இந்தியாவிற்கும் பூட்டானுக்கும் இடையே தனித்துவமான மற்றும் வரலாற்று ரீதியான உறவை வலுப்படுத்த நாங்கள் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளோம்: பிரதமர்

February 21st, 07:16 pm

புதுதில்லியில் நடைபெற்ற தலைமைத்துவ மாநாட்டில் பூட்டான் பிரதமர் திரு ஷெரிங் டோப்கேயின் உரையைப் பாராட்டிய பிரதமர் திரு மோடி, இந்தியாவிற்கும், பூட்டானுக்கும் இடையிலான தனித்துவமான மற்றும் வரலாற்று பூர்வமான உறவை வலுப்படுத்த நாங்கள் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளோம் என்றார்.

சோல்(SOUL) தலைமைத்துவப் பண்பு மாநாட்டின் முதல் பதிப்பை தில்லியில் பிப்ரவரி 21-ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்

February 19th, 06:31 pm

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிப்ரவரி 21-ம் தேதி காலை 11 மணியளவில் சோல் முதலாவது தலைமைத்துவ மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். இம்மாநாட்டில் பூடான் பிரதமர் திரு தாஷோ ஷெரிங் டோப்கே சிறப்பு விருந்தினராகச் சிறப்புரையாற்றுகிறார்.