன்விழா கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார். சிம்பயாசிஸ் ஆரோக்கிய வளாகத்தையும் அவர் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மகாராஷ்டிர மாநில ஆளுநர் திரு. பகத் சிங் கோஷ்யாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.டென்மார்க் பிரதமர் வருகையின் போது பரிமாறிக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / ஒப்பந்தங்களின் பட்டியல்
October 09th, 03:54 pm
டென்மார்க் பிரதமர் வருகையின் போது பரிமாறிக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / ஒப்பந்தங்களின் பட்டியல்டென்மார்க் பிரதமர் மேன்மைமிகு திருமிகு மெட்டே ஃபிரடெரிக்சன்னுடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரையின் மொழிபெயர்ப்பு
October 09th, 01:38 pm
கொரோனா பெருந்தொற்று தொடங்குவதற்கு முன்பு, அரசு தலைவர்களின் வரவேற்புக்கு சாட்சியாக இந்த ஹைதராபாத் மாளிகை விளங்கியது. கடந்த 18-20 மாதங்களாக இந்த நடைமுறை நிறுத்தப்பட்டது. டேனிஷ் பிரதமரின் வருகையுடன் இன்று ஒரு புதிய தொடக்கம் உருவாகியிருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.கோவின் உலகளாவிய உச்சிமாநாடு 2021-இல் பிரதமரின் உரை
July 05th, 03:08 pm
கொவிட்-19 தொற்றுக்கு எதிரான நமது போராட்டத்தில் தொழில்நுட்பம் ஒருங்கிணைந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக, மென்பொருள் என்பது வள கட்டுப்பாடுகள் இல்லாத ஒரு துறை. அதனால் தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமானதால் எங்கள் கோவிட் தடமறிதல் மற்றும் கண்காணிப்பு செயலியை திறந்த ஆதாரமாக மாற்றினோம். சுமார் 200 மில்லியன் பயன்பாட்டாளர்களுடன், இந்த ‘ஆரோக்கிய சேது' செயலி, மேம்பாட்டாளர்களுக்கான தயார்நிலையிலான தொகுப்பாக விளங்குகிறது.