'மன் கீ பாத்' (மனதின் குரல்) என்பது மக்களின் கூட்டு முயற்சிகளை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்ல ஒரு சிறந்த தளமாகும்: பிரதமர் மோடி
November 30th, 11:30 am
இந்த மாத 'மன் கீ பாத்'தில் (மனதின் குரல்), அரசியலமைப்பு தின கொண்டாட்டங்கள், வந்தே மாதரத்தின் 150வது ஆண்டு நிறைவு, அயோத்தியில் தர்ம த்வஜ் ஏற்றுதல், ஐஎன்எஸ் 'மஹே' கப்பல் அறிமுகம் மற்றும் குருக்ஷேத்திராவில் சர்வதேச கீத மஹோத்சவம் உள்ளிட்ட நவம்பர் மாதத்தின் முக்கிய நிகழ்வுகளை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். உணவு தானியங்கள் மற்றும் தேன் உற்பத்தியில் சாதனை, இந்தியாவின் விளையாட்டு வெற்றிகள், அருங்காட்சியகங்கள் மற்றும் இயற்கை விவசாயம் போன்ற பல முக்கிய கருப்பொருள்களையும் அவர் தொட்டார். காசி-தமிழ் சங்கமத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.'வந்தே மாதரம்' என்ற பாடலின் உணர்வு இந்தியாவின் அழியாத உணர்வுடன் இணைக்கப்பட்டுள்ளது: ‘மன் கீ பாத்’தில் (மனதின் குரல்) பிரதமர் மோடி
October 26th, 11:30 am
இந்த மாத ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) உரையில், அக்டோபர் 31 அன்று சர்தார் படேலின் 150வது பிறந்தநாளில் பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். சத் பூஜை விழா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இந்திய நாய் இனங்கள், இந்திய காபி, பழங்குடி சமூகத் தலைவர்கள் மற்றும் சமஸ்கிருத மொழியின் முக்கியத்துவம் போன்ற சுவாரஸ்யமான தலைப்புகளையும் அவர் தொட்டார். 'வந்தே மாதரம்' பாடலின் 150வது ஆண்டு விழா குறித்து பிரதமர் சிறப்புரையாற்றினார்.NDA freed Bihar from Naxalism and Maoist terror — now you can live and vote fearlessly: PM Modi in Begusarai
October 24th, 12:09 pm
Addressing a massive public rally in Begusarai, PM Modi stated, On one side, there is the NDA, an alliance with mature leadership, and on the other, there is the 'Maha Lathbandhan'. He highlighted that nearly 90% of purchases in the country are of Swadeshi products, benefiting small businesses. The PM remarked that the NDA has freed Bihar from Naxalism and Maoist terror, and that every vote of the people of Bihar will help build a peaceful, prosperous state.We’re connecting Bihar’s heritage with employment, creating new opportunities for youth: PM Modi in Samastipur
October 24th, 12:04 pm
Ahead of the Bihar Assembly elections, PM Modi kickstarted the NDA’s campaign by addressing a grand public meeting in Samastipur, Bihar. He said, “The trumpet of the grand festival of democracy has sounded. The entire Bihar is saying, ‘Phir Ek Baar NDA Sarkar!’” Remembering Bharat Ratna Jan Nayak Karpoori Thakur ji, the PM said, “It is only due to his blessings that people like us, who come from humble and backward families, are able to stand on this stage today.”PM Modi addresses enthusiastic crowds in Bihar’s Samastipur and Begusarai
October 24th, 12:00 pm
Ahead of the Bihar Assembly elections, PM Modi kickstarted the NDA’s campaign by addressing massive gatherings in Samastipur and Begusarai, Bihar. He said, “The trumpet of the grand festival of democracy has sounded. The entire Bihar is saying, ‘Phir Ek Baar NDA Sarkar!’” Remembering Bharat Ratna Jan Nayak Karpoori Thakur ji, the PM remarked, “It is only due to his blessings that people like us, who come from humble and backward families, are able to stand on this stage today.”‘உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுங்கள்’ – ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில், பிரதமர் மோடி சுதேசி பெருமையுடன் பண்டிகைகளைக் கொண்டாட வலியுறுத்துகிறார்.
August 31st, 11:30 am
இந்த மாத ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) உரையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய பாதுகாப்புப் படையினர் மற்றும் குடிமக்களுக்கு பிரதமர் மோடி மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் விளையாட்டு நிகழ்வுகள், சூரிய சக்தி, ‘ஆபரேஷன் போலோ’ மற்றும் இந்திய கலாச்சாரத்தின் உலகளாவிய பரவல் போன்ற முக்கியமான தலைப்புகளையும் அவர் தொட்டார். பண்டிகைக் காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதன் முக்கியத்துவத்தையும், தூய்மையைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் குடிமக்களுக்கு நினைவூட்டினார்.This is the right time to Create In India, Create For The World: PM Modi at WAVES Summit
May 01st, 03:35 pm
At the inaugural address of WAVES 2025, PM Modi called it a landmark moment for the global creative community. He emphasized that the summit unites over 100 nations through storytelling, music, gaming, and innovation, showcasing India's leadership in culture and creativity.பிரதமர் திரு நரேந்திர மோடி வேவ்ஸ் 2025 உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார்
May 01st, 11:15 am
மும்பையில் உள்ள ஜியோ உலக மையத்தில் இந்தியாவின் முதலாவது உலக ஒலி, ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மகாராஷ்டிரா தினம் மற்றும் குஜராத் மாநில தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்தார். அனைத்து சர்வதேச பிரமுகர்கள், தூதர்கள் மற்றும் படைப்பாற்றல் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் வந்திருப்பதை குறிப்பிட்ட பிரதமர், இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் கலைஞர்கள், புதுமைப் படைப்பாளர்கள், முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோர் திறமையையும், படைப்பாற்றலையும் கொண்ட உலகளாவிய அமைப்புக்கு அடித்தளம் அமைக்க ஒன்றிணைந்துள்ளனர் என்று அவர் கூறினார். வேவ்ஸ் என்பது ஒரு சுருக்கப்பெயர் மட்டுமே அல்ல என்றும், இது கலாச்சாரம், படைப்பாற்றல் மற்றும் உலகளாவிய தொடர்பைக் குறிக்கும் ஒரு அலை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் இந்த உச்சிமாநாடு திரைப்படங்கள், இசை, கேமிங், அனிமேஷன், கதைசொல்லல் ஆகியவற்றின் விரிவான உலகத்தை எடுத்துக்காட்டுகிறது என்று அவர் தெரிவித்தார். கலைஞர்கள் மற்றும் படைப்பாளர்களை ஒருங்கிணைக்கவும் ஒத்துழைத்து செயல்படவும் உலகளாவிய தளத்தை இது வழங்குகிறது என அவர் கூறினார். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனைவரையும் பாராட்டிய பிரதமர், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள சிறப்பு விருந்தினர்களை அன்புடன் வரவேற்றார்.வளர்ச்சியடைந்த இந்தியாவை வடிவமைப்பதில் தலைசிறந்த பெண்களின் பங்களிப்புகளைப் பிரதமர் கொண்டாடினார்
March 08th, 11:54 am
சர்வதேச மகளிர் தினத்தன்று, பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்து வரும் பெண்களுக்கு தனது சமூக ஊடக தளங்களை ஒப்படைப்பதன் மூலம், இந்தியா முழுவதும் பெண்களின் மகத்தான பங்களிப்புகளைக் கொண்டாடுவதில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண் சாதனையாளர்களிடம் தமது சமூக ஊடக தளங்களின் நிர்வாகத்தைப் பிரதமர்
March 08th, 11:26 am
பெண்களின் சக்திக்கும் சாதனைகளுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது சமூக ஊடக தளங்களை நிர்வகிக்கும் பொறுப்பை, பல்வேறு துறைகளில் முத்திரை பதித்துள்ள பெண்களுக்கு வழங்கியுள்ளார்.மனதின் குரல் நிகழ்ச்சியின் 119-வது அத்தியாயத்தில், 23.02.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 23rd, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் உங்களனைவரையும் வரவேற்கிறேன். இன்றைய நாட்களில் சேம்பியன்ஸ் கோப்பைக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து இடங்களிலும் கிரிக்கெட்டுக்கான சூழல் நிலவி வருகிறது. கிரிக்கெட்டில் சதம் அடிப்பதில் இருக்கும் புளகாங்கிதம் என்ன என்பதை நாம் அனைவருமே நன்கறிவோம். ஆனால் இன்று நான் உங்களனைவரிடத்திலும் கிரிக்கெட்டைப் பற்றியல்ல, பாரதம் விண்வெளியில் சதம் அடித்திருப்பதைப் பற்றி உரையாட இருக்கிறேன். கடந்த மாதம் தான் இஸ்ரோ விண்ணில் செலுத்திய 100ஆவது செயற்கைக்கோளின் சாட்சியாக தேசமே இருந்தது. இது வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல, மாறாக அன்றாடம் புதிய உச்சங்களைத் ஸ்பரிசிக்கும் நமது உறுதிப்பாட்டையும் அடையாளப்படுத்துகிறது. நமது விண்வெளிப்பயணப் பயணம் மிக எளிய முறையிலே தான் தொடங்கியது. இதிலே ஒவ்வோர் அடியிலும் சவால்கள் இருந்தன. ஆனால், நமது விஞ்ஞானிகள் வெற்றிக்கொடியை நாட்டியபடி தொடர்ந்து முன்னேறினார்கள். காலப்போக்கில் விண்வெளியின் இந்தப் பாய்ச்சலில் நமது வெற்றிகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகத் தொடங்கியது. ஏவுகலன் அமைப்பதாகட்டும், சந்திரயானின் வெற்றியாகட்டும், மங்கல்யானாகட்டும், ஆதித்ய எல்-1 அல்லது ஒரே ஒரு ஏவுகலன் மூலமாக, ஒரே முறையில், 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் வரலாறுகாணா செயல்பாடாகட்டும், இஸ்ரோவின் வெற்றித்தொடர் மிகவும் பெரியது. கடந்த பத்தாண்டுகளில் சுமார் 460 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றிலே மற்ற நாடுகளின் பல செயற்கைக்கோள்களும் அடங்கும். அண்மை ஆண்டுகளின் ஒரு பெரிய விஷயம் என்னவென்றால், விண்வெளி விஞ்ஞானிகள் கொண்ட நமது குழுவிலே பெண்சக்தியின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதுதான். இன்று விண்வெளித்துறை நமது இளைஞர்களுக்கு விருப்பமான ஒன்றாக ஆகியிருக்கிறது என்பது மிகுந்த உவகையை எனக்கு அளிக்கிறது. சில ஆண்டுகள் முன்பு வரை இந்தத் துறையில் ஸ்டார்ட் அப் குறித்தோ, தனியார் துறையின் விண்வெளி நிறுவனங்களின் எண்ணிக்கை பல நூற்றுக்கணக்காகும் என்றோ யார் தான் நினைத்தார்கள்!! வாழ்க்கையை விறுவிறுப்பான, சுவாரசியமான வகையில் அனுபவிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு, விண்வெளித்துறை ஒரு மிகச் சிறப்பான தேர்வாக ஆகி வருகிறது.தேர்வு தொடர்பான மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் வெற்றிகரமாக கடந்து வந்த தேர்வு வீரர்களின் அனுபவங்களைக் கேளுங்கள்: பிரதமர்
February 17th, 07:41 pm
தேர்வு தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வான தேர்வு குறித்த விவாதம் 2025-ன் சிறப்பு அத்தியாயம் 2025 பிப்ரவரி 18-ம் தேதி காலை 11 மணிக்கு ஒலிபரப்பாக உள்ளது. இதில் தேர்வு தொடர்பான மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் வெற்றிகரமாக கடந்து வந்த இளம் தேர்வு வீரர்கள் இடம் பெறுகின்றனர். தேர்வு தொடர்பான மன அழுத்தம், பதற்றம் ஆகியவற்றைக் கடந்து வந்த அவர்களின் அனுபவங்கள், உத்திகள், நுண்ணறிவுகள் ஆகியவற்றை இந்த அத்தியாயம் வெளிப்படுத்தும்.பாரத் டெக்ஸ் 2025 வர்த்தகக் கண்காட்சியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
February 16th, 04:15 pm
எனது அமைச்சரவை சகாக்கள் திரு கிரிராஜ் சிங் அவர்களே, திரு பபித்ர மார்கரிட்டா அவர்களே பல்வேறு நாடுகளின் மதிப்புமிகு துதர்களே, தூதரக மூத்த அதிகாரிகளே, மத்திய மாநில அரசு அதிகாரிகளே, ஆடை அலங்காரம் மற்றும் ஜவுளி உலகின் புகழ்பெற்ற ஆளுமைகளே, தொழில்முனைவோர்களே, மாணவர்களே, எனதருமை நெசவாளர்களே, கைவினைக் கலைஞர்களே, பெரியோர்களே, தாய்மார்களே!பாரத் டெக்ஸ் 2025 நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
February 16th, 04:00 pm
புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற பாரத் டெக்ஸ் 2025 நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், பாரத் டெக்ஸ் 2025-க்கு அனைவரையும் வரவேற்றார், இன்று பாரத் டெக்ஸின் 2-வது பதிப்பை பாரத் மண்டபம் காண்கிறது என்று குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சி நமது பாரம்பரியம், வளர்ச்சி அடைந்த பாரதத்தின் வாய்ப்புகள் குறித்த ஒரு பார்வையை அளிக்கிறது எனவும் இது இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும் என்றும் அவர் கூறினார். பாரத் டெக்ஸ் தற்போது ஒரு மெகா உலகளாவிய ஜவுளி நிகழ்வாக மாறி வருகிறது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். மதிப்புச் சங்கிலியுடன் தொடர்புடைய பன்னிரண்டு பிரிவுகளும் இந்த முறை நிகழ்வின் ஒரு பகுதியாக உள்ளன என்று அவர் கூறினார். உதிரிப்பாகங்கள், ஆடைகள், இயந்திரங்கள், ரசாயனங்கள், சாயங்களின் கண்காட்சிகளும் உள்ளன என்று அவர் மேலும் குறிப்பிட்டார். உலகெங்கிலும் உள்ள கொள்கை வகுப்பாளர்கள், தலைமை நிர்வாக அதிகாரிகள், தொழில்துறை தலைவர்களின் ஈடுபாடு, ஒத்துழைப்புக்கான வலுவான தளமாக பாரத் டெக்ஸ் மாறி வருவதை பிரதமர் எடுத்துரைத்தார். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதில் ஈடுபட்ட அனைவரின் முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.பிரதமர் மோடி மற்றும் டிரம்ப் இந்தியா-அமெரிக்க கூட்டாண்மையை உருவாக்கியுள்ளனர்
February 14th, 06:46 pm
பிரதம மந்திரி நரேந்திர மோடியின் சமீபத்திய அமெரிக்க விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான மூலோபாய, பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை பிரதிபலிக்கும் ஒரு முக்கியமான சந்தர்ப்பமாகும். அவர் தங்கியிருந்த காலத்தில், பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் இராஜதந்திரம் போன்ற முக்கியமான பகுதிகளை உள்ளடக்கிய அமெரிக்கத் தலைவர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் பிரதமர் மோடி தொடர்ச்சியான உயர்மட்ட சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். இந்த விஜயம் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வலுவான உறவை மீண்டும் உறுதிப்படுத்தியது, புதிய உலக ஒழுங்கை வடிவமைப்பதில் இரு நாடுகளையும் உலகளாவிய பங்காளிகளாக நிலைநிறுத்தியது.ஜம்மு காஷ்மீரில் சோன்மார்க் சுரங்கப்பாதை திறப்பு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
January 13th, 12:30 pm
துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா அவர்களே, ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் திரு உமர் அப்துல்லா அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களான திரு நிதின் கட்கரி அவர்களே, திரு ஜிதேந்திர சிங் அவர்களே, அஜய் தம்தா அவர்களே, துணை முதலமைச்சர் சுரேந்தர் குமார் சவுத்ரி அவர்களே, எதிர்க்கட்சித் தலைவர் சுனில் சர்மா அவர்களே, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த எனதருமை சகோதர, சகோதரிகளே.பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜம்மு காஷ்மீரில் உள்ள சோனமார்க் சுரங்கப்பாதையை திறந்து வைத்தார்
January 13th, 12:15 pm
ஜம்மு காஷ்மீரில் சோனமார்க் பகுதியில அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், ஜம்மு – காஷ்மீர் வளர்ச்சிக்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்டு தங்களது உயிரைப் பணயம் வைத்து பணியாற்றிய தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். சவால்கள் இருந்த போதிலும், உறுதியான அரசின் நடவடிக்கைகள் இத்திட்டத்தை நிறைவேற்றியுள்ளதாக பிரதமர் திரு மோடி குறிப்பிட்டார். தொழிலாளர்களின் உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு, தடைகளை சமாளித்து பணிகளை நிறைவேற்றியதற்காக அவர்களுக்கு பாராட்டுத் தெரிவித்தார். இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த 7 தொழிலாளர்களின் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.Politics is about winning people's hearts, says PM Modi in podcast with Nikhil Kamath
January 10th, 02:15 pm
Prime Minister Narendra Modi engages in a deep and insightful conversation with entrepreneur and investor Nikhil Kamath. In this discussion, they explore India's remarkable growth journey, PM Modi's personal life story, the challenges he has faced, his successes and the crucial role of youth in shaping the future of politics."பிரதமர் திரு நரேந்திர மோடி, தமது முதலாவது போட்காஸ்டில், தொழில்முனைவோர் நிகில் காமத்துடன் தமது வாழ்க்கைப் பாடங்களையும் லட்சியங்களையும் பகிர்ந்துள்ளார்"
January 10th, 02:00 pm
தொழில்முனைவோர் நிகில் காமத் உடனான தனது முதலாவது போட்காஸ்டில், பிரதமர் திரு நரேந்திர மோடி தமது குழந்தைப் பருவம், கல்வி மற்றும் அரசியல் வாழ்க்கையை வடிவமைத்த ஆரம்ப அனுபவங்கள் குறித்து மனம்திறந்து பேசியுள்ளார். இளம் தலைமுறையினரை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட போட்காஸ்ட், பிரதமரின் ஆரம்பகால வாழ்க்கை பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது. தமது ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு தோழர்கள் எவ்வாறு தம்மிடம் செல்வாக்கு செலுத்தினார்கள் என்பதையும், இந்த அனுபவங்கள் தேசம் முதலில் என்ற சித்தாந்தத்திற்கும் அவரது அர்ப்பணிப்புக்கும் எவ்வாறு அடித்தளம் அமைத்தன என்பதையும் அவர் விவரித்தார்.அரசியலமைப்புச் சட்டம் எங்களின் வழிகாட்டி வெளிச்சம்: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி
December 29th, 11:30 am
நண்பர்களே, அடுத்த மாதம் 13ஆம் தேதி முதல் பிரயாக்ராஜில் மகாகும்பமேளா நடைபெற இருக்கிறது. இந்த வேளையில், அங்கே சங்கமத்தின் கரையில் தடபுடலாக ஏற்பாடுகள் நடந்தேறி வருகின்றன. சில நாட்கள் முன்பாக நான் பிரயாக்ராஜ் சென்றிருந்த வேளையில், ஹெலிகாப்டர் மூலமாக மொத்த கும்பமேளாவும் நடைபெறவுள்ள இடத்தையும் பார்வையிட்ட போது மனதில் பெரும் நிறைவு உண்டானது. என்னவொரு விசாலம்!! என்னவொரு அழகு!! எத்தனை பிரும்மாண்டம்!! அடேயப்பா!!