டாக்டர் சங்கர் ராவ் தத்வாவாடி மறைவுக்கு பிரதமர் இரங்கல்
March 13th, 08:54 pm
டாக்டர் சங்கர் ராவ் தத்வாவாடியின் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தேச கட்டமைப்பு மற்றும் இந்தியாவின் கலாச்சார மறுமலர்ச்சிக்கு அவரது விரிவான பங்களிப்புக்காக டாக்டர் சங்கர் ராவ் தத்வாவாடி நினைவுகூரப்படுவார் என்று திரு மோடி கூறினார். “இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல சந்தர்ப்பங்களில் அவருடன் உரையாடியதை நான் அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். சித்தாந்தத்தில் அவரது தெளிவும், நுணுக்கமான பாணியும் எப்போதும் தனித்து நிற்கிறது என்று திரு மோடி கூறினார்.