ரஷ்ய அதிபருடனான சந்திப்பின் போது பிரதமரின் அறிக்கை
September 01st, 01:24 pm
நான் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களை சந்திப்பதை எப்போதும் நினைவு கூரக்கூடிய அம்சமாக நான் உணர்கிறேன். பல்வேறு தலைப்புகளில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கான வாய்ப்பை இது அளித்துள்ளது.சீனாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புதினை சந்தித்தார்
September 01st, 01:08 pm
சீனாவில் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டிற்கு இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புதினை இன்று (01.09.2025) சந்தித்துப் பேசினார். பொருளாதாரம், நிதி, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புக் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இத்துறைகளில் இருதரப்பு உறவுகளில் நீடித்த வளர்ச்சிக் குறித்து, அவர்கள் திருப்தி தெரிவித்தனர்.ரஷ்யா-உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து பிரதமர் மோடியின் பெரிய அறிக்கை
September 01st, 12:48 pm
சீனாவின் தியான்ஜினில் நடைபெறும் SCO உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் ஒரு சந்திப்பை நடத்தினார், அங்கு உக்ரைன் மோதல் ஒரு மைய விவாதப் புள்ளியாக இருந்தது. அமைதிக்கான சமீபத்திய முயற்சிகளை பிரதமர் மோடி வரவேற்றார், மேலும் அனைத்து தரப்பினரும் ஆக்கப்பூர்வமாக முன்னேறுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். மோதலை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அவசரத் தேவையை அவர் வலியுறுத்தினார், மேலும் நீடித்த அமைதிக்கான பாதையைக் கண்டுபிடிப்பது அவசியம் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். பரந்த மனித பரிமாணத்தை வலியுறுத்திய பிரதமர் மோடி, இது ஒரு பிராந்திய அக்கறை மட்டுமல்ல, மனிதகுலத்தின் அழைப்பு என்றும் கூறினார்.25-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
September 01st, 10:14 am
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்துள்ள தமக்கு உற்சாக வரவேற்பு அளித்து சிறப்பாக உபசரித்த சீன அதிபர் திரு ஜி ஜிங்பிங் அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 25-வது உச்சிமாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்.
September 01st, 10:00 am
சீனாவின் தியான்ஜின் நகரில் 2025, ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 25-வது உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வளர்ச்சிக்கான திட்டமிடல், உலகளாவிய நிர்வாக சீர்திருத்தம், தீவிரவாதத்தை எதிர்கொள்ளுதல், அமைதி மற்றும் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் நிதிசார் ஒத்துழைப்பு மற்றும் நீடித்த வளர்ச்சிக் குறித்து இக்கூட்டத்தில் ஆக்கப்பூர்வமாக விவாதிக்கப்பட்டது.பிரதமர் மோடி சீனாவின் தியான்ஜின் வந்தடைந்தார்
August 30th, 04:00 pm
பிரதமர் நரேந்திர மோடி சிறிது நேரத்திற்கு முன்பு சீனா வந்தடைந்தார். இந்த பயணத்தின் போது, அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், பிரதமர் தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார். உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக அதிபர் ஜி ஜின்பிங், அதிபர் புடின் மற்றும் பிற தலைவர்களை அவர் சந்திப்பார்.அரசுமுறைப் பயணமாக ஜப்பான் மற்றும் சீனாவுக்குப் புறப்பட்டுச் செல்வதற்கு முன் பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை
August 28th, 08:40 pm
ஜப்பான் பிரதமர் திரு ஷிகெரு இஷிபாவின் அழைப்பின் பேரில், 15வது வருடாந்திர உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக ஜப்பான் செல்கிறேன்.பிரதமரின் ஜப்பான் மற்றும் சீனா பயணம்
August 22nd, 06:15 pm
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி ஆகஸ்ட் 29–30, 2025 வரை ஜப்பானுக்கும், ஆகஸ்ட் 31–1, 2025 வரை சீனாவுக்கும் பயணம் மேற்கொள்வார். ஜப்பானில், பிரதமர் 15வது இந்தியா–ஜப்பான் ஆண்டு உச்சி மாநாட்டில் பங்கேற்று, ஜப்பான் பிரதமர் இஷிபாவுடன் கலந்துரையாடுவார். சீனாவில், பிரதமர் தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார்.சீன வெளியுறவு அமைச்சர் திரு வாங் யி, பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் சந்திப்பு
August 19th, 07:34 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான திரு. வாங் யியை இன்று சந்தித்தார்.22-வது இந்திய-ரஷ்ய வருடாந்திர உச்சிமாநாட்டைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கை
July 09th, 09:54 pm
இந்தப் பயணத்தின்போது, அதிபர் திரு. விளாடிமிர் புடின் ரஷ்யாவின் மிக உயரிய விருதான ஆர்டர் ஆஃப் செயிண்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தலரை பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு வழங்கினார். இந்தியா, ரஷ்யா இடையேயான சிறப்பான மற்றும் முன்னுரிமை பெற்ற பாதுகாப்பு கூட்டாண்மை மற்றும் இரு நாட்டு மக்களுக்கு இடையிலான நட்புறவு ஆகியவற்றில் சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக. இந்த விருது வழங்கப்பட்டது.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடியின் உரை
July 04th, 01:29 pm
2017-ம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமைப் பொறுப்பில் கஜகஸ்தான் இருந்தபோது உறுப்பினராக சேர்க்கப்பட்டதை இந்தியா பாராட்டுதலுடன் நினைவு கூர்கிறது. அதிலிருந்து, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ஒரு முழு சுற்று தலைமைப் பொறுப்புகளை நாம் நிறைவு செய்துள்ளோம். 2020-ம் ஆண்டில் அரசுத் தலைவர்களின் கவுன்சில் கூட்டத்தையும், 2023-ம் ஆண்டில் நாட்டுத் தலைவர்களின் கவுன்சில் கூட்டத்தையும் இந்தியா நடத்தியது. எங்களது வெளியுறவுக் கொள்கையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடியின் உரை
July 04th, 01:25 pm
உச்சிமாநாட்டில் நேரடியாக கலந்து கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், பிரதமரின் உரையை வாசித்தார்.கஜக்ஸ்தான் அதிபர், பிரதமருடன் தொலைபேசியில் உரையாடினார்
June 25th, 06:21 pm
கஜக்ஸ்தான் அதிபர், பிரதமருடன் தொலைபேசியில் உரையாடினார்23-வது ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடியின் உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு
July 04th, 12:30 pm
இன்று, 23-வது ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். கடந்த 20 ஆண்டுகளில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பானது முழு ஆசியாவின் அமைதி, செழிப்பு மற்றும் வளர்ச்சிக்கு உதவும் தளமாக உருவெடுத்துள்ளது. நாங்கள் ஆசியா முழுவதையுமே குடும்பமாக பார்க்கிறோம்.பிரதமர் திரு நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் ஆலோசனை
December 16th, 03:51 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புதினுடன் இன்று தொலைபேசியில் ஆலோசனை மேற்கொண்டார்.துருக்கி அதிபர் எர்டோகனுடன் பிரதமர் சந்திப்பு
September 16th, 11:41 pm
சமர்க்கண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டுக்கு இடையே துருக்கி அதிபர் திரு ரெசெப் தையிப் எர்டோகனை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டுக்கு இடையே இரான் அதிபருடன் பிரதமர் சந்திப்பு
September 16th, 11:06 pm
உஸ்பெகிஸ்தானின் சமார்கண்டில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 22-வது கூட்டத்திற்கிடையே இரான் அதிபர் மேதகு இப்ராஹிம் ரெய்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். 2021 ஆம் ஆண்டில் அதிபராக ரெய்சி பதவியேற்ற பிறகு இருவரும் சந்திப்பது இதுதான் முதல் முறை.உஸ்பெகிஸ்தானின் சமார்கண்டில் ரஷ்ய அதிபருடன் பிரதமர் சந்திப்பு
September 16th, 08:42 pm
உஸ்பெகிஸ்தானின் சமார்கண்டில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 22-வது கூட்டத்திற்கிடையே, ரஷ்ய அதிபர் மேதகு திரு விளாடிமிர் புடினை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசினார்.பிரதமருக்கும் உஸ்பெகிஸ்தான் அதிபருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை
September 16th, 08:34 pm
உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரசுத் தலைவர்கள் கவுன்சிலின் 22 வது கூட்டத்திற்கு இடையே உஸ்பெகிஸ்தான் குடியரசின் அதிபர் மேன்மை தங்கிய திரு சவுகத் மிர்சியோயெவைப் பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 16 அன்று சந்தித்தார்.எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆற்றிய உரை
September 16th, 01:30 pm
இன்று உலகம் முழுவதும் பெருந்தொற்றுக்குப் பிந்தைய பொருளாதார மீட்டுருவாக்க சவால்களை எதிர்கொண்டுள்ள போது, எஸ்சிஓ-வின் பங்கு மிக முக்கியம் வாய்ந்ததாக மாறியுள்ளது. எஸ்சிஓ உறுப்பு நாடுகள் உலக ஜிடிபியில் சுமார் 30 சதவீதத்தை பங்களிக்கின்றன. உலக மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் எஸ்சிஓ நாடுகளில் வசிக்கின்றனர். எஸ்சிஓ உறுப்பு நாடுகளுக்கு இடையே பெரும் ஒத்துழைப்பு, பரஸ்பர நம்பிக்கை ஆகியவற்றுக்கு இந்தியா ஆதரவளிக்கிறது. பெருந்தொற்று, உக்ரைன் பிரச்சனை ஆகியவை உலக விநியோக சங்கிலியில் ஏராளமான தடைகளுக்கு காரணமாகி உள்ளன. இதன் காரணமாக உலகம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எரிசக்தி மற்றும் உணவு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. நமது பிராந்தியத்தில், நம்பிக்கையான, வலுவான பல்வேறு வகையான விநியோக சங்கிலிகளை உருவாக்க எஸ்சிஓ முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு சிறப்பான தொடர்புகளுடன் முழுமையான போக்குவரத்து உரிமைகளை வழங்குவது அவசியமாகும்.