This is the right time to work and expand in India's shipping sector: PM Modi at Maritime Leaders Conclave in Mumbai
October 29th, 04:09 pm
In his address at the Maritime Leaders Conclave in Mumbai, PM Modi highlighted that MoUs worth lakhs of crores of rupees have been signed in the shipping sector. The PM stated that India has taken major steps towards next-gen reforms in the maritime sector this year. He highlighted Chhatrapati Shivaji Maharaj’s vision that the seas are not boundaries but gateways to opportunity, and stated that India is moving forward with the same thinking.மும்பையில் இந்திய கடல்சார் வாரம் 2025-ல், கடல்சார் தலைவர்களின் மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்
October 29th, 04:08 pm
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நடைபெறும் இந்திய கடல்சார் வாரம் 2025 இல் கடல்சார் தலைவர்களின் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். மேலும் உலகளாவிய கடல்சார் தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்ற கூட்டத்திற்கு அவர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், கப்பல் துறை சம்பந்தமான ஏராளமான திட்டங்கள் விழாவில் தொடங்கப்பட்டிருப்பதுடன், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன என்று கூறினார். இந்தியாவின் கடல்சார் திறன்கள் மீது சர்வதேச நாடுகள் கொண்டுள்ள நம்பிக்கையை இது பிரதிபலிக்கிறது என்று கூறினார்.குஜராத்தின் பாவ்நகரில் நடைபெற்ற ‘கடலில் இருந்து வளம்’ என்ற நிகழ்வில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
September 20th, 11:00 am
குஜராத் முதல்வர் திரு புபேந்திர படேல் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது நண்பர்கள் திரு சர்பானந்த சோனோவால் அவர்களே, சி.ஆர்.பாட்டில் அவர்களே, திரு மன்சுக் மாண்டவியா அவர்களே, திரு சாந்தனு தாக்கூர் அவர்களே, திருமிகு நிமுபென் பம்பானியா அவர்களே, நாடு முழுவதும் சுமார் 40 இடங்களில் இருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பிரமுகர்களே, முக்கிய துறைமுகங்களுடன் தொடர்புடைய மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்களே, உயர் அதிகாரிகளே, இதர முக்கிய விருந்தினர்களே, எனது அன்பான சகோதர, சகோதரிகளே வணக்கம்!!குஜராத்தின் பாவ்நகரில் 'கடலில் இருந்து வளம்' என்ற நிகழ்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார் - ₹34,200 கோடிக்கும் அதிக மதிப்புள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்
September 20th, 10:30 am
குஜராத்தின் பாவ்நகரில் இன்று (20.09.2025) ₹34,200 கோடிக்கும் அதிக மதிப்புள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 'சமுத்திர சே சம்ரிதி' எனப்படும் கடலில் இருந்து வளம் என்ற நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை, நாடு முழுவதும் சேவை இயக்கம் நடைபெறுவதை எடுத்துரைத்தார். கடந்த சில நாட்களில் குஜராத்தில் பல சேவை சார்ந்த நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நூற்றுக்கணக்கான இடங்களில் ரத்த தான முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன எனவும் இவற்றில் இதுவரை ஒரு லட்சம் பேர் ரத்த தானம் செய்துள்ளனர் என்றும் பிரதமர் கூறினார். ஏராளமான நகரங்களில் தூய்மை இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், லட்சக்கணக்கான மக்கள் அதில் தீவிரமாக பங்கேற்றுள்ளதாகவும் அவர் கூறினார். மாநிலம் முழுவதும் 30,000-க்கும் மேற்பட்ட சுகாதார முகாம்கள் நடைபெறுவதாகவும் பிரதமர் தெரிவித்தார். நாடு முழுவதும் சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் அவர் தனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தார்.இந்தியா-சிங்கப்பூர் கூட்டறிக்கை
September 04th, 08:04 pm
அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்திருந்த சிங்கப்பூர் பிரதமர் மாண்புமிகு திரு லாரன்ஸ் வோங்-ன் பயணத்தின் போது, இந்தியா மற்றும் சிங்கப்பூரிடையே விரிவான உத்திசார் கூட்டண்மைக்கான செயல்திட்டம் குறித்த கூட்டறிக்கைசிங்கப்பூர் பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் கூறிய கருத்துக்களின் தமிழாக்கம்
September 04th, 12:45 pm
சிங்கப்பூர் பிரதமராக பதவியேற்ற பிறகு இந்தியாவிற்கு தமது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள அந்நாட்டு பிரதமர் வோங்கை வரவேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்த ஆண்டு நமது தூதரக உறவுகள் ஏற்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இந்த பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.இந்திய - குரேஷிய குடியரசின் பிரதமர்கள் சந்திப்பு
June 18th, 11:40 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜாக்ரெப் நகரில் குரோஷிய குடியரசின் பிரதமர் திரு ஆண்ட்ரேஜ் பிளென்கோவிக்கை சந்தித்து பேசினார். இந்தியப் பிரதமர் குரேஷியாவிற்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். முன்னதாக வரலாற்று சிறப்புமிக்க பான்ஸ்கி ட்வோரி அரண்மனைக்கு வருகை தந்த பிரதமருக்கு அந்நாட்டு பிரதமர் பிளென்கோவிக் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தார்.குஜராத் மாநிலம் புஜ் பகுதியில் வளர்ச்சிப்பணிகள் தொடக்க நிகழ்வில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
May 26th, 05:00 pm
குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகா திரு மனோகர் லால் அவர்களே, அமைச்சரவையின் இதர உறுப்பினர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டப்பேரவை உறுப்பினர்களே, இதர மதிப்பிற்குரிய பிரமுகர்களே, கட்ச் பகுதியின் எனதருமை சகோதர, சகோதரிகளே!குஜராத்தின் புஜ்ஜில் சுமார் ரூ.53,400 கோடி மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார்
May 26th, 04:45 pm
குஜராத்தின் புஜ்ஜில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி சுமார் ரூ.53,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்தவற்றைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். கூட்டத்தில் உரையாற்றிய அவர், கட்ச் மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். புரட்சியாளர்கள் மற்றும் தியாகிகளுக்கு, குறிப்பாக தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் திரு. ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவுக்கு மரியாதை செலுத்தினார். கட்ச்சின் மகன்கள் மற்றும் மகள்களுக்கு அவர்களின் உறுதிப்பாடு மற்றும் பங்களிப்புகளை பிரதமர் விவரித்தார்.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
May 02nd, 02:06 pm
கேரள ஆளுநர் திரு ராஜேந்திர அர்லேகர் அவர்களே, முதலமைச்சர் திரு. பி. விஜயன் அவர்களே, மத்திய அமைச்சரவையைச் சேர்ந்த எனது நண்பர்களே, மேடையில் குழுமியிருக்கும் பிரமுகர்களே, கேரளாவைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளே.கேரளாவில் ரூ. 8,800 கோடி மதிப்புள்ள விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
May 02nd, 01:16 pm
கேரளாவின் திருவனந்தபுரத்தில் இன்று ரூ.8,800 கோடி மதிப்புள்ள விழிஞ்ஞம் சர்வதேச ஆழ்கடல் பன்னோக்கு துறைமுகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். பகவான் ஆதி சங்கராச்சாரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், மூன்று ஆண்டுகளுக்கு முன், செப்டம்பரில், ஆதி சங்கராச்சாரியாரின் பிறந்த இடத்திற்குச் செல்லும் பாக்கியம் தனக்குக் கிடைத்ததை எடுத்துரைத்தார். தனது நாடாளுமன்றத் தொகுதியான காசியில் உள்ள விஸ்வநாதர் ஆலய வளாகத்தில் ஆதி சங்கராச்சாரியாரின் பிரமாண்டமான சிலை நிறுவப்பட்டது பற்றி அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தச் சிலை ஆதி சங்கராச்சாரியாரின் மகத்தான ஆன்மீக ஞானம் மற்றும் போதனைகளுக்கு புகழ் சேர்ப்பதாக அவர் கூறினார். உத்தராகண்டில் உள்ள புனித கேதார்நாத் ஆலயத்தில் ஆதி சங்கராச்சாரியாரின் தெய்வீக சிலையைத் திறந்து வைக்கும் பெருமையும் தனக்குக் கிடைத்ததை அவர் நினைவுகூர்ந்தார். கேதார்நாத் கோயிலின் கதவுகள் இன்று பக்தர்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது மற்றொரு சிறப்பு நிகழ்வாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார். கேரளாவைச் சேர்ந்த ஆதி சங்கராச்சாரியார், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மடங்களை நிறுவி, நாட்டின் மனசாட்சியை விழிப்படையச் செய்தார் என்பதை பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். ஒன்றுபட்ட, ஆன்மீக ரீதியில் ஒளி பெற்ற பாரதத்திற்கு அவரது முயற்சிகள் அடித்தளம் அமைத்தன என்பதை பிரதமர் எடுத்துரைத்தார்.பிரதமரின் தாய்லாந்து பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள்
April 03rd, 08:36 pm
இந்தியா-தாய்லாந்து உத்திசார் ஒத்துழைப்பை நிறுவுவது குறித்த கூட்டுப் பிரகடனம் வெளியிடப்பட்டது.கிரீஸ் பிரதமருடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடல்
November 02nd, 08:22 am
கிரீஸ் பிரதமர் திரு. கைரியாகோஸ் மிட்சோடகிஸ் பிரதமர் திரு. நரேந்திர மோடியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.குஜராத் மாநிலம் லோதலில் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
October 09th, 03:56 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, குஜராத் மாநிலம் லோதலில் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை மேம்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் இரண்டு கட்டங்களாக நிறைவேற்றப்படும்.Cabinet Approves Mission Mausam for Advanced Weather and Climate Services
September 11th, 08:19 pm
The Union Cabinet, led by PM Modi, has approved Mission Mausam with a Rs. 2,000 crore outlay to enhance India's weather science, forecasting, and climate resilience. The initiative will use cutting-edge technologies like AI, advanced radars, and high-performance computing to improve weather predictions and benefit sectors like agriculture, disaster management, and transport.கிரீஸ் பிரதமரின் இந்திய பயணத்தின் போது அவருடன் இணைந்து நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம் (பிப்ரவரி 21, 2024)
February 21st, 01:30 pm
பிரதமர் மிட்சோடாகிஸ் மற்றும் அவரது குழுவினரை இந்தியாவுக்கு வரவேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த ஆண்டு நான் கிரீஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட நிலையில், அவரது இந்த இந்தியப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும். பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு, கிரீஸ் நாட்டுப் பிரதமர் இந்தியாவுக்கு வந்திருப்பது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும்.ஜனவரி 16, 17 தேதிகளில் ஆந்திரா மற்றும் கேரளாவுக்குப் பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்
January 14th, 09:36 pm
ஜனவரி 16-ம் தேதி மதியம் 1.30 மணிக்கு ஆந்திர மாநிலம் லேபக்ஷியில் உள்ள வீரபத்ரர் கோயிலில் பிரதமர் பூஜை மற்றும் தரிசனம் செய்கிறார். பிற்பகல் 3.30 மணியளவில், ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், பாலசமுத்திரம் செல்லும் பிரதமர், தேசிய சுங்க, மறைமுக வரிகள் மற்றும் போதைப்பொருள் அகாடமியின் (என்.ஏ.சி.ஐ.என்) புதிய வளாகத்தைத் திறந்து வைக்கிறார். இந்திய வருவாய் பணியின் (சுங்கம் மற்றும் மறைமுக வரிகள்) 74 மற்றும் 75 வது தொகுதியின் பயிற்சி அதிகாரிகள் மற்றும் பூட்டானின் ராயல் குடிமைப்பணியின் பயிற்சி அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார்.2024 ஜனவரி 2 மற்றும் 3-ம் தேதிகளில் தமிழ்நாடு, லட்சத்தீவு மற்றும் கேரளாவுக்குப் பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்
December 31st, 12:56 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி 2024 ஜனவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் லட்சத்தீவுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2023 இல் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
October 17th, 11:10 am
உலகம் முழுவதிலுமிருந்து வரும் விருந்தினர்கள், எனது அமைச்சரவை சகாக்கள், கோவா மற்றும் மகாராஷ்டிரா முதலமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர்கள், பிற பிரமுகர்கள், பெண்கள் மற்றும் பெருமக்களே வணக்கம் !உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2023-ஐ பிரதமர் தொடங்கி வைத்தார்
October 17th, 10:44 am
உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2023-ன் மூன்றாவது பதிப்பைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (17.10.2023) காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்தியக் கடல்சார் நீலப் பொருளாதாரத்திற்கான அமிர்தகாலப் பார்வை 2047 என்ற செயல்திட்ட வரைவையும் பிரதமர் வெளியிட்டார். இந்த எதிர்காலத் திட்டத்திற்கு இணங்க, இந்தியக் கடல்சார் நீலப் பொருளாதாரத்திற்கான அமிர்தகாலப் பார்வை 2047-உடன் இணைந்த ரூ. 23,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நாட்டின் கடல்சார் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறந்த தளத்தை இந்த உச்சிமாநாடு வழங்குகிறது.