புகழ்பெற்ற சிற்பி ராம் சுதார் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
December 18th, 12:10 pm
ராம் சுதார் ஒரு அற்புதமான சிற்பி என்றும், அவரது கைவண்ணம், கெவாடியாவில் உள்ள ஒற்றுமைச் சிலை உட்பட இந்தியாவின் மிகவும் பிரபலமான சில அடையாளச் சின்னங்களை நமக்கு வழங்கியுள்ளது என்றும் பிரதமர் கூறியுள்ளார். அவரது படைப்புகள் இந்தியாவின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் கூட்டு உணர்வின் சக்திவாய்ந்த வெளிப்பாடுகளாக எப்போதும் போற்றப்படும் என்றும், அவர் வரும் தலைமுறையினருக்காக தேசியப் பெருமையை அழியாததாக்கியுள்ளார் என்றும் திரு மோடி கூறியுள்ளார். அவரது படைப்புகள் கலைஞர்களுக்கும் மக்களுக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.