India’s manuscripts contain the footprints of the development journey of all humanity: PM Modi
September 12th, 04:54 pm
In his address at the International Conference on Gyan Bharatam, PM Modi emphasised that the Gyan Bharatam Mission is set to become a proclamation of India’s culture, literature, and consciousness. He remarked that India’s knowledge tradition stands on four foundational pillars — Preservation, Innovation, Addition, and Adaptation. He appealed to the country’s youth to actively participate in the mission, stressing the importance of exploring the past through technology.புதுதில்லியில் நடைபெற்ற ஞான பாரதம் சர்வதேச மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்
September 12th, 04:45 pm
புதுதில்லியின் விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற ஞான பாரதம் சர்வதேச மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் பொற்காலத்தின் மறுமலர்ச்சியை விஞ்ஞான் பவன் இன்று கண்டு களிப்பதாகக் குறிப்பிட்டார். ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் ஞான பாரதம் இயக்கம் பற்றிய அறிவிப்பை தாம் வெளியிட்டதாகவும், மிகக் குறுகிய காலத்திலேயே ஞான பாரதம் சர்வதேச மாநாடு நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார். இந்த இயக்கத்துடன் தொடர்புடைய வலைத்தளமும் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக திரு மோடி கூறினார். இது ஒரு அரசு சார்ந்த அல்லது கல்வி சார்ந்த நிகழ்ச்சி அல்ல என்று கூறிய பிரதமர், இந்தியாவின் கலாச்சாரம், இலக்கியம் மற்றும் உணர்வுகளின் குரலாக ஞான பாரதம் இயக்கம் விளங்கும் என்று தெரிவித்தார். ஆயிரக்கணக்கான தலைமுறைகளின் சிந்தனை மரபுகளை அவர் பிரதிபலித்தார். இந்தியாவின் ஞானம், பாரம்பரியம் மற்றும் அறிவியல் கலாச்சாரங்களை அடிக்கோடிட்டு காட்டி, நாட்டின் தலைசிறந்த முனிவர்கள், துறவிகள் மற்றும் அறிஞர்களின் ஞானம் மற்றும் ஆராய்ச்சியை அவர் பாராட்டினார். ஞான பாரதம் இயக்கத்தின் வாயிலாக இது போன்ற மரபுகள் டிஜிட்டல்மயமாக்கப்படுவதாக திரு மோடி குறிப்பிட்டார். இந்த இயக்கத்திற்காக நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது நல்வாழ்த்துகளை அவர் தெரிவித்துக் கொண்டதுடன் ஞான பாரதம் குழுவிற்கும், கலாச்சார அமைச்சகத்திற்கும் பாராட்டு தெரிவித்தார்.வாரணாசியில் பல்வேறு திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
April 11th, 11:00 am
மேடையில் அமர்ந்துள்ள உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் அவர்களே, முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக்; மதிப்பிற்குரிய அமைச்சர்களே வணக்கம். தங்கள் ஆசீர்வாதங்களை வழங்க இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இங்கு கூடியிருக்கும் எனது அன்பான குடும்ப உறுப்பினர்களான நமது காசி குடும்பத்தின் அன்புக்குரிய மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் உங்கள் ஆசீர்வாதங்களை நான் தாழ்மையுடன் கோருகிறேன். இந்த அபரிமிதமான அன்புக்கு நான் உண்மையிலேயே கடன்பட்டிருக்கிறேன். காசி என்னுடையது, நான் காசியைச் சேர்ந்தவன்.உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் ரூ. 3,880 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவடைந்த திட்டங்களையும் தொடங்கிவைத்தார்
April 11th, 10:49 am
உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் ரூ. 3880 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவடைந்த திட்டங்களையும் தொடங்கிவைத்தார். திரண்டிருந்தோரிடையே உரையாற்றிய அவர் காசியுடன் தமது ஆழமான தொடர்பை எடுத்துரைத்தார். தமக்கு ஆசி வழங்கியதற்காக அவர் தமது குடும்பத்தினருக்கும் இந்த பிராந்திய மக்களுக்கும்உத்தரப் பிரதேசத்திற்கும், மத்தியப் பிரதேசத்திற்கும் ஏப்ரல் 11 அன்று பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்
April 09th, 09:43 pm
உத்தரப் பிரதேசத்திற்கும், மத்தியப் பிரதேசத்திற்கும் ஏப்ரல் 11 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார். ஏப்ரல் 11 அன்று காலை 11.00 மணிக்கு வாரணாசி செல்லும் அவர், ரூ.3880 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். நிறைவடைந்த திட்டங்களையும் தொடங்கிவைக்கிறார். பொதுக் கூட்டத்திலும் அவர் உரையாற்றுவார்.தாய்லாந்தில் நடைபெற்ற சம்வாத் நிகழ்ச்சியின் போது பிரதமர் ஆற்றிய உரை
February 14th, 08:30 am
தாய்லாந்தில் நடைபெறும் இந்த சம்வாத் (விவாத உரையாடல்) பதிப்பில் உங்கள் அனைவருடனும் இணைவது பெரும் கௌரவமாகும். இந்தியா, ஜப்பான் மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த பல புகழ்பெற்ற நிறுவனங்கள், தனிநபர்கள் இந்த நிகழ்வை சாத்தியமாக்க பாடுபடுகின்றனர். அவர்கள் அனைவரையும், அவர்களின் முயற்சிகளுக்காக நான் பாராட்டுகிறேன், மேலும் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தாய்லாந்து சம்வாத் நிகழ்வில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை
February 14th, 08:10 am
தாய்லாந்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சம்வாத் நிகழ்வில், பிரதமர் திரு நரேந்திர மோடி, காணொலிக் காட்சி மூலம் இன்று உரையாற்றினார். இந்த சம்வாத் நிகழ்வில், இணைவதை தமக்கான கௌரவமாககா கருதுவதாகத் தெரிவித்த திரு மோடி, இந்தியா, ஜப்பான், தாய்லாந்து ஆகியவற்றைச் சேர்ந்த பிரபல நிறுவனங்களும் தனிநபர்களும் பங்கேற்பது இந்த நிகழ்வை சாத்தியமாக்கியுள்ளது என்று குறிப்பிட்டார். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.சர்வதேச அபிதம்ம தினத் தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
October 17th, 10:05 am
கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களே, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு அவர்களே, பதாந்த் ராகுல் போதி மகாதேரோ அவர்களே, வணக்கத்திற்குரிய ஜங்சுப் சோடென் அவர்களே, மகாசங்கத்தின் மதிப்பிற்குரிய உறுப்பினர்களே, மாண்புமிகு தலைவர்களே, தூதரக சமூகத்தின் உறுப்பினர்களே, புத்த மத அறிஞர்களே, தம்மத்தைப் பின்பற்றுபவர்களே, பெரியோர்களே,சர்வதேச அபிதம்மா தின கொண்டாட்டம் மற்றும் பாலி மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டதற்கான விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரை
October 17th, 10:00 am
புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற சர்வதேச அபிதம்மா தினக் கொண்டாட்டம் மற்றும் பாலி மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டதற்கான விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். புத்தபிரான் அபிதம்மாவைப் போதித்து ஞானம் பெற்ற பிறகு, அவரது பாதையைப் பின்பற்றுவதை நினைவு கூர்வதே அபிதம்மா தினமாகும். அபிதம்மா குறித்த புத்தபிரானின் போதனைகளின் மூலம் பாலி மொழியில் தான் உள்ளது என்பதால், அண்மையில், பாலி மொழிக்கு செம்மொழி அங்கீகாரம் அளிக்கப்பட்டது, இந்த ஆண்டின் அபிதம்மா கொண்டாட்டங்களின் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது.உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ஸ்வர்வேத் மந்திர் திறப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
December 18th, 12:00 pm
உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சகா, அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே, உத்தரப்பிரதேச அமைச்சர் அனில் ஜி, சத்குரு ஆச்சார்யா பூஜ்ய ஸ்ரீ சுதந்திர தேவ் ஜி மகராஜ், பூஜ்ய ஸ்ரீ விக்யான் தேவ் ஜி மகராஜ், பிற முக்கிய நபர்கள், நாடு முழுவதிலுமிருந்து கூடியுள்ள அனைத்து பக்தர்களுக்கும், எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் வணக்கம்!உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஸ்வர்வேத் மகாமந்திரைப் பிரதமர் தொடங்கி வைத்தார்
December 18th, 11:30 am
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள உமாரஹாவில் ஸ்வர்வேத் மகாமந்திரைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். மகரிஷி சதாஃபல் தேவ் ஜி மகராஜின் சிலைக்கு மரியாதை செலுத்திய பிரதமர், கோயில் வளாகத்தைச் சுற்றிப் பார்த்தார்.ஜி 20 கலாச்சார அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
August 26th, 10:15 am
காசி என்று அழைக்கப்படும் வாரணாசிக்கு உங்களை வரவேற்கிறோம். எனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் உங்களைச் சந்திப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். காசி உலகின் மிகப்பழமையான நகரம் மட்டுமல்ல. புத்தர் தனது முதல் பிரசங்கத்தை நிகழ்த்திய சாரநாத் இங்கிருந்து சற்று தொலைவில் உள்ளது. காசி நகரம் ஞானம், கடமை, சத்தியம் ஆகியவற்றின் பொக்கிஷமாக உள்ளது. இது உண்மையில் இந்தியாவின் கலாச்சார மற்றும் ஆன்மீகத் தலைநகரம் ஆகும். கங்கா ஆரத்தியைப் பார்ப்பதற்கும், சாரநாத்தைப் பார்வையிடுவதற்கும், காசியின் சுவையான உணவுகளை சுவைப்பதற்கும் நீங்கள் சிறிது நேரம் ஒதுக்கியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.ஜி 20 கலாச்சார அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் உரை
August 26th, 09:47 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற ஜி 20 கலாச்சார அமைச்சர்கள் கூட்டத்தில் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.தில்லியில் நடைபெற்ற உலகளாவிய புத்த உச்சி மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
April 20th, 10:45 am
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மத்திய அமைச்சர்கள் திரு கிரண் ரிஜிஜூ, திரு கிஷண் ரெட்டி, திரு அர்ஜூன் ராம் மெக்வால், திருமதி மீனாட்சி லேகி, சர்வதேச புத்த கூட்டமைப்பின் செயலாளர் மற்றும் இந்தியாவில் இருந்து பிற நாடுகளில் இருந்தும் வந்துள்ள புத்த துறவிகள் உள்ளிட்ட அனைவருக்கும் வணக்கம்!உலக புத்த உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமரின் உரை
April 20th, 10:30 am
புதுதில்லியில் இன்று நடைபெற்ற உலக புத்தர் உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியை கண்டுகளித்தப் பிரதமர், புத்தர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 19 தலைசிறந்த புத்த பிட்சுகளுக்குப் பிரதமர் புத்தபிட்சு அங்கிகளை வழங்கினார்.2566-வது புத்த பூர்ணிமா விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடியின் உரை
May 16th, 09:45 pm
நேபாளம் என்றால் உலகின் உயர்ந்த மலை சிகரங்களும், பல்வேறு சிறப்பு வாய்ந்த புண்ணிய தலங்களும், நமக்கு நினைவுக்கு வரும்.நேபாளத்தின் லும்பினியில் புத்த பூர்ணிமா கொண்டாட்டம்.
May 16th, 03:11 pm
நேபாளத்தின் லும்பினியில் உள்ள சர்வதேச மாநாட்டு மையம் மற்றும் தியான மண்டபத்தில் நடைபெற்ற 2566 வது புத்த பூர்ணிமா விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டார்.கேதார்நாத்தில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டியதோடு நாட்டிற்கு அர்ப்பணித்தார்
November 05th, 10:20 am
கேதார்நாத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியதோடு நாட்டிற்கு அர்ப்பணித்தார். ஸ்ரீ ஆதிசங்கராச்சார்யா சமாதியைத் தொடங்கிவைத்த அவர் ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாவின் உருவச்சிலையைத் திறந்துவைத்தார். ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட, தற்போது நடைபெறுகிற அடிப்படை கட்டமைப்புப் பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கேதார்நாத் கோவில் நிகழ்வோடு நாடு முழுவதும் உள்ள பல இடங்களிலிருந்தும், நான்கு கோவில்களிலிருந்தும், 12 ஜோதிர்லிங்கங்களுக்குப் பூஜைகள் நடத்தப்பட்டன. அனைத்து நிகழ்வுகளும் கேதார்நாத் கோவிலின் பிரதான நிகழ்வோடு இணைக்கப்பட்டன.உத்தரப் பிரதேசம், வாரணாசியில் தேவ் தீபாவளி மகோத்சவத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
November 30th, 06:12 pm
காசி வாழ் மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகள். கார்த்திக் பூர்ணிமா தேவ் தீபாவளிப் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள். குருநானக் தேவின் பிரகாஷ் விழாவை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.வாரணாசியில் தேவ் தீபாவளி கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்றார்
November 30th, 06:11 pm
அப்போது பேசிய அவர், சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் காசியிலிருந்து களவுபோன தேவி அன்னபூரணி சிலை மீண்டும் கிடைக்கப் பெறவிருப்பதால் காசிக்கு இது மற்றொரு சிறப்புத் தருணம் என்று கூறினார். காசிக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதம் என்று அவர் தெரிவித்தார். இதுபோன்ற பழங்கால சிலைகள் நமது விலைமதிப்பற்ற பாரம்பரியத்தின் நம்பிக்கைச் சின்னங்கள் என்று அவர் குறிப்பிட்டார்.