கூட்டறிக்கை: இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் அரசு முறை குவைத் பயணம் (டிசம்பர் 21-22, 2024)
December 22nd, 07:46 pm
குவைத் நாட்டின் அமீரான ஷேக் மெஷல் திரு.அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 டிசம்பர் 21-22 தேதிகளில் குவைத்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அவர் குவைத் செல்வது இதுவே முதல் முறையாகும். பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 21, 2024 அன்று குவைத்தில் 26-வது அரேபிய வளைகுடா கோப்பையின் தொடக்க விழாவில் மேதகு அமீர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் 'கௌரவ விருந்தினராகக்' கலந்து கொண்டார்.குவைத் அமீரை பிரதமர் சந்தித்தார்
December 22nd, 05:08 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று குவைத் அமிர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவைச் சந்தித்தார். இரு தலைவர்களுக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும். பயான் அரண்மனையை வந்தடைந்த பிரதமருக்கு , குவைத் பிரதமர் அஹ்மத் அல்-அப்துல்லா அல்-அஹ்மத் அல்-சபா சம்பிரதாய முறையில் வரவேற்பு அளித்தார்.குவைத்தின் உயரிய தேசிய விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார் பிரதமர்
December 22nd, 04:37 pm
குவைத்தின் உயரிய தேசிய விருதான ஆர்டர் ஆஃப் முபாரக் அல்-கபீர் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. குவைத்தின் அமீர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா பிரதமருக்கு இந்த விருதை வழங்கிக் கௌரவித்தார். குவைத் பிரதமர் ஷேக் அகமது அல்-அப்துல்லா அல்-அஹ்மத் அல்-சபாவும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அரேபிய வளைகுடா கோப்பை கால்பந்து போட்டியில் சிறப்பு விருந்தினராக பிரதமர் பங்கேற்பு
December 21st, 10:24 pm
குவைத் அமீர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு. நரேந்திர மோடி குவைத்தில் 26-வது அரேபிய வளைகுடா கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பிரம்மாண்டமான தொடக்க விழாவில் குவைத் பிரதமர் மேதகு அமீர், பட்டத்து இளவரசர் மற்றும் மேதகு குவைத் பிரதமர் ஆகியோருடன் அவர் இணைந்து கொண்டார். குவைத் தலைவர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமற்ற முறையில் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பாகவும் இந்த நிகழ்ச்சி அமைந்தது.குவைத் சென்றடைந்தார் பிரதமர் மோடி
December 21st, 03:39 pm
குவைத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 43 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் பயணம் செய்வது இதுவே முதல்முறை. தனது பயணத்தின் போது, பிரதமர் மோடி அமீர், பட்டத்து இளவரசர் மற்றும் குவைத் பிரதமர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அரேபிய வளைகுடா கோப்பையின் தொடக்க விழாவில் அவர் இந்திய சமூகத்தினருடன் உரையாடுவார்குவைத் பயணத்திற்கு முன்னதாக பிரதமர் வெளியிட்ட அறிக்கை
December 21st, 09:21 am
குவைத் அரசின் அமீர் திரு ஷேக் மெஷல் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபாவின் அழைப்பை ஏற்று நான் குவைத்துக்கு இரண்டு நாள் பயணத்தை இன்று தொடங்குகிறேன்.பிரதமர் மோடி 2024 டிசம்பர் 21 முதல் 22 வரை குவைத் செல்கிறார்
December 19th, 11:45 am
பிரதம மந்திரி திரு நரேந்திர மோடி, 2024 டிசம்பர் 21-22 தேதிகளில் குவைத் மாநிலத்தின் அமீர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் அழைப்பின் பேரில் குவைத் செல்கிறார். 43 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் குவைத்துக்குப் பயணம் செய்வது இதுவே முதல்முறையாகும்.குவைத்தின் புதிய அமீருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
December 20th, 10:22 pm
குவைத்தின் புதிய அமீராக இன்று பொறுப்பேற்றுள்ள ஷேக் மெஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.