இந்தியா-சிங்கப்பூர் கூட்டறிக்கை

September 04th, 08:04 pm

அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்திருந்த சிங்கப்பூர் பிரதமர் மாண்புமிகு திரு லாரன்ஸ் வோங்-ன் பயணத்தின் போது, இந்தியா மற்றும் சிங்கப்பூரிடையே விரிவான உத்திசார் கூட்டண்மைக்கான செயல்திட்டம் குறித்த கூட்டறிக்கை

சிங்கப்பூர் பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் கூறிய கருத்துக்களின் தமிழாக்கம்

September 04th, 12:45 pm

சிங்கப்பூர் பிரதமராக பதவியேற்ற பிறகு இந்தியாவிற்கு தமது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள அந்நாட்டு பிரதமர் வோங்கை வரவேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்த ஆண்டு நமது தூதரக உறவுகள் ஏற்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இந்த பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

செமிகான் இந்தியா 2025 நிகழ்வின்போது முன்னணி தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் பிரதமர் உரையாடினார்

September 03rd, 08:38 pm

செமிகான் இந்தியா 2025 நிகழ்வின்போது முன்னணி தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். “வலிமையான உள்கட்டமைப்பை உருவாக்குதல், புத்தாக்கம் மற்றும் திறன் வளர்ப்பில் கவனம் செலுத்துவதை உள்ளடக்கி, இந்தத் துறையில் இந்தியாவின் தொடர் சீர்திருத்த பயணம் பற்றி நான் பேசினேன்”, என்று திரு மோடி குறிப்பிட்டார்.

தில்லியின் யஷோபூமியில் நடைபெற்ற செமிகான் இந்தியா 2025 விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

September 02nd, 10:40 am

எனது அமைச்சரவை நண்பர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, தில்லி முதல்வர் திருமிகு ரேகா குப்தா அவர்களே, ஒடிசா முதல்வர் திரு மோகன் சரண் மாஜி அவர்களே, மத்திய இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாத் அவர்களே, செமி-ன் தலைவர் திரு அஜித் மனோச்சா அவர்களே, இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த குறைக்கடத்தி துறையின் தலைமை நிர்வாக அதிகாரிகளே மற்றும் அவர்களது கூட்டாளிகளே, பல்வேறு நாடுகளிலிருந்து இங்கு வந்துள்ள எங்கள் விருந்தினர்களே, புத்தொழில் நிறுவனங்களுடன் தொடர்புடைய தொழில்முனைவோர்களே, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எனது இளம் மாணவ நண்பர்களே!, தாய்மார்களே!, அன்பர்களே!

பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் செமிகான் இந்தியா 2025-ஐ தொடங்கிவைத்தார்

September 02nd, 10:15 am

இந்தியாவின் குறைக்கடத்தி துறையை வளர்ச்சியடைய செய்யும் நோக்கில் செமிகான் இந்தியா – 2025-ஐ புதுதில்லி யஷோபூமியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த குறைக்கடத்தி தொழில்துறையின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் அவர்களுடைய பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளதை குறிப்பிட்ட பிரதமர், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை தந்துள்ள இளம் மாணவர்கள், புத்தொழில் நிறுவனங்களுடன் தொடர்புடைய தொழில்முனைவோர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விருந்தினர்கள் ஆகியோரை தாம் வரவேற்பதாக கூறினார்.

புதுதில்லி யஷோபூமியில் செப்டம்பர் 2 அன்று செமிகான் இந்தியா – 2025 மாநாட்டை பிரதமர் தொடங்கி வைக்கிறார்

September 01st, 03:30 pm

இந்தியாவில் குறைக்கடத்தி உற்பத்தியை வளர்ச்சியடையச் செய்யும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லி யஷோபூமியில் செப்டம்பர் 2 அன்று காலை 10 மணிக்கு செமிகான் - இந்தியா 2025 மாநாட்டை தொடங்கி வைக்கவுள்ளார். செப்டம்பர் 3 அன்று காலை 9.30 மணிக்கு நடைபெறும் தலைமைச் செயல் அதிகாரிகள் பங்கேற்கும் மாநாட்டிலும் பிரதமர் பங்கேற்க உள்ளார்.