Barak Valley will become a major logistics and trade hub for the North East: PM Modi in Silchar, Assam
March 14th, 11:10 am
Launching multiple development projects worth ₹23,550 crore in Silchar, Assam, PM Modi said the projects will further empower Barak Valley as a logistics hub for the entire North East. He laid the foundation stone for the Shillong–Silchar High-Speed Corridor, noting it will boost local industry, agriculture and tourism. He cautioned that the hard-won era of peace and progress must be protected from regressive forces.அசாம் மாநிலம் சில்சாரில் ரூ. 23,550 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்
March 14th, 10:45 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (14.03.2026) அசாமின் சில்சாரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார். நிகழ்சியில் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, சிறந்த நிலமான பராக் பள்ளத்தாக்கு வருவது எப்போதும் தமக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த அனுபவமாகும் என்று கூறினார். வரலாறும் மொழியும் ஒன்றிணைந்து ஒரு தனித்துவமான பிராந்திய அடையாளத்தை உருவாக்கியுள்ள இந்தப் பள்ளத்தாக்கின் நுழைவாயிலாக சில்சார் செயல்படுகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். பெங்காலி, அசாமி, பழங்குடி மரபுகள் ஒற்றுமையுடன் ஒன்றாக வளர்கின்றன எனவும் இப்பகுதியின் வலிமை அதன் பன்முகத்தன்மையில் உள்ளது என்றும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். பராக் பள்ளத்தாக்கின் பன்முகத்தன்மை அதன் மிகப்பெரிய சொத்து எனவும் அது சகோதரத்துவ உணர்வை வளர்க்கிறது என்றும் பிரதமர் கூறினார்.பிரதமர் அசாம் மாநிலத்தில் மார்ச் 13-14 தேதிகளில் பயணம் மேற்கொள்கிறார்
March 12th, 05:33 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி, மார்ச் 13-14 ஆகியத் தேதிகளில், அசாம் மாநிலத்தில் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது, கோக்ரஜார், குவஹாத்தி மற்றும் சில்சார் பகுதிகளில் ரூ 47,800 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்றது திட்டங்களை தொடங்கியும் வைக்கிறார்.