The Dedicated Freight Corridor is the lifeline of a rapidly developing India: PM Modi in Vadodara, Gujarat
September 08th, 12:30 pm
Addressing the ‘Namo for Viksit Bharat’ programme in Vadodara, PM Modi announced further momentum in the journey towards a Viksit Bharat. From completing the 2,800+ km Dedicated Freight Corridor and strengthening logistics to advancing manufacturing, renewable energy, skills and AI readiness, these projects will give fresh momentum to Gujarat’s and India’s development journey.பிரதமர் திரு நரேந்திர மோடி, குஜராத்தின் வதோதராவில் ரூ 35,000 கோடிக்கு மேல் மதிப்புடைய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்து, அர்ப்பணித்தார்
September 08th, 12:00 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, குஜராத்தின் வதோதராவில் ரூ 35,000 கோடிக்கு மேல் மதிப்புடைய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்து, அர்ப்பணித்தார் அப்போது உரையாற்றிய அவர் இப்பெரும் விழாவில் நேரடியாகவும் இணைவழியாகவும் பங்கேற்றுள்ளவர்களை வரவேற்பதாகக் கூறினார். குஜராத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளை தாம் வரவேற்பதாக திரு மோடி குறிப்பிட்டார்.தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்
September 05th, 10:00 am
பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று (04.09.2026) லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தமது இல்லத்தில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றவர்களுடன் கலந்துரையாடினார். இந்த ஆண்டு, மூன்று துறைகளிலிருந்து 82 ஆசிரியர்களும் கல்வியாளர்களும் தேசிய நல்லாசிரியர் விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில், பள்ளிக் கல்வி, எழுத்தறிவுத் துறையிலிருந்து 48 ஆசிரியர்களும், உயர் கல்வி நிறுவனங்கள், பாலிடெக்னிக்குகளிலிருந்து 21 ஆசிரியர்/பேராசிரியர்களும், திறன் மேம்பாட்டு அமைச்சகத்திலிருந்து 13 திறன் பயிற்சியாளர்களும் அடங்குவர்.கடின உழைப்பு, முயற்சியின் வலிமையை எடுத்துக்காட்டும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்
August 14th, 08:58 am
பிரிவினையின் கொடுமைகளை நினைவுகூரும் இந்தத் தினத்தை அனுசரிக்கும் இந்த வேளையில், பிரிவினையால் பாதிக்கப்பட்ட அனைவரது துணிச்சலான நடவடிக்கைளையும் நினைவுகூர்வதாகப் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது வரலாற்றில் பலரது வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்திய தருணம் என்றும், இதன் காரணமாக குடும்பங்கள் இடம்பெயர்ந்ததுடன் அன்புக்குரியவர்களை இழந்து எண்ணற்ற துன்பங்களை அனுபவிக்க நேர்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து
August 07th, 11:14 am
தேசிய கைத்தறித் தினத்தை முன்னிட்டு, நாட்டின் வளமான மற்றும் சிறப்பான கைத்தறிப் பாரம்பரியத்தைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்குத் தம் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் காலத்தால் அழியாத தொன்மையான பாரம்பரியத்தைத் தங்களின் இணையற்ற கைவினைத்திறனால் தலைமுறைகள் கடந்தும் பாதுகாத்து வளப்படுத்தி வரும் நெசவாளர்கள், கைவினைஞர்களின் திறமை, படைப்பாற்றல், அர்ப்பணிப்பு உணர்விற்குப் பிரதமர் தமது மரியாதையைச் செலுத்தியுள்ளார்.துணிச்சல், விடாமுயற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியை பிரதமர் பகிர்ந்துள்ளார்
August 03rd, 09:51 am
ஒருவரது சூழ்நிலை பாதகமாக மாறும்போது துணிச்சலை இழக்கக்கூடாது, ஏனென்றால் பொறுமையும், விடாமுயற்சியும் இழந்ததை மீண்டும் பெற உதவும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். கடலின் நடுவே கப்பல் உடைந்தாலும் ஒரு திறன்மிக்க மாலுமி நம்பிக்கையை இழக்காமல் நீந்தி உயிர் தப்ப முயற்சிப்பதை போல் உறுதியும், விடாமுயற்சியும் ஒருவரது துயரத்தை வெல்லும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.வளர்ச்சியடைந்த இந்தியா இலக்குகளை நோக்கி, ஊரக வளர்ச்சி, விவசாயம், சமூக நலன் மற்றும் அது சார்ந்த துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமர் தலைமையில் செயலாளர்களின் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம்
July 22nd, 07:37 pm
வளர்ச்சியடைந்த இந்தியா இலக்குகளை நோக்கி, ஊரக வளர்ச்சி, விவசாயம், சமூக நலன் மற்றும் அது சார்ந்த துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் பல்வேறு துறைகளின் செயலாளர்களின் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம், பிரதமரின் இல்லமான 7, லோக் கல்யாண் மார்க்கில் இன்று நடைபெற்றது.இந்தியா – பிரிட்டன் விரிவான பொருளாதார, வர்த்தக ஒப்பந்தம், சமூக பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்தக் கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
July 15th, 12:58 pm
இந்தியா – பிரிட்டன் விரிவான பொருளாதார, வர்த்தக ஒப்பந்தம், சமூக பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் எழுதிய கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்து, இது இந்தியா – பிரிட்டன் இடையேயான கூட்டாண்மையில் சிறந்த மைல்கல் என்று விவரித்துள்ளார். இந்த இரண்டு ஒப்பந்தங்களும் இந்தியா – பிரிட்டன் இடையே பொருளாதார தொடர்பை மேலும் வலுப்படுத்தி, இரு நாடுகளின் பகிரப்பட்ட இலக்குகளை தங்களுடைய மக்களுக்கான உறுதியான வாய்ப்புகளாக மாற்றும் என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.அறிவு, திறன், சுகாதாரம் ஆகியவை குறித்து வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்
July 15th, 12:12 pm
அறிவு பெறுதல், புதிய திறன்களை வளர்த்துக் கொள்ளுதல், சிறந்த ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்தல் ஆகியவற்றின் மூலம் இந்திய எதிர்காலத்தை வடிவமைப்பதில் நாட்டின் இளைஞர்கள் வலிமைமிக்க சக்தியாக உருவாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார். இப்பண்புகள், தனிநபர்களுக்கு அதிகாரமளிப்பது மட்டுமின்றி நாட்டைக் கட்டமைப்பதற்கும் சிறந்த பங்களிக்கின்றன.Our guiding spirit is - Grow More, Achieve More: PM Modi at the community programme in Melbourne, Australia
July 09th, 03:22 pm
PM Modi and Australian PM Anthony Albanese participated in a community programme of the Indian diaspora in Melbourne. In his address, PM Modi elaborated on the rapid progress taking place in India and expressed appreciation for the contribution of the Indian diaspora in Australia to the bilateral relationship, describing them as a living bridge between the two countries.ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்
July 09th, 03:00 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (09.07.2026) மெல்போர்னில் உள்ள மார்வெல் ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய சமூகத்தினர் பங்கேற்ற கூட்டத்தில் உரையாற்றினார். ஒரு சிறப்பு நிகழ்வாக, ஆஸ்திரேலியப் பிரதமர் திரு அந்தோனி அல்பானீஸும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆஸ்திரேலிய பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள்
July 09th, 12:34 pm
சுரங்கம் தோண்டுதல், சுரங்கம் தோண்டுதல் உபகரணம், தொழில்நுட்பம் மற்றும் சேவைகளில் திறன் மேம்பாட்டு மையத்தை அமைக்க மேற்கு ஆஸ்திரேலிய அரசின் தொழில்நுட்பம், கல்வி மையம் மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவு அமைச்சகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.First the product, then components and now the semiconductor; this is the definitive next phase of Make in India: PM Modi in Sanand, Gujarat
July 04th, 05:15 pm
PM Modi inaugurated the CG Semi OSAT facility in Sanand, Gujarat and lauded the joint efforts of Indian, Japanese and Thai industry partners. He praised the transition into active commercial production capable of delivering 20 crore units annually, while expressing confidence in the team's ambitious target of reaching 500 crore units. He reiterated that, with a complete commitment to ease of doing business, 140 crore Indians will definitely make the nation developed by 2047.குஜராத்தின் சனந்தில் செமிகண்டக்டர் ஆலையை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார்
July 04th, 05:00 pm
நாட்டை மேம்பட்ட தொழில்நுட்பத்திற்கான உலகளாவிய மையமாக மாற்றுவநு அரசின் முக்கிய நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார். உள்நாட்டு சிப் வடிவமைப்பு, உள்ளூர்மயமாக்கப்பட்ட உற்பத்தி ஆகிய பரந்த உத்திகளால் உந்தப்பட்டு, இந்த மூன்றாவது பெரிய ஆலையில் வணிக ரீதியான சிப் பேக்கேஜிங் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார். இந்தியாவில் வடிவமைப்பு, இந்தியாவில் தயாரிப்பு என்ற அடிப்படைக் கொள்கையுடன் நாடு வெற்றிகரமாக முன்னேறியுள்ளது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். செமிகான் இந்தியா திட்டம் அதிவேகமாக முன்னேறி வருகிறது என அவர் கூறினார்.ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்கு பிரதமர் நாளை பயணம்: நாட்டின் முதலாவது ஒருங்கிணைந்த பெட்ரோலியம் சுத்திகரிப்பு-பெட்ரோகெமிக்கல் பசுமை வளாகத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்
July 03rd, 11:25 am
பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (04.07.2026) ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். நாளை காலை சுமார் 10:45 மணிக்கு ஜோத்பூர் விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடத்தைத் திறந்து வைக்கும் அவர், ஜோத்பூரில் மேம்படுத்தப்பட்ட உடான் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். அதன் தொடர்ச்சியாக, மதியம் சுமார் 12:15 மணிக்கு பலோத்ரா செல்லும் பிரதமர், அங்கு சுமார் 1.06 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தேசத்திற்கு அர்ப்பணித்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதனைத் தொடர்ந்து அவர் மக்களிடம் உரையாற்றுகிறார். அதன் பின்னர் குஜராத் மாநிலத்திற்குப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர், மாலை 4:30 மணியளவில் அகமதாபாத் சாணந்த் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிஜி செமி அவுட்சோர்ஸ்டு செமிகண்டக்டர் ஆலையைத் திறந்து வைத்து உரையாற்றுகிறார்.ஜப்பானியப் பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின்போது இந்தியப் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
July 02nd, 01:30 pm
அவர் ஜப்பானின் முதல் பெண் பிரதமர் மட்டுமல்லாமல், தொலைநோக்குப் பார்வை கொண்ட மற்றும் பரவலாக மதிக்கப்படும் ஒரு தலைவரும் ஆவார். மேலும், அவர் ஜப்பானின் நாரா மாகாணத்தைச் சேர்ந்தவர். இந்த நாரா மாகாணம், இந்தியாவிற்கும் ஜப்பானிற்கும் இடையே பகிரப்பட்ட பௌத்த பாரம்பரியத்தின் முக்கியமான மையமாகத் திகழ்கிறது.பஹத்பூர் கிராமத்தில் உள்ள திறன் மேம்பாட்டு மையத்தைப் பிரதமர் பார்வையிட்டார்; திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தப்படுவதைப் பாராட்டினார்
June 20th, 08:49 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, பஹத்பூர் கிராமத்தில் உள்ள ஒரு திறன் மேம்பாட்டு மையத்தைப் பார்வையிட்டார்.புது தில்லியில் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகைகளை வழங்கும் நிகழ்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
June 19th, 05:15 pm
இன்று இந்த நிகழ்ச்சியுடன் இணைந்துள்ள இளம் நண்பர்களிடம், இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்தை நான் காண்கிறேன். சில மணி நேரங்களுக்கு முன்புதான் நான் பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா பயணத்தை முடித்துத் திரும்பினேன். ஜி-7 உச்சி மாநாட்டில் வளர்ந்த நாடுகளின் தலைவர்களைச் சந்தித்தேன். இன்றைய உலகம் இந்தியாவின் இளைஞர் சக்தியைப் பற்றிப் பேசுகிறது.PM Modi disburses incentives worth around ₹2,400 crore under the Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana
June 19th, 05:00 pm
Addressing beneficiaries, industry representatives and stakeholders of the PM Viksit Bharat Rozgar Yojana, PM Modi disbursed incentives worth around ₹2,400 crore and highlighted the government's commitment to empowering India's youth and boosting employment generation. He described PM-VBRY as a bridge between youth and industry, noting that the scheme has supported the creation of 15 lakh jobs and brought nearly 70 lakh first-time employees under social security.கடல்சார் இணைப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து சிஎம்ஏ சிஜிஎம் நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு ரோடோல்ஃப் சாடேவுடன் பிரதமர் ஆலோசனை
June 18th, 06:37 pm
கடல்சார் இணைப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து சிஎம்ஏ சிஜிஎம் நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு ரோடோல்ஃப் சாடேவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.