Prime Minister speaks with Crown Prince and PM of Saudi Arabia, HRH Prince Mohammed bin Salman

March 28th, 09:17 pm

PM Modi spoke with Crown Prince and PM of Saudi Arabia, HRH Prince Mohammed bin Salman and discussed the ongoing conflict in West Asia. The PM reiterated India’s condemnation of attacks on regional energy infrastructure. He also thanked the Crown Prince for his continued support for the welfare of the Indian community in Saudi Arabia.

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசருடன் பிரதமர் தொலைபேசியில் உரையாடினார்

March 02nd, 07:50 pm

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான மேன்மைமிகு இளவரசர் முகமது பின் சல்மானுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாடினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி உடன் அரேபிய வெளியுறவு அமைச்சர்கள் குழுவினர் சந்திப்பு

January 31st, 02:39 pm

இந்தியா- அரேபிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் நிலையிலான இரண்டாவது கூட்டத்தில் பங்கேற்பதற்காக, இந்தியா வந்துள்ள அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், அரபு அமைப்பின் பொதுச் செயலாளர் மற்றும் தூதுக்குழுக்களின் தலைவர்கள் அடங்கிய குழுவை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.

சவுதி அரேபியா மதினா சாலை விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்ததற்கு பிரதமர் இரங்கல்

November 17th, 12:34 pm

சவூதி அரேபியாவின் மதினா நகரில் நேரிட்ட சாலை விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்தது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபிய அரசின் தலைமை முஃப்தி ஷேக் அப்துல்அசீஸ் பின் அப்துல்லா பின் முகமது அல் அல்ஷேக் மறைவிற்கு பிரதமர் இரங்கல்

September 24th, 08:49 am

சவுதி அரேபிய அரசின் தலைமை முஃப்தி ஷேக் அப்துல்அசீஸ் பின் அப்துல்லா பின் முகமது அல் அல்ஷேக் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவுக்கான பிரதமரின் அரசுமுறைப் பயணம் நிறைவடையும்போதுவெளியிடப்பட்ட கூட்டறிக்கை

April 23rd, 12:44 pm

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான திரு இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுதின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி ஏப்ரல் 22, 2025 அன்று சவுதி அரேபியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.

பிரதமரின் சவுதி அரேபியா பயணத்தால் ஏற்பட்டுள்ள பலன்கள் குறித்த பட்டியல்

April 23rd, 02:25 am

இந்தியா-சவுதி அரேபியா பாதுகாப்பு கூட்டாண்மைக் குழுமத்தின் இரண்டாவது கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோதி மற்றும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான திரு முகமது பின் சல்மான் ஆகியோரது கூட்டுத் தலைமையில் ஏப்ரல் 22-ம் தேதி ஜெட்டாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசியல், பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், கலாச்சாரம், மக்கள் தொடர்பு போன்ற பல்வேறு துறைகளில் இணைந்து செய்லபடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இருநாடுகளைச் சேர்ந்த துணைக் குழுக்கள் மற்றும் பணிக்குழுக்களின் பணிகள் குறித்தும் இந்தக் குழுமம் மதிப்பாய்வு செய்தது. கூட்டத்தின் இறுதியில், மேற்கொள்ளப்பட்ட குறிப்புகளில் இருநாட்டு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.

உலக முஸ்லிம் லீக் அமைப்பின் பொதுச் செயலாளர் பிரதமரைச் சந்தித்தார்

April 23rd, 02:23 am

முஸ்லிம் உலக லீக்கின் பொதுச் செயலாளர் ஷேக் டாக்டர் முகமது பின் அப்துல்கரீம் அல் இசா இன்று ஜெட்டாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்தார். ஜம்மு-காஷ்மீரில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி, சவுதி அரேபிய இளவரசரை சந்தித்தார் - இந்தியா-சவுதி அரேபியா பாதுகாப்பு பங்காண்மைக் கவுன்சில் கூட்டத்திற்கு கூட்டாக தலைமை வகித்தார்

April 23rd, 02:20 am

பிரதமர் திரு நரேந்திர மோடி 2025 ஏப்ரல் 22, அன்று சவுதி அரேபியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். ஜெட்டாவில் உள்ள அரசு மாளிகையில் சவூதி அரேபிய பட்டத்து இளவரசரும், பிரதமருமான இளவரசர் முகமது பின் சல்மான் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றார்.

பிரதமர் மோடி சவுதி அரேபியாவின் ஜெட்டாவிற்கு வருகிறார்

April 22nd, 04:29 pm

அரச மேன்மைமிகு இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி சவுதி அரேபியாவின் ஜெட்டாவிற்கு வந்தார். சிறப்பு மரியாதையாக, சவுதி வான்வெளியில் நுழைந்த பிரதமர் மோடியின் விமானத்தை சவுதி விமானப்படை ஜெட் விமானங்கள் அழைத்துச் சென்று, ஜெட்டாவிற்கு அழைத்துச் சென்றன. பிரதமர் மோடிக்கு ஜெட்டாவில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. சவுதி அரேபியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பார்.

சவூதி அரேபியா பயணத்தையொட்டி பிரதமரின் புறப்பாட்டு அறிக்கை

April 22nd, 08:30 am

பட்டத்து இளவரசரும், பிரதமருமான மேதகு இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று நான் சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டுச் செல்கிறேன்.

மூலோபாய மறுசீரமைப்பு: மேற்கு ஆசியாவில் இந்தியாவின் பங்கை ஆழப்படுத்த பிரதமர் மோடியின் சவுதி வருகை

April 21st, 04:51 pm

பிரதமர் நரேந்திர மோடியின் ஏப்ரல் 22–23, 2025 சவுதி அரேபியா பயணம் ஒரு முக்கியமான கட்டத்தில் வருகிறது - மாறிவரும் உலகளாவிய சக்தி இயக்கவியல் மற்றும் வேகமாக மாறிவரும் மேற்கு ஆசியாவால் வடிவமைக்கப்பட்ட ஒன்று.

பிரதமர் மோடி ஏப்ரல் 22-23, 2025 இல் சவுதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார்

April 19th, 01:55 pm

மேன்மை தங்கிய இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி சவுதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். இந்தியாவும் சவுதி அரேபியாவும் நெருக்கமான மற்றும் நட்பு உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்த வருகை நமது பன்முக கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்தவும் வலுப்படுத்தவும், பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும் ஒரு வாய்ப்பை வழங்கும்.

பக்தர்களுக்கு மேம்பட்ட புனித யாத்திரை அனுபவங்கள் கிடைப்பதை உறுதி செய்ய எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது: பிரதமர்

January 13th, 06:17 pm

சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா துறை அமைச்சர் திரு தவ்ஃபிக் பின் ஃபவ்ஸான் அல் ரபியாவுடன் கையெழுத்தான ஹஜ் ஒப்பந்தம் 2025-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். இந்த ஒப்பந்தம் இந்தியாவிலிருந்து வரும் ஹஜ் யாத்ரிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி என்று திரு மோடி கூறியுள்ளார். யாத்ரிகர்களுக்கு மேம்பட்ட புனிதப் பயண அனுபவங்களை உறுதி செய்ய எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார்.

இந்தியாவும் சவுதி அரேபியாவும் முதலீடுகளுக்கான உயர்மட்ட பணிக்குழுவின் முதல் கூட்டத்தை நடத்தின

July 28th, 11:37 pm

முதலீடுகளுக்கான இந்திய-சவுதி அரேபிய உயர்மட்ட பணிக்குழுவின் முதல் கூட்டம், பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ரா மற்றும் சவுதி எரிசக்தி அமைச்சர் மேதகு இளவரசர் திரு அப்துல் அஜீஸ் பின் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத் ஆகியோரின் கூட்டுத் தலைமையில் மெய்நிகர் முறையில் நடைபெற்றது.

அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்புகளின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியதற்காக நாட்டு மக்களுக்கு நன்றி: மன் கீ பாத்தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி.

June 30th, 11:00 am

நண்பர்களே, நமது அரசியலமைப்புச்சட்டம் மற்றும் தேசத்தின் ஜனநாயக அமைப்புகள் மீது தங்களுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையை மீண்டும் நிரூபித்திருக்கும் நமது நாட்டுமக்களுக்கு நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2024ஆம் ஆண்டின் தேர்தல், உலகின் மிகப்பெரிய தேர்தலாகும். உலகின் எந்த ஒரு தேசத்திலும், இத்தனை பெரிய தேர்தல் இதுவரை எப்போதும் நடந்ததில்லை. இதிலே 65 கோடி மக்கள் வாக்களித்தார்கள். நான் தேர்தல் ஆணையத்திற்கும், வாக்களிப்பு முறையோடு தொடர்புடைய அனைத்து பேருக்கும், இந்தக் காரணத்திற்காக பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவில் பிரதமர் ஆற்றிய உரை

June 21st, 06:31 am

யோகா மற்றும் தியான பூமியான காஷ்மீருக்கு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு வந்திருப்பது எனது அதிர்ஷ்டம். காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகரின் சூழல், சக்தி மற்றும் அனுபவங்கள் யோகாவிலிருந்து நாம் பெறும் வலிமையை நம்மை உணரச் செய்கிறது. யோகக்கலை தினத்தை முன்னிட்டு காஷ்மீர் மண்ணிலிருந்து தேசத்தின் அனைத்து மக்களுக்கும், உலகின் மூலை முடுக்கெங்கும் உள்ள யோகப் பயிற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் சர்வதேச யோகா தினத்தையொட்டி பிரதமர் உரை

June 21st, 06:30 am

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இன்று நடைபெற்ற 10-வது சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களுக்கு பிரதமர் தலைமை தாங்கினார் மற்றும் யோகா அமர்வில் பங்கேற்றார்.

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்

December 26th, 08:06 pm

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகமது பின் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத்-உடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்.

140 கோடி மக்கள் பல மாற்றங்களைச் செய்து வருகின்றனர்: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

November 26th, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலுக்கு உங்களை வரவேற்கிறேன். ஆனால் இன்று நவம்பர் மாதம் 26ஆம் தேதியை நம்மால் எப்படி மறக்க முடியும்!! இன்றைய நாளன்று தான் நாடெங்கிலும் மிகவும் கொடுமையான தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றது. தீவிரவாதிகள் மும்பை நகரையும், நாடு முழுவதையும், உலுக்கிப் போட்டார்கள். ஆனால் நமது பாரத நாட்டின் வல்லமை எத்தகையது என்றால், அந்தத் தாக்குதலிலிருந்து மீண்டு, இப்போது முழுத் தன்னம்பிக்கையோடு, தீவிரவாதத்தைக் காலில் போட்டு மிதித்து இருக்கிறோம். மும்பைத் தாக்குதலில் தனது இன்னுயிர்களை இழந்த அனைவருக்கும் நான் எனது சிரத்தாஞ்சலிகளை அர்ப்பணம் செய்கிறேன். இந்தத் தாக்குதலில் நமது வீரர்கள் வீரகதியை அடைந்தார்கள், தேசம் அவர்களை இன்று நினைவில் வைத்துப் போற்றுகிறது.