சிக்கிம் @50வது ஆண்டுவிழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் மொழிபெயர்ப்பு
May 29th, 10:00 am
சிக்கிம் ஆளுநர் திரு. ஓ.பி. பிரகாஷ் மாத்தூர் அவர்களே; மாநிலத்தின் முதலமைச்சரும் எனது நண்பருமான பிரேம் சிங் தமாங் அவர்களே; நாடாளுமன்றத்தின் எனது சகாக்களான டோர்ஜி ஷெரிங் லெப்சா அவர்களே மற்றும் டாக்டர் இந்திரா ஹாங் சுப்பா அவர்களே; இதில் கலந்து கொண்டுள்ள மக்கள் பிரதிநிதிகளே; பெண்களே, தாய்மார்களே!சிக்கிம்@50 கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
May 29th, 09:45 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காங்டாக்கில் நடைபெற்ற ‘சிக்கிம்@50’ என்ற சிக்கிம் மாநிலம் உருவான 50-வது ஆண்டு நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். இந்த நிகழ்வின் கருப்பொருள் ‘முன்னேற்றம் இலக்கைச் சந்திக்கும் இடம் - இயற்கை, வளர்ச்சியை மேம்படுத்தும் இடம்’ என்பதாகும். இந்த நிகழ்வில் பேசிய அவர், சிக்கிம் மாநிலத்தின் 50-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இந்த சிறப்பு நாளில் சிக்கிம் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். மக்களின் உற்சாகம், ஆற்றல் ஆகியவற்றை நேரில் காண விரும்புவதாகவும், ஆனால் மோசமான வானிலை காரணமாக, நேரில் வர முடியவில்லை என்றும் அவர் கூறினார். விரைவில் சிக்கிமுக்கு வருகை தந்து மாநிலத்தின் சாதனைகளிலும் கொண்டாட்டங்களிலும் பங்கேற்க இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார். இன்றைய நாள் என்பது மாநிலத்தின் கடந்த 50 ஆண்டுகால சாதனைகளைக் கொண்டாடும் நாள் என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்த பிரமாண்டமான நிகழ்வை மறக்கமுடியாததாக மாற்றிய சிக்கிம் முதலமைச்சரையும் அவரது குழுவினரின் ஆற்றலையும் பிரதமர் பாராட்டினார். சிக்கிம் மாநிலத்தின் பொன் விழா கொண்டாட்டங்களுக்கு அவர் மீண்டும் ஒருமுறை வாழ்த்து தெரிவித்தார்.பிரதமர் திரு. நரேந்திர மோடி சிக்கிம், மேற்கு வங்கம், பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் மே 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பயணம் மேற்கொள்கிறார்
May 28th, 12:10 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி மே 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சிக்கிம், மேற்கு வங்கம், பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார்.