'விக்சித் பாரத்' (வளர்ந்த இந்தியா) என்ற தீர்மானம் நிச்சயமாக நிறைவேறும்: பிரதமர் மோடி மன் கீ பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில்
December 28th, 11:30 am
ஆண்டின் இறுதி ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில், 2025 ஆம் ஆண்டில், தேசிய பாதுகாப்பு, விளையாட்டு, அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் உலகளாவிய தளங்களில் இந்தியா தனது முத்திரையைப் பதித்ததாக பிரதமர் மோடி கூறினார். 2026 ஆம் ஆண்டில் புதிய தீர்மானங்களுடன் நாடு முன்னேறத் தயாராக உள்ளது என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். 'விக்சித் பாரத்' (வளர்ந்த இந்தியா) இளம் தலைவர்கள் உரையாடல், வினாடி வினா போட்டி, ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2025 மற்றும் ஃபிட் இந்தியா இயக்கம் போன்ற இளைஞர்களை மையமாகக் கொண்ட முயற்சிகளையும் பிரதமர் எடுத்துரைத்தார்.வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மாநாட்டில் பிரதமரின் உரை
November 03rd, 11:00 am
இன்றைய நிகழ்வு அறிவியலுடன் தொடர்புடையது, ஆனால் முதலில் நான் கிரிக்கெட்டில் இந்தியாவின் அற்புதமான வெற்றியைப் பற்றிப் பேசுகிறேன். முழு இந்தியாவும் அதன் கிரிக்கெட் அணியின் வெற்றியில் மிகவும் மகிழ்ச்சியடைகிறது. இது இந்தியாவின் முதல் மகளிர் உலகக் கோப்பை. நமது மகளிர் கிரிக்கெட் அணியை நான் வாழ்த்துகிறேன். உங்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். உங்கள் வெற்றி நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்களை ஊக்குவிக்கும்.வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் 2025 மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
November 03rd, 10:30 am
புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற, வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03 நவம்பர் 2025) உரையாற்றினார். உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், புதுமை கண்டுபிடிப்பாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் இதர சிறப்பு விருந்தினர்களை பிரதமர் வரவேற்றார்.தேசிய விருது பெற்ற ஆசிரியர்கள் உடனான சந்திப்பில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
September 04th, 05:35 pm
நமது பாரம்பரியத்தில் ஆசிரியர்களுக்கான மரியாதை இயற்கையாகவே உள்ளது. மேலும் அவர்கள் சமூகத்தின் மகத்தான சக்தியாகவும் உள்ளனர். ஆசீர்வதிப்பதற்கு ஆசிரியர்களை எழுந்து நிற்கச் செய்வது தவறாகும். இத்தகைய பாவத்தை செய்வதற்கு நான் விரும்பவில்லை. ஆனால் நான் உங்களுடன் நிச்சயமாக உரையாட விரும்புகிறேன். என்னைப் பொருத்தவரை உங்கள் அனைவரையும் சந்திப்பது சிறப்பான அனுபவமாகும். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கே உரித்தான ஒரு கதையைக் கொண்டு இருப்பீர்கள். ஏனெனில் அப்படி இல்லாமல் இந்த நிலையை நீங்கள் அடைந்திருக்க மாட்டீர்கள். அந்தக் கதைகள் அனைத்தையும் அறிவதற்கு போதிய நேரத்தைக் கண்டறிவது சிரமமாகும். ஆனால், உங்களிடமிருந்து என்னால் கற்றுக் கொள்ள முடிவது குறைவாக இருந்தாலும் அது உண்மையில் ஊக்கமளிப்பதாக இருக்கும். அதற்காக உங்கள் அனைவரையும் நான் மனமார வாழ்த்துகிறேன். இந்த தேசிய விருதைப் பெற்றிருப்பது முடிவல்ல. இந்த விருதுக்குப் பின் அனைவரின் கவனமும் உங்கள் மீது இருக்கும். இதன் பொருள், உங்களைப் பற்றிய கவனம், குறிப்பிடத்தக்க வகையில் விரிவடைந்திருக்கும். இதற்கு முன்பு, உங்களின் செல்வாக்கு ஒரு வரம்புக்கு உட்பட்டு இருந்திருக்கும். ஆனால், இந்த அங்கீகாரத்திற்குப் பின், அது மேலும் அதிகரிக்கும். வளர்ச்சியடையும். இது தொடக்கம் என்று நான் நம்புகிறேன். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்குள் இருப்பது எதுவாக இருந்தாலும் சாத்தியமான வரை நீங்கள் மாணவர்களுடன் அதனை பகிர வேண்டும். அவ்வாறு நீங்கள் செய்யும் போது தான், உங்களின் மனதிருப்தி உணர்வு அதிகரிக்கும். இந்தத் திசையில் நீங்கள் தொடர்ந்து பாடுபடவேண்டும். இந்த விருதுக்கான உங்களின் தெரிவு, உங்களின் கடின உழைப்பிற்கும் உறுதியான அர்ப்பணிப்புக்கும் சான்றாகும். அதனால் மட்டுமே இது சாத்தியமாகி உள்ளது. ஒரு ஆசிரியர் என்பவர் நிகழ்காலத்திற்கு மட்டுமானவர் அல்ல, அவர் நாட்டின் எதிர்கால தலைமுறையையும் கட்டமைக்கிறார், எதிர்காலத்தை மெருகூட்டுகிறார். நாட்டிற்கான சேவையில் மற்ற எதையும் விட, இது சற்றும் குறைவானதல்ல என்று நான் நம்புகிறேன். உங்களைப் போன்ற கோடிக்கணக்கான ஆசிரியர்கள் இதே அர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும் நாட்டுக்கான சேவையில் ஈடுபட்டுள்ளனர். இங்கு வருவதற்கான வாய்ப்பை அனைவரும் பெற்றிருக்கவில்லை. ஒரு வேளை பலர், முயற்சி செய்யாமல் இருந்திருக்கலாம் அல்லது சிலர் கவனம் செலுத்தாமல் கூட இருந்திருக்கலாம். இத்தகைய திறன்களுடன் ஏராளமானவர்கள் உள்ளனர். அனைவரின் கூட்டு முயற்சிகளால் தான் நாடு தொடர்ந்து வளர்ச்சியடைவதையும், புதிய தலைமுறைகள் தொடர்ந்து வளர்வதையும் உறுதி செய்ய முடிகிறது. நாட்டுக்காக, நாட்டுக்குள் வாழ்கின்ற அனைவரும் இதற்கு பங்களிக்கின்றனர்.பிரதமர் நரேந்திர மோடி தேசிய விருது பெற்ற ஆசிரியர்களிடையே உரையாற்றினார்
September 04th, 05:33 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் இன்று தேசிய விருது பெற்ற ஆசிரியர்களிடையே உரையாற்றினார். ஆசிரியர்களை கௌரவிப்பது வெறும் சடங்கல்ல என்றும் அவர்கள் தங்களின் வாழ்நாளையே அர்பணித்துள்ளதை அங்கீகரிப்பதாகும் என்றும் அவர் தெரிவித்தார். தேசிய ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் பிரதமர் தமது மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். அவர்களுடைய கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கான அங்கீகாரமே இந்த விருதுக்கான தேர்வு என்று அவர் கூறினார்.குஜராத்தின் அகமதாபாத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் சுருக்கம்
August 25th, 06:42 pm
இன்று, நீங்கள் அனைவரும் உண்மையிலேயே ஒரு அருமையான சூழலை உருவாக்கியுள்ளீர்கள். இந்த லட்சக்கணக்கான மக்களின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் பெறுவது எனக்கு எவ்வளவு அதிர்ஷ்டம். நான் உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும், அது ஒருபோதும் போதாதுகுஜராத்தின் அகமதாபாத்தில் ரூ.5,400 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்
August 25th, 06:15 pm
குஜராத்தின் அகமதாபாத்தில் ரூ.5,400 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், விநாயகர் சதுர்த்தியின் உற்சாகத்தில் ஒட்டுமொத்த நாடும் மூழ்கியிருப்பதாகக் குறிப்பிட்டார். விநாயகரின் ஆசிகளுடன், குஜராத்தின் முன்னேற்றம் சார்ந்த பல வளர்ச்சித் திட்டங்களின் மங்களகரமான தொடக்கத்தை குறிக்கிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். மக்களின் காலடியில் பல திட்டங்களை அர்ப்பணிக்கும் பாக்கியம் தனக்கு கிடைத்துள்ளதாகவும், இந்த வளர்ச்சி சார்ந்த முயற்சிகளுக்காக அனைத்து குடிமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.எகனாமிக் டைம்ஸ் உலகத் தலைவர்கள் மன்றக் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
August 23rd, 10:10 pm
உலகத் தலைவர்கள் மன்றக் கூட்டத்திற்கு வந்துள்ள அனைத்து விருந்தினர்களையும் வரவேற்கிறேன். இந்த கூட்டம் நடத்தப்படும் நேரம் மிகவும் சரியானது. எனவே நான் அதைப் பாராட்டுகிறேன். கடந்த வாரம்தான், செங்கோட்டையிலிருந்து அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களைப் பற்றிப் பேசினேன். இப்போது இந்த மன்றம் அந்த உணர்வின் பலத்தைப் பெருக்குவதாகச் செயல்படுகிறது.புது தில்லியில் நடைபெற்ற எகனாமிக் டைம்ஸ் உலகத் தலைவர்கள் மன்றக் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
August 23rd, 05:43 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று புதுதில்லியில் நடைபெற்ற எகனாமிக் டைம்ஸ் உலகத் தலைவர்கள் மன்றக் கூட்டத்தில் உரையாற்றினார். இந்த நிகழ்வில், உலகத் தலைவர்கள் மன்றத்தில் கலந்து கொண்ட அனைத்து சிறப்பு விருந்தினர்களையும் பிரதமர் வரவேற்றார். இந்த மன்றக் கூட்டத்தை நடத்த மிகவும் சரியான நேரம் என்று குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, இதற்காக ஏற்பாட்டாளர்களைப் பாராட்டினார். கடந்த வாரம் தான் செங்கோட்டையில் இருந்து அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் குறித்துப் பேசியதை அவர் எடுத்துரைத்தார். மேலும் இந்த மன்றம் இப்போது அந்த உணர்வைப் பெருக்கும் சக்தியாகச் செயல்படுகிறது என்றும் அவர் கூறினார்.தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு பிரதமரின் காணொலி செய்தி
August 23rd, 11:00 am
தேசிய விண்வெளி தினத்தில் உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள். இந்த ஆண்டு, விண்வெளி தினத்தின் கருப்பொருள் ' ஆர்யபட்டாவிலிருந்து ககன்யான் வரை; பண்டைய ஞானத்திலிருந்து எல்லையற்ற சாத்தியக்கூறுகள்' என்பதாகும். இது கடந்த காலத்தின் நம்பிக்கையையும் எதிர்காலத்தின் உறுதியையும் உள்ளடக்கியது. இன்று, இவ்வளவு குறுகிய காலத்தில், தேசிய விண்வெளி தினம் நமது இளைஞர்களுக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கும் ஒரு சந்தர்ப்பமாக மாறியுள்ளது என்பதை நாம் காண்கிறோம். இது உண்மையில் தேசத்திற்கு மிகுந்த பெருமை சேர்க்கும் விஷயமாகும். தேசிய விண்வெளி தினத்தில் விண்வெளித் துறையுடன் தொடர்புடைய அனைவருக்கும், நமது விஞ்ஞானிகளுக்கும், அனைத்து இளைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சமீபத்தில், பாரதம் 'வானியல் மற்றும் வானியற்பியல் குறித்த சர்வதேச ஒலிம்பியாட்'-ஐ நடத்தியது. இந்தப் போட்டியில், உலகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 300 இளைஞர்கள் பங்கேற்றனர். நமது இந்திய இளைஞர்களும் பதக்கங்களை வென்றனர். இந்த ஒலிம்பியாட், விண்வெளித் துறையில் இந்தியாவின் வளர்ந்து வரும் தலைமையின் அடையாளமாகும்.தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்
August 23rd, 10:30 am
2025-ம் ஆண்டு தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் உரையாற்றினார். இந்த நிகழ்வில், பிரதமர் தமது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார், இந்த ஆண்டின் கருப்பொருளான “ஆர்யபட்டாவிலிருந்து ககன்யான் வரை” என்பது, இந்தியாவின் கடந்த காலத்தின் நம்பிக்கையையும் அதன் எதிர்காலத்திற்கான உறுதியையும் பிரதிபலிக்கிறது. குறுகிய காலத்தில், தேசிய விண்வெளி தினம் இந்திய இளைஞர்களுக்கு உற்சாகத்தையும் ஈர்ப்பையும் அளிக்கும் ஒரு தருணமாக மாறியுள்ளது, இது தேசிய அளவில் பெருமைக்குரிய விஷயம் என்று அவர் குறிப்பிட்டார். விஞ்ஞானிகள் மற்றும் இளைஞர்கள் உள்பட விண்வெளித் துறையுடன் தொடர்புடைய அனைவருக்கும் பிரதமர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தியா தற்போது சர்வதேச வானியல் மற்றும் வானியற்பியல் ஒலிம்பியாட்டை நடத்துகிறது என்றும், அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 300 இளைஞர்கள் இதில் பங்கேற்பதாகவும் திரு மோடி குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் பல இந்திய பங்கேற்பாளர்கள் பதக்கங்களை வென்றதில் திரு மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த ஒலிம்பியாட் விண்வெளித் துறையில் இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய தலைமையின் சின்னம் என்றும் அவர் கூறினார். இளைஞர்களிடையே விண்வெளியில் ஆர்வத்தை மேலும் தூண்டுவதற்காக, இந்திய விண்வெளி ஹேக்கத்தான் மற்றும் ரோபாட்டிக்ஸ் சவால் போன்ற முயற்சிகளை இஸ்ரோ தொடங்கியுள்ளது என்று பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து மாணவர்கள் மற்றும் வெற்றியாளர்களை அவர் வாழ்த்தினார்.சுபான்ஷு சுக்லாவுடனான பிரதமரின் உரையாடல்
August 19th, 09:43 am
நீங்கள் அனைவரும் சிறப்பான பயணத்தை நிறைவு செய்து திரும்பியுள்ளீர்கள்…விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் கலந்துரையாடினார்
August 19th, 09:42 am
விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று புதுதில்லியில் கலந்துரையாடினார். விண்வெளி பயணத்தின் வித்தியாசமான அனுபவம் ஒருவருக்கு மாறுபட்ட எண்ணத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்றும் விண்வெளி வீரர்கள் இந்த மாற்றத்தை எவ்வாறு உணர்கிறார்கள், அனுபவம் கொள்கிறார்கள் என்பது பற்றி அறிந்துகொள்ள விரும்புவதாகவும் பிரதமர் கூறினார். பிரதமருக்கு பதிலளித்த சுபான்ஷு சுக்லா, விண்வெளி சூழல் மிகவும் மாறுபட்டதாக உள்ளது என்றும், இதற்கு முக்கிய காரணம் ஈர்ப்புவிசை இல்லாததுதான் என்றும் கூறினார்.விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் உரையாடினார்
August 18th, 08:09 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் தருணத்தை குறிக்கும் வகையில் ஒரு பயனுள்ள உரையாடலை மேற்கொண்டார். இந்த சந்திப்பின் போது, திரு. சுக்லாவின் விண்வெளி அனுபவங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முன்னேற்றங்கள் மற்றும் நாட்டின் லட்சிய திட்டமான விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் - ககன்யான் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.பிரதமர் திரு நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையின் சிறப்பம்சங்கள்
August 15th, 03:52 pm
நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தில்லி செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். செங்கோட்டையில் 103 நிமிடங்கள் நீடித்த திரு நரேந்திர மோடியின் உரை, 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான ஒரு செயல் திட்டத்தை வழங்குவதாக அமைந்தது. மிக நீண்ட மற்றும் தீர்க்கமான உரையாகும். பிரதமரின் உரை, தன்னம்பிக்கை, புதுமை, மக்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது. மற்றவர்களைச் சார்ந்திருக்கும் ஒரு தேசத்திலிருந்து உலகளவில் நம்பிக்கையான, தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய, பொருளாதார ரீதியாக மீள்தன்மை கொண்ட நாடாக மாறும் இந்தியாவின் பயணத்தை எடுத்துக்காட்டுகிறது.நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டை கொத்தளத்திலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
August 15th, 07:00 am
இந்த மாபெரும் சுதந்திர தின விழா நமது நாட்டு மக்களின் 140 கோடி தீர்மானங்களின் கொண்டாட்டமாகும். இந்த சுதந்திர தின விழா கூட்டு சாதனைகளின் தருணம், பெருமையின் தருணம். நமது இதயங்கள் மகிழ்ச்சியால் நிரம்பியுள்ளன. தேசம் தொடர்ந்து ஒற்றுமையின் உணர்வை வலுப்படுத்தி வருகிறது. இன்று, 140 கோடி இந்தியர்கள் மூவண்ணக் கொடியின் வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளனர். பாலைவனங்கள், இமயமலைச் சிகரங்கள், கடற்கரைகள், அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகள் என அனைத்து இடங்களிலும் தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. எல்லா இடங்களிலும் ஒரே எதிரொலி, ஒரே ஆரவாரம். நம் தாய்நாட்டின் புகழ், உயிரை விட நமக்கு மிகவும் மேலானது.டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெற்ற 79வது சுதந்திர தினத்தின் காட்சிகள்
August 15th, 06:45 am
79வது சுதந்திர தினத்தன்று, பிரதமர் மோடி தனது உரையில், அரசியலமைப்பு சபை, சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். 2047க்குள் ஒரு விக்ஸித் பாரதத்தை (வளர்ந்த இந்தியா) அடைவதை நோக்கமாகக் கொண்ட முக்கிய முயற்சிகளான ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், பிரதான் மந்திரி விக்ஸித் பாரத் ரோஸ்கர் யோஜனா, தேசிய விளையாட்டுக் கொள்கை மற்றும் சுதர்ஷன் சக்ரா மிஷன் ஆகியவற்றை அவர் எடுத்துரைத்தார்.18வது சர்வதேச வானியல் மற்றும் வானியற்பியல் ஒலிம்பியாட் விழாவில் காணொலி வாயிலாக பிரதமர் வெளியிட்ட செய்தியின் தமிழாக்கம்
August 12th, 04:34 pm
64 நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பிரகாசிக்கும் நட்சத்திரங்களுடன் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது. 18வது சர்வதேச வானியல் மற்றும் வானியற்பியல் ஒலிம்பியாட் நிகழ்விற்காக, இந்தியாவிற்கு வந்துள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறேன். இந்தியாவில் பாரம்பரியம் புதுமைகளை சந்திக்கிறது, ஆன்மீகம் அறிவியலை சந்திக்கிறது, ஆர்வம் படைப்பாற்றலை சந்திக்கிறது. பல நூற்றாண்டுகளாக, இந்தியர்கள் வானத்தை கவனித்து முக்கிய கேள்விகளைக் கேட்டு வருகின்றனர். உதாரணமாக, 5 ஆம் நூற்றாண்டில், ஆர்யபட்டா பூஜ்ஜியத்தைக் கண்டுபிடித்தார். பூமி அதன் அச்சில் சுழல்கிறது என்று முதன்முதலில் கூறியவரும் அவரே. உண்மையில், அவர் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கி வரலாற்றை உருவாக்கினார்!18வது சர்வதேச வானியல் மற்றும் வானியற்பியல் ஒலிம்பியாட் விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்
August 12th, 04:33 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி செய்தி மூலம் 18வது சர்வதேச வானியல் மற்றும் வானியற்பியல் ஒலிம்பியாட் நிகழ்வில் உரையாற்றினார். இந்த நிகழ்வில், 64 நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் இணைவதில் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரதமர், சர்வதேச ஒலிம்பியாட் நிகழ்விற்காக இந்தியா வந்துள்ளவர்களை அன்புடன் வரவேற்றார். இந்தியாவில், பாரம்பரியம் புதுமையையும், ஆன்மீகம் அறிவியலையும், ஆர்வம் படைப்பாற்றலையும் சந்திக்கிறது. பல நூற்றாண்டுகளாக, இந்தியர்கள் வானத்தைக் கவனித்து முக்கிய கேள்விகளை எழுப்பி வருகின்றனர் என்று திரு. மோடி கூறினார். 5 ஆம் நூற்றாண்டில் பூஜ்ஜியத்தைக் கண்டுபிடித்து, பூமி அதன் அச்சில் சுழல்கிறது என்று முதன்முதலில் கூறிய ஆர்யபட்டாவின் உதாரணத்தை அவர் மேற்கோள் காட்டினார். உண்மையில், அவர் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கி வரலாற்றை உருவாக்கினார்! என்று பிரதமர் குறிப்பிட்டார்.2047ல் வளர்ந்த இந்தியாவுக்கான பாதை தன்னம்பிக்கையின் மூலம் செல்கிறது: மன் கீ பாத்தில் (மனதின் குரல்) பிரதமர் மோடி
July 27th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை, தேசத்தின் வெற்றிகள், நாட்டுமக்களின் சாதனைகள் பற்றி பேச இருக்கிறோம். கடந்த சில வாரங்களில், அது விளையாட்டுக்களாகட்டும், அறிவியலாகட்டும், கலாச்சாரமாகட்டும்…… நடைபெற்றிருக்கின்ற பல விஷயங்கள் பாரதநாட்டவர்களுக்குப் பெருமை சேர்த்திருக்கின்றன. தற்போது தான் சுபான்ஷு சுக்லா அவர்கள் விண்வெளிப்பயணத்தை நிறைவு செய்து திரும்பியிருப்பது குறித்து நாடெங்கும் பேசப்பட்டு வருகிறது. சுபான்ஷு அவர்கள் தரையைத் தொட்ட போது, மக்கள் உற்சாகமடைந்தார்கள், அனைவர் இதயங்களிலும் சந்தோஷத்தின் திவலைகள் தாண்டவமாடின. தேசமே பெருமிதத்தில் பொங்கியது. ஆகஸ்ட் மாதம் 2023ஆம் தேதியன்று சந்திரயான் – 3 வெற்றிகரமாகத் தரையிறங்கிய வேளையில் தேசத்தில் ஒரு புதிய, அலாதியான சூழல் நிலவியது எனக்கு நினைவிருக்கிறது. அறிவியல் பற்றியும், விண்வெளி குறித்தும் சிறார்கள் மனதிலே புதியதொரு ஆர்வம் துளிர்த்தது. நாங்களும் விண்வெளிக்குப் பயணிப்போம், நாங்களும் நிலவில் கால் பதிப்போம்-விண்வெளி விஞ்ஞானியாக ஆவோம் என்று இப்போதெல்லாம் சின்னச்சின்ன பிள்ளைகளும் கூறி வருகிறார்கள்.