செபக் தக்ரா உலகக் கோப்பை 2025-ல் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கத்தை வென்ற ஆடவர் ரெகு அணிக்கு பிரதமர் வாழ்த்து

March 26th, 03:59 pm

செபக் தக்ரா உலகக் கோப்பை 2025 போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான முதலாவது தங்கப் பதக்கத்தை வென்றதற்காக அணிக்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.