கூட்டறிக்கை: இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் அரசு முறை குவைத் பயணம் (டிசம்பர் 21-22, 2024)

December 22nd, 07:46 pm

குவைத் நாட்டின் அமீரான ஷேக் மெஷல் திரு.அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 டிசம்பர் 21-22 தேதிகளில் குவைத்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அவர் குவைத் செல்வது இதுவே முதல் முறையாகும். பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 21, 2024 அன்று குவைத்தில் 26-வது அரேபிய வளைகுடா கோப்பையின் தொடக்க விழாவில் மேதகு அமீர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் 'கௌரவ விருந்தினராகக்' கலந்து கொண்டார்.

குவைத்தின் பட்டத்து இளவரசரை பிரதமர் சந்தித்தார்

December 22nd, 05:32 pm

குவைத் நாட்டின் பட்டத்து இளவரசர் ஷேக் சபா அல்-கலீத் அல்-ஹமத் அல்-முபாரக் அல்-சபாவை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார். 2024 செப்டம்பரில் ஐநா பொதுச்சபை அமர்வின்போது , பட்டத்து இளவரசரை சந்தித்ததை பிரதமர் அன்புடன் நினைவு கூர்ந்தார்.

குவைத் நாட்டின் பிரதமராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள ஷேக் சபா அல்-கலீத் அல்-ஹமாத் அல்-சபாவுக்கு பிரதமர் வாழ்த்து

December 08th, 10:48 am

குவைத் நாட்டின் பிரதமராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள மேதகு ஷேக் சபா அல்–கலீத் அல்–ஹமாத் அல்–சபாவுக்கு, பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.