'விக்சித் பாரத்' (வளர்ந்த இந்தியா) என்ற தீர்மானம் நிச்சயமாக நிறைவேறும்: பிரதமர் மோடி மன் கீ பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில்
December 28th, 11:30 am
ஆண்டின் இறுதி ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில், 2025 ஆம் ஆண்டில், தேசிய பாதுகாப்பு, விளையாட்டு, அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் உலகளாவிய தளங்களில் இந்தியா தனது முத்திரையைப் பதித்ததாக பிரதமர் மோடி கூறினார். 2026 ஆம் ஆண்டில் புதிய தீர்மானங்களுடன் நாடு முன்னேறத் தயாராக உள்ளது என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். 'விக்சித் பாரத்' (வளர்ந்த இந்தியா) இளம் தலைவர்கள் உரையாடல், வினாடி வினா போட்டி, ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2025 மற்றும் ஃபிட் இந்தியா இயக்கம் போன்ற இளைஞர்களை மையமாகக் கொண்ட முயற்சிகளையும் பிரதமர் எடுத்துரைத்தார்.23-வது இந்திய- ரஷ்ய வருடாந்திர உச்சிமாநாட்டைத் தொடர்ந்து கூட்டு அறிக்கை
December 05th, 05:43 pm
இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்பு மற்றும் சலுகை பெற்ற உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்கள் ஆதரவை தலைவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். அக்டோபர் 2000-ல் அதிபர் திரு விளாடிமிர் புதினின் முதல் அரசு முறை வருகையின் போது இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் நிறுவப்பட்ட உத்திசார் கூட்டாண்மை குறித்த பிரகடனத்தின் 25-வது ஆண்டு நிறைவை இந்த வருடம் குறிக்கிறது.Tribal pride has been an integral part of India's consciousness for thousands of years: PM Modi in Dediapada, Gujarat
November 15th, 03:15 pm
In his address at the Janjatiya Gaurav Diwas programme marking the 150th Birth Anniversary of Bhagwan Birsa Munda in Dediapada, PM Modi paid homage to him. Launching development projects worth over ₹9,700 crore, the PM said tribal pride has been an integral part of India’s consciousness for thousands of years. Highlighting that Vajpayee Ji’s government created a separate Tribal Affairs Ministry, he added that his government has significantly increased the ministry’s budget.குஜராத்தின் தெடியாபாடாவில் தர்த்தி ஆபா பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பழங்குடியினர் கௌரவ தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
November 15th, 03:00 pm
குஜராத்தின் தெடியாபாடாவில் இன்று நடைபெற்ற தர்த்தி ஆபா பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் பழங்குடியினர் கௌரவ தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வில், ரூ 9,700 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை அவர் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நர்மதாவின் புனித பூமி இன்று மற்றொரு வரலாற்று நிகழ்வைக் காண்கிறது என்று கூறிய திரு மோடி, அக்டோபர் 31 -ம் தேதி, சர்தார் படேலின் 150-வது பிறந்தநாளில் இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் வகையில் அதே இடத்தில் கொண்டாடப்பட்ட பாரத் விழா தொடங்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். இன்று பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாளின் பிரமாண்டமான கொண்டாட்டத்துடன்,அந்த விழாவின் உச்சக்கட்டத்தை நாம் காண்கிறோம் என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்த மங்களகரமான சந்தர்ப்பத்தில் பகவான் பிர்சா முண்டாவுக்கு அவர் மரியாதை செலுத்தினார். குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் முழு பழங்குடிப் பகுதியிலும் சுதந்திர உணர்வை எழுப்பிய கோவிந்த் குருவின் ஆசீர்வாதங்களும் இந்த நிகழ்வோடு தொடர்புடையவை என்பதை பிரதமர் எடுத்துரைத்தார். சிறிது நேரத்திற்கு முன்பு தேவமோக்ரா அன்னை கோவிலுக்குச் செல்லும் பாக்கியம் தமக்குக் கிடைத்ததாகவும் அவர் கூறினார்.உயிரி மருத்துவ ஆராய்ச்சி தொழில் திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
October 01st, 03:28 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், உயிரி மருத்துவ ஆராய்ச்சி தொழில் திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகளைத் தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உயிரி தொழில்நுட்பத் துறை, இங்கிலாந்தின் வெல்கம் டிரஸ்ட் மற்றும் எஸ்பிவி இந்தியா கூட்டமைப்பு 2025-26 முதல் 2030-31 வரை, கூடுதலாக அடுத்த ஆண்டுகள் வரையிலும், (2031-32 முதல் 2037-38 வரை) அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சிப் பணிகள் மற்றும் மானிய உதவிகளை வழங்குவதற்காக, மொத்தம் 1,500 கோடி ரூபாய் செலவில், மூன்றாம் கட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவுள்ளன.திறன் கட்டமைப்பு மற்றும் மனிதவள மேம்பாடு குறித்த அறிவியல், தொழில் ஆராய்ச்சித்துறை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
September 24th, 05:38 pm
2021-22 முதல் 2025-26 வரையிலான 15-வது நிதிக்குழுவின் சுழற்சிக்காலத்தில் ரூ. 2277.397 கோடி ஒதுக்கீட்டுடன் திறன் கட்டமைப்பு மற்றும் மனிதவள மேம்பாடு குறித்த அறிவியல், தொழில் ஆராய்ச்சித்துறை திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.India’s manuscripts contain the footprints of the development journey of all humanity: PM Modi
September 12th, 04:54 pm
In his address at the International Conference on Gyan Bharatam, PM Modi emphasised that the Gyan Bharatam Mission is set to become a proclamation of India’s culture, literature, and consciousness. He remarked that India’s knowledge tradition stands on four foundational pillars — Preservation, Innovation, Addition, and Adaptation. He appealed to the country’s youth to actively participate in the mission, stressing the importance of exploring the past through technology.புதுதில்லியில் நடைபெற்ற ஞான பாரதம் சர்வதேச மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்
September 12th, 04:45 pm
புதுதில்லியின் விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற ஞான பாரதம் சர்வதேச மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் பொற்காலத்தின் மறுமலர்ச்சியை விஞ்ஞான் பவன் இன்று கண்டு களிப்பதாகக் குறிப்பிட்டார். ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் ஞான பாரதம் இயக்கம் பற்றிய அறிவிப்பை தாம் வெளியிட்டதாகவும், மிகக் குறுகிய காலத்திலேயே ஞான பாரதம் சர்வதேச மாநாடு நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார். இந்த இயக்கத்துடன் தொடர்புடைய வலைத்தளமும் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக திரு மோடி கூறினார். இது ஒரு அரசு சார்ந்த அல்லது கல்வி சார்ந்த நிகழ்ச்சி அல்ல என்று கூறிய பிரதமர், இந்தியாவின் கலாச்சாரம், இலக்கியம் மற்றும் உணர்வுகளின் குரலாக ஞான பாரதம் இயக்கம் விளங்கும் என்று தெரிவித்தார். ஆயிரக்கணக்கான தலைமுறைகளின் சிந்தனை மரபுகளை அவர் பிரதிபலித்தார். இந்தியாவின் ஞானம், பாரம்பரியம் மற்றும் அறிவியல் கலாச்சாரங்களை அடிக்கோடிட்டு காட்டி, நாட்டின் தலைசிறந்த முனிவர்கள், துறவிகள் மற்றும் அறிஞர்களின் ஞானம் மற்றும் ஆராய்ச்சியை அவர் பாராட்டினார். ஞான பாரதம் இயக்கத்தின் வாயிலாக இது போன்ற மரபுகள் டிஜிட்டல்மயமாக்கப்படுவதாக திரு மோடி குறிப்பிட்டார். இந்த இயக்கத்திற்காக நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது நல்வாழ்த்துகளை அவர் தெரிவித்துக் கொண்டதுடன் ஞான பாரதம் குழுவிற்கும், கலாச்சார அமைச்சகத்திற்கும் பாராட்டு தெரிவித்தார்.பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் தொலைபேசியில் உரையாடினார்
September 06th, 06:11 pm
பொருளாதாரம், பாதுகாப்பு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். ஹொரைசான் 2047 செயல்திட்டம் , இந்தோ-பசிபிக் செயல்திட்டம் மற்றும் பாதுகாப்பு தொழில்துறை செயல்திட்டத்துக்கு ஏற்ப, இந்தியா-பிரான்ஸ் உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டையும் தலைவர்கள் மீண்டும் பகிர்ந்து கொண்டனர்.விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் உரையாடினார்
August 18th, 08:09 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் தருணத்தை குறிக்கும் வகையில் ஒரு பயனுள்ள உரையாடலை மேற்கொண்டார். இந்த சந்திப்பின் போது, திரு. சுக்லாவின் விண்வெளி அனுபவங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முன்னேற்றங்கள் மற்றும் நாட்டின் லட்சிய திட்டமான விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் - ககன்யான் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.18வது சர்வதேச வானியல் மற்றும் வானியற்பியல் ஒலிம்பியாட் விழாவில் காணொலி வாயிலாக பிரதமர் வெளியிட்ட செய்தியின் தமிழாக்கம்
August 12th, 04:34 pm
64 நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பிரகாசிக்கும் நட்சத்திரங்களுடன் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது. 18வது சர்வதேச வானியல் மற்றும் வானியற்பியல் ஒலிம்பியாட் நிகழ்விற்காக, இந்தியாவிற்கு வந்துள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறேன். இந்தியாவில் பாரம்பரியம் புதுமைகளை சந்திக்கிறது, ஆன்மீகம் அறிவியலை சந்திக்கிறது, ஆர்வம் படைப்பாற்றலை சந்திக்கிறது. பல நூற்றாண்டுகளாக, இந்தியர்கள் வானத்தை கவனித்து முக்கிய கேள்விகளைக் கேட்டு வருகின்றனர். உதாரணமாக, 5 ஆம் நூற்றாண்டில், ஆர்யபட்டா பூஜ்ஜியத்தைக் கண்டுபிடித்தார். பூமி அதன் அச்சில் சுழல்கிறது என்று முதன்முதலில் கூறியவரும் அவரே. உண்மையில், அவர் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கி வரலாற்றை உருவாக்கினார்!18வது சர்வதேச வானியல் மற்றும் வானியற்பியல் ஒலிம்பியாட் விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்
August 12th, 04:33 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி செய்தி மூலம் 18வது சர்வதேச வானியல் மற்றும் வானியற்பியல் ஒலிம்பியாட் நிகழ்வில் உரையாற்றினார். இந்த நிகழ்வில், 64 நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் இணைவதில் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரதமர், சர்வதேச ஒலிம்பியாட் நிகழ்விற்காக இந்தியா வந்துள்ளவர்களை அன்புடன் வரவேற்றார். இந்தியாவில், பாரம்பரியம் புதுமையையும், ஆன்மீகம் அறிவியலையும், ஆர்வம் படைப்பாற்றலையும் சந்திக்கிறது. பல நூற்றாண்டுகளாக, இந்தியர்கள் வானத்தைக் கவனித்து முக்கிய கேள்விகளை எழுப்பி வருகின்றனர் என்று திரு. மோடி கூறினார். 5 ஆம் நூற்றாண்டில் பூஜ்ஜியத்தைக் கண்டுபிடித்து, பூமி அதன் அச்சில் சுழல்கிறது என்று முதன்முதலில் கூறிய ஆர்யபட்டாவின் உதாரணத்தை அவர் மேற்கோள் காட்டினார். உண்மையில், அவர் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கி வரலாற்றை உருவாக்கினார்! என்று பிரதமர் குறிப்பிட்டார்.பிலிப்பைன்ஸ் அதிபரின் இந்திய வருகையால் ஏற்பட்டுள்ள பலன்கள்
August 05th, 04:31 pm
இந்தியா – பிலிப்பைன்ஸ் இடையே உத்திசார் கூட்டாண்மையை ஏற்படுத்துவது குறித்த பிரகடனம்.2047ல் வளர்ந்த இந்தியாவுக்கான பாதை தன்னம்பிக்கையின் மூலம் செல்கிறது: மன் கீ பாத்தில் (மனதின் குரல்) பிரதமர் மோடி
July 27th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை, தேசத்தின் வெற்றிகள், நாட்டுமக்களின் சாதனைகள் பற்றி பேச இருக்கிறோம். கடந்த சில வாரங்களில், அது விளையாட்டுக்களாகட்டும், அறிவியலாகட்டும், கலாச்சாரமாகட்டும்…… நடைபெற்றிருக்கின்ற பல விஷயங்கள் பாரதநாட்டவர்களுக்குப் பெருமை சேர்த்திருக்கின்றன. தற்போது தான் சுபான்ஷு சுக்லா அவர்கள் விண்வெளிப்பயணத்தை நிறைவு செய்து திரும்பியிருப்பது குறித்து நாடெங்கும் பேசப்பட்டு வருகிறது. சுபான்ஷு அவர்கள் தரையைத் தொட்ட போது, மக்கள் உற்சாகமடைந்தார்கள், அனைவர் இதயங்களிலும் சந்தோஷத்தின் திவலைகள் தாண்டவமாடின. தேசமே பெருமிதத்தில் பொங்கியது. ஆகஸ்ட் மாதம் 2023ஆம் தேதியன்று சந்திரயான் – 3 வெற்றிகரமாகத் தரையிறங்கிய வேளையில் தேசத்தில் ஒரு புதிய, அலாதியான சூழல் நிலவியது எனக்கு நினைவிருக்கிறது. அறிவியல் பற்றியும், விண்வெளி குறித்தும் சிறார்கள் மனதிலே புதியதொரு ஆர்வம் துளிர்த்தது. நாங்களும் விண்வெளிக்குப் பயணிப்போம், நாங்களும் நிலவில் கால் பதிப்போம்-விண்வெளி விஞ்ஞானியாக ஆவோம் என்று இப்போதெல்லாம் சின்னச்சின்ன பிள்ளைகளும் கூறி வருகிறார்கள்.சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள கேப்டன் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் நடத்திய கலந்துரையாடலின் தமிழாக்கம்
June 28th, 08:24 pm
இப்போது நீங்கள் தாய்நாடான, பாரத பூமியிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் இந்தியர்களின் இதயங்களுக்கு மிக நெருக்கமாக இருக்கிறீர்கள். உங்கள் பெயரில் மங்களம் இருக்கிறது. உங்கள் பயணம் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகும். இந்த நேரத்தில், நாம் இருவர் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் 140 கோடி இந்தியர்களின் உணர்வுகள் அனைத்தும் என்னிடம் உள்ளன. அனைத்து இந்தியர்களின் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் என் குரல் பிரதிபலிக்கிறது. விண்வெளியில் இந்தியாவின் கொடியை ஏற்றியதற்காக உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நான் அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. எனவே முதலில் சொல்லுங்கள். அங்கு எல்லாம் நன்றாக இருக்கிறதா? நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?பிரதமர் திரு நரேந்திர மோடி சர்வதேச விண்வெளி நிலையத்தில் குழு கேப்டன் சுபன்ஷு சுக்லாவுடன் உரையாடினார்
June 28th, 08:22 pm
சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற முதல் இந்தியரான இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் உரையாடினார். சுபன்ஷு சுக்லா தற்போது இந்திய தாய்நாட்டிலிருந்து மிகத் தொலைவில் இருந்தாலும், அவர் அனைத்து இந்தியர்களின் இதயங்களுக்கும் மிக நெருக்கமானவர் என்று பிரதமர் குறிப்பிட்டார். சுபன்ஷுவின் பெயரே மங்களகரமானது என்றும், அவரது பயணம் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இரண்டு தனிநபர்களுக்கு இடையிலான உரையாடலாக இருந்தாலும், அது 140 கோடி இந்தியர்களின் உணர்ச்சிகளையும் உற்சாகத்தையும் உள்ளடக்கியது என்று திரு. மோடி கூறினார். சுபன்ஷுவுடன் பேசிய குரல், முழு நாட்டின் கூட்டு ஆர்வத்தையும் பெருமையையும் சுமந்து சென்றதாகவும், விண்வெளியில் இந்தியாவின் கொடியை ஏற்றியதற்காக சுபன்ஷுவுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். சுபன்ஷுவின் நல்வாழ்வு குறித்தும், விண்வெளி நிலையத்தில் எல்லாம் சரியாக உள்ளதா என்றும் திரு. மோடி விசாரித்தார்.இந்திய - குரேஷிய குடியரசின் பிரதமர்கள் சந்திப்பு
June 18th, 11:40 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜாக்ரெப் நகரில் குரோஷிய குடியரசின் பிரதமர் திரு ஆண்ட்ரேஜ் பிளென்கோவிக்கை சந்தித்து பேசினார். இந்தியப் பிரதமர் குரேஷியாவிற்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். முன்னதாக வரலாற்று சிறப்புமிக்க பான்ஸ்கி ட்வோரி அரண்மனைக்கு வருகை தந்த பிரதமருக்கு அந்நாட்டு பிரதமர் பிளென்கோவிக் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தார்.இந்தியா-நியூசிலாந்து கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போது பிரதமர் வெளியிட்ட அறிக்கையின் தமிழாக்கம்
March 17th, 01:05 pm
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள பிரதமர் திரு லக்சன் மற்றும் அவரது குழுவினரை நான் அன்புடன் வரவேற்கிறேன். பிரதமர் திரு லக்சன் இந்தியாவுடன் நீண்டகால உறவைக் கொண்டவர். சில நாட்கள் முன்பாக, ஆக்லாந்தில் ஹோலிப் பண்டிகையை அவர் எப்படிக் கொண்டாடினார் என்பதை நாம் அனைவரும் கண்கூடாகக் கண்டோம். நியூசிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்கள் மீது பிரதமர் திரு லக்சன் கொண்டுள்ள அன்பை அவருடன் ஒரு பெரிய சமூக தூதுக்குழு இந்தியாவுக்கு வந்திருப்பதிலிருந்தும் அறியலாம். அவரைப் போன்ற இளமையான, ஆற்றல் வாய்ந்த மற்றும் திறமையான தலைவர் இந்த ஆண்டு ரைசினா உரையாடலின் சிறப்பு விருந்தினராக இருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.தேசிய அறிவியல் தினத்தையொட்டி அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
February 28th, 10:00 am
தேசிய அறிவியல் தினத்தையொட்டி அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.பாகேஸ்வர் தாம் மருத்துவ அறிவியல் மற்றும் ஆய்வு நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
February 23rd, 06:11 pm
இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ள மத்தியப்பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் பட்டேல் அவர்களே, முதலமைச்சர் பாய் மோகன் யாதவ் அவர்களே, ஜெகத் குரு பூஜ்ய ராம் பத்ராச்சாரியா அவர்களே, பாகேஸ்வர் தாம் பீடாதீஸ்வரர் திரு தீரேந்திர சாஸ்திரி அவர்களே, சாத்வி ரீதாம்பரா அவர்களே, சுவாமி சித்தானந்த் சரஸ்வதி அவர்களே, மஹந்த் திரு பாலக் யோகேஷ்சர்தாஸ் அவர்களே, இந்தப் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணுதேவ் சர்மா அவர்களே மற்றும் பிரமுகர்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே!