அகமதாபாத்தில் உள்ள கன்யா சத்ராலயாவில் உள்ள சர்தார்தாம் கட்டம்-II -ன் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் சுருக்கம்
August 24th, 10:39 pm
இன்று மகள்களின் சேவைக்காகவும் அவர்களின் கல்விக்காகவும் ஒரு விடுதி திறக்கப்படுகிறது. இந்த விடுதியில் தங்கும் மகள்களுக்கு ஆசைகளும் கனவுகளும் இருக்கும், அவற்றை நிறைவேற்ற அவர்களுக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். இது மட்டுமல்லாமல், இந்த மகள்கள் தங்கள் சொந்தக் காலில் நின்று திறமையானவர்களாக மாறும்போது, அவர்கள் இயல்பாகவே தேசத்தை கட்டியெழுப்புவதில் முக்கிய பங்கு வகிப்பார்கள், மேலும் அவர்களின் குடும்பங்களும் செழிக்கும்.நாடு முழுவதும் உள்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுப் பணிகள் சாதனை அளவில் நடைபெற்று வருகிறது: பிரதமர்
August 24th, 10:25 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாதில் கன்யாசத்ராலயாவில் இரண்டாம் கட்ட சர்தார்தாம் திட்டப்பணிகளுக்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டி உரையாற்றினார். சர்தார்தாம் என்ற பெயர் தியாகத்துடன் கூடிய பணிகளைக் குறிக்கும் வகையில் உள்ளது என்று பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் சேவைக்கு என அர்ப்பணிக்கப்பட்டுள்ள தங்கும் விடுதியை அவர் தொடங்கி வைத்தார். கனவுகள் மற்றும் விருப்பங்களைச் சுமந்து இந்த விடுதியில் தங்கவுள்ள சிறுமிகளுக்கு எண்ணற்ற வாய்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ளமுடியும் என்று கூறினார். தற்சார்பு மற்றும் திறனுள்ள சிறுமிகள் நாட்டைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்காற்றுவதுடன் அவர்களின் குடும்பங்களும் முன்னேற்றம் அடையும் என்று குறிப்பிட்டார். இந்த தங்கும் விடுதியில் இடம் கிடைத்துள்ள சிறுமிகளுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட பிரதமர், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்குக் கூட பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்று கூறினார்.சர்தார்தம் பவன் மற்றும் சர்தார்தம் இரண்டாம் கட்டப் பணிக்கான பூமிபூஜையின் போது பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
September 11th, 11:01 am
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள குஜராத் முதலமைச்சர் திரு. விஜய் ரூபானி அவர்களே, துணை முதலமைச்சர் திரு. நிதின் அவர்களே, எனது அமைச்சரவை தோழர்கள் திரு. பர்சோத்தம் ரூபலா, திரு. மன்சுக் மாண்டவியா, அனுப்பிரியா பட்டேல், நாடாளுமன்ற உறுப்பினரும் குஜராத் மாநில பிஜேபி தலைவர் திரு. சி.ஆர் பாட்டீல் , குஜராத் மாநில அமைச்சர்கள், சட்ட மன்ற , நாடாளுமன்ற உறுப்பினர்கள், சர்தார்தாம் அறக்கட்டளை உறுப்பினர்கள், சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம்!சர்தார்தாம் பவன் மற்றும் சர்தார்தாம் 2வது பெண்கள் விடுதி பூமி பூஜையை, பிரதமர் தொடங்கி வைத்தார்
September 11th, 11:00 am
சர்தார்தாம் பவன் மற்றும் சர்தார்தாம் 2வது பெண்கள் விடுதி பூமி பூஜையை, காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். குஜராத் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.சர்தார்தாம் பவன் மற்றும் சர்தார்தாம் 2வது பெண்கள் விடுதி பூமி பூஜையை, பிரதமர் நாளை தொடங்கி வைக்கிறார்
September 10th, 01:25 pm
சர்தார்தாம் பவன் மற்றும் சர்தார்தாம் 2வது பெண்கள் விடுதி பூமி பூஜையை, பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (செப்டம்பர் 11) காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.