Prime Minister pays homage to Thiru K. Kamaraj Ji on his birth anniversary

July 15th, 12:20 pm

Prime Minister Shri Narendra Modi today, paid homage to Thiru K. Kamaraj Ji on his birth anniversary, remembering him as a stalwart of India's freedom movement and an exceptional public figure who dedicated his life to nation-building. Shri Modi said that Thiru K. Kamaraj Ji's unwavering commitment to education, inclusive development and the welfare of the underprivileged continues to inspire generations.

Prime Minister condoles the passing of legendary playback singer S. Janaki Amma

July 12th, 09:33 am

The Prime Minister, Shri Narendra Modi, has expressed deep grief over the passing of distinguished playback singer S. Janaki Amma.

Prime Minister expresses grief over boat accident involving Indian nationals near Phu Quoc, Vietnam

July 11th, 06:31 pm

The Prime Minister, Shri Narendra Modi, has expressed deep grief over the tragic boat accident involving Indian nationals near Phu Quoc, Vietnam.

Prime Minister visits the UNESCO World Heritage Prambanan Temple Complex

July 08th, 01:46 pm

PM Modi and Indonesian President Prabowo Subianto visited the iconic UNESCO World Heritage site Prambanan Temple Complex in Indonesia. The two leaders unveiled a plaque marking the commencement of the ASI's conservation and restoration project at the temple complex. India’s support for the restoration of the Prambanan Temple reflects its enduring commitment to preserving shared civilizational heritage.

Prime Minister shares Sanskrit Subhashitam highlighting the strength of courage and resilience

July 08th, 07:48 am

PM Modi shared a Sanskrit Subhashitam emphasising that courage is a nation's greatest strength. He said steadfast resolve enables the country to remain united through challenges and continue progressing towards prosperity and self-reliance.

Prime Minister conferred ‘Bintang Adipurna of the Republic of Indonesia,’ the highest civilian award of the nation, by the President of Indonesia

July 07th, 03:27 pm

PM Modi was conferred the 'Bintang Adipurna of the Republic of Indonesia', the country's highest medal of honour, by Indonesian President Prabowo Subianto in recognition of his leadership and exceptional contribution to strengthening India-Indonesia relations. The PM dedicated the award to the people of India and Indonesia and to the enduring civilisational ties between the two countries.

பெரு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கெய்கோ ஃபுஜிமோரிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து

July 04th, 01:54 pm

பெரு நாட்டு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற திருமதி கெய்கோ ஃபுஜிமோரிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் பெருவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர், பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் எடுத்துரைத்துள்ளார்.

சுவாமி விவேகானந்தரின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்

July 04th, 01:50 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று (04.07.2026) சுவாமி விவேகானந்தரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியம், ஆன்மீக மரபுகள், தேசிய உணர்வு ஆகியவற்றிற்கு உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்ததில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய இணையற்ற பங்களிப்பு, நமது தலைமுறைகளைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். அவரது ஆழ்ந்த ஞானமும் காலத்தால் அழியாத கொள்கைகளும் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வழிகாட்டும் சக்தியாகத் திகழ்கின்றன என்று பிரதமர் கூறியுள்ளார். வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான தேசத்தின் கூட்டு உறுதிப்பாட்டிற்கு அவரது ஆன்மீகச் செய்தி தொடர்ந்து ஊக்கமளித்து, ஆற்றலூட்டும் என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

புனிதமான ஸ்ரீ அமர்நாத் யாத்திரை தொடங்குவதையொட்டி, சிவபெருமானின் பக்தர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கும் வகையில், பிரதமர் ஒரு சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்

July 03rd, 03:56 pm

புனிதமான ஸ்ரீ அமர்நாத் யாத்திரை இன்று முதல் (03 ஜூலை, 2026) தொடங்கவுள்ளதை முன்னிட்டு, சிவபெருமானின் பக்தர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடி ஒரு சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்குப் பிரதமர் எழுதியுள்ள கடிதத்தில், புனித யாத்திரையை ஐந்து உறுதி மொழிகளுடன் இணைத்து மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளார்

July 03rd, 03:53 pm

ஆண்டுதோறும் நடைபெறும் அமர்நாத் புனித யாத்திரையை மேற்கொள்ளும் பக்தர்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

July 01st, 12:22 pm

தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டின் மீதான அவர்களுடைய உறுதிப்பாடு கருணை, இணையற்ற சேவை ஆகியவற்றுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் இந்தியா முன்முயற்சி நிர்வாகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, மக்களுக்கு அதிகாரமளித்து, வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான அடித்தளத்தை வலுப்படுத்தியுள்ளது – பிரதமர் திரு நரேந்திர மோடி

July 01st, 12:04 pm

டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியின் 11 ஆண்டுகால நிறைவு குறித்து இன்று குறிப்பிட்டுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, நிர்வாகம், பொதுச் சேவை வழங்கல், குடிமக்களின் வாழ்க்கை ஆகியவற்றில் அது ஏற்படுத்தியுள்ள மாற்றத்தக்க தாக்கத்தை எடுத்துரைத்துள்ளார். டிஜிட்டல் இந்தியா, நிர்வாகத்தை மேலும் வெளிப்படையானதாகவும், திறன்மிக்கதாகவும், மக்களை மையமாகக் கொண்டதாகவும் மாற்றி நாட்டின் அனைத்து துறை வளர்ச்சியையும் விரைவுபடுத்தி நிர்வாகத்திற்குப் புதிய வரையறையை ஏற்படுத்தியுள்ளதாக திரு மோடி கூறியுள்ளார். தடையற்ற மின்னணு பணப்பரிவர்த்தனைகள், வெளிப்படையான நேரடி பயன் பரிமாற்றங்கள் முதல் மின்னணு பொது உள்கட்டமைப்பின் விரிவாக்கம் வரை இந்த முன்முயற்சி வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பிரதிபலித்துள்ளது என்றும் இது தொழில்நுட்பத்தை எளிமையான வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான ஒரு சக்தி மிக்க கருவியாக மாற்றியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஜயா மேத்தாவின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

July 01st, 11:41 am

விஜயா மேத்தாவின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மறைந்த விஜயா மேத்தா, நவீன மராத்தி நாடகத்தின் முன்னோடி என்றும் தமது படைப்பாற்றல், கலைத்திறனால் அறியப்பட்டவர் என்றும் திரு மோடி கூறியுள்ளார். அவரது பணிகள், பல தலைமுறையைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குநர்கள், நாடக ரசிகர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

ஹுல் தினத்தை முன்னிட்டு துணிச்சல்மிக்க போராளிகளுக்குப் பிரதமர் அஞ்சலி

June 30th, 06:10 pm

ஹுல் தினத்தை முன்னிட்டு, அந்நிய ஆட்சியின் அநீதிக்கு எதிராக உறுதியுடன் போராடிய சிடோ-கன்ஹு, சந்த்-பைரவ் மற்றும் பூலோ-ஜனோ போன்ற துணிச்சல்மிக்க போராளிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். பழங்குடியினரின் கண்ணியம் மற்றும் கௌரவத்தைப் பாதுகாப்பதற்காக அவர்கள் மேற்கொண்ட போராட்டமும் தியாகமும், நாட்டு மக்களின் இதயங்களில் தொடர்ந்து புதிய எழுச்சியை ஊட்டும் என்று திரு. மோடி குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு இலக்கையும் அடைவதற்கு ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

June 30th, 11:00 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்றைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

செஷல்ஸ் தேசிய நாடாளுன்றத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்

June 28th, 05:00 pm

பிரதமராக நான் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் முதன்முதலில் பயணம் செய்த நாடு, 2015-ல் செஷல்ஸ் ஆகும். பிரதமராக ஆப்பிரிக்காவிற்கு நான் மேற்கொண்ட முதல் பயணமும் அதுவே. இந்தியப் பெருங்கடல் குறித்த இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையில் செஷல்ஸ் ஒரு சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது என்று நான் நம்பியதாலேயே இங்கு வந்தேன். இன்று, ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நான் இங்கு வரும்போது, அந்த நம்பிக்கை முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளது.

Our vision is to make the Indian Ocean an Ocean of Opportunity: PM Modi at the India-Seychelles Joint Press Meet

June 28th, 02:02 pm

Addressing the India-Seychelles Joint Press Meet, PM Modi dedicated the Guardian of the Blue Horizon honour to all nations fighting climate change. Reaffirming the MAHASAGAR Vision, he said India envisions an Indian Ocean where prosperity grows with maritime security and partnerships are rooted in mutual respect and trust. He also highlighted the Blue Economy as a natural and strategic pillar of the India-Seychelles partnership.

மனதின் குரல் நிகழ்ச்சியின் 135-வது அத்தியாயத்தில் 28.06.2026 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்

June 28th, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்களோடு இணைவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. 2026ஆம் ஆண்டின் முதல் பாதி, நிறைவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. கடந்த இந்த 6 மாதங்களில் நாம் மனதின் குரலிலே, நாட்டுமக்களின் அநேக சாதனைகள் குறித்து விவாதங்களில் ஈடுபட்டிருக்கிறோம். ஜூன் மாதத்தில் கூட தேசத்தின் சில சாதனைகள் அரங்கேறியிருக்கின்றன. இவை நாட்டுமக்களை பெருமிதத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. இந்த வெற்றிகள் தேசத்தின் பாதுகாப்பு மற்றும் தற்சார்போடு தொடர்புடையவை. தற்போது தான் கோல்காத்தாவிலே, கடற்படையோடு தொடர்புடைய ஒரு நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. அங்கே ஐஎன்எஸ் தூனாகிரி, ஐஎன்எஸ் சன்ஷோதக் மற்றும் ஐஎன்எஸ் அக்ரய் ஆகிய போர்க்கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்பட்டன. இந்தக் கப்பல்களின் வடிவமைப்பும், தயாரிப்பும், அனைத்துமே நம் நாட்டிலேயே ஆனவை.

பங்கிம் சந்திர சட்டர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்

June 26th, 12:50 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, பங்கிம் சந்திர சட்டர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். தலைமுறை தலைமுறையாக இந்தியர்களிடையே தேசபக்தியையும் கலாச்சாரப் பெருமித உணர்வையும் தூண்டிய ஒரு மாபெரும் இலக்கிய மேதை என அவரைப் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்.

ராஜரிஷி சத்ரபதி ஷாஹு ஜி மகாராஜுக்குப் பிரதமர் மரியாதை செலுத்தினார்

June 26th, 12:46 pm

ராஜரிஷி சத்ரபதி ஷாஹு ஜி மகாராஜின் பிறந்தநாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தினார். அவர் தனது வாழ்நாளை நலிவடைந்த, சுரண்டப்பட்ட மற்றும் பின்தங்கிய வகுப்பினரின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்தார். அவரது மகத்தான செயல்களும் லட்சியங்களும் தேசத்திற்கு வரும் யுகங்களிலும் தொடர்ந்து வழிகாட்டும் என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.