It is the need of the hour that we transform 'Vocal for Local' into a mass movement: PM Modi in Vadodara

May 11th, 06:15 pm

Addressing a special gathering during the inauguration of Sardardham Hostel in Vadodara, PM Modi said education, skill development and women’s empowerment are key to shaping India’s future workforce and entrepreneurial growth. Highlighting the impact of global economic challenges and the West Asia crisis, he urged citizens to support “Vocal for Local”, reduce dependence on imports, conserve foreign exchange and strengthen self-reliance through collective responsibility and everyday actions.

குஜராத் மாநிலம் வதோதராவில் சர்தார்தாம் விடுதியை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார்

May 11th, 06:00 pm

குஜராத் மாநிலம் வதோதராவில் சர்தார்தாம் விடுதியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (11.05.2026) திறந்து வைத்தார். சோம்நாத் கோவில் மறுசீரமைக்கப்பட்டு திறக்கப்பட்டதன் 75-வது புனித நிகழ்ச்சியின் கொண்டாட்டத்தின் அதே நாளில் வதோதராவில் சர்தார்தாமில் திரண்டிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், கல்வி நிலையம் திறப்பு நிகழ்ச்சியும் ஆன்மீக நினைவு நிகழ்ச்சியும் ஒரே சமயத்தில் நடைபெற்றிருப்பதை குறிப்பிட்டார். கற்பித்தல் உதவித் திட்டத்தை தொடங்கிவைத்ததோடு டாக்டர் துஷ்யந்த் மற்றும் தக்ஷா படேல் வளாகத்தை திறந்து வைத்த பிரதமர், இந்த முன்முயற்சி இளைஞர்களின் எதிர்கால வேலைவாய்ப்புக்கு முன்னோடியாக இருக்கும் என்று தெரிவித்தார். ஒரு மணி நேரத்திற்கு முன்பாக பிரபாஸ்பதானில் சோம்நாத் அமிர்தப் பெருவிழாக் கொண்டாட்டத்தில் தாம் பங்கேற்றது குறித்தும் தற்போது நாம் மாற்றத்தக்க கல்வி நிறுவனங்களின் திறப்பு நிகழ்ச்சியில் உள்ளதை குறித்தும் குறிப்பிட்ட அவர், பாரம்பரியமும், வளர்ச்சி மேம்பாடும் எவ்வாறு ஒன்றாக இணைந்துள்ளதற்கு அடையாளமாக இது திகழ்கிறது என்று கூறினார்.

குஜராத்திலுள்ள சோம்நாத்தில் சர்தார் வல்லபாய் படேலுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்

May 11th, 03:55 pm

சர்தார் படேலின் தொலைநோக்குப் பார்வை குறித்தும், சோம்நாத் கோவில் மறுகட்டுமானத்தில் அவரது தீர்க்கமான பங்களிப்புக் குறித்தும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 75-வது நினைவு நாளில் அவருக்கு பிரதமர் மரியாதை

December 15th, 08:44 am

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 75-வது நினைவு நாளில், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். சர்தார் படேல் தமது முழு வாழ்க்கையையும் தேசத்தை ஒன்றிணைத்து, இந்தியாவை ஒற்றுமையின் ஒற்றை இழையாகப் பின்னுவதற்கு அர்ப்பணித்ததாக அவர் கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தேசிய ஒற்றுமை தினத்தன்று ஒற்றுமை உறுதிமொழி செய்து வைத்தார்; இதில் பிரதமர் அலுவலக அலுவலர்கள் பங்கேற்றனர்

October 31st, 02:06 pm

தேசிய ஒற்றுமை தினத்தன்று, நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் தங்களின் உறுதியை வெளிப்படுத்தும் விதமாக பிரதமர் அலுவலக அலுவலகர்கள் இன்று ஒற்றுமை உறுதிமொழி ஏற்றனர்.

பிரதமர் அக்டோபர் 30, 31 அன்று குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறார்

October 29th, 10:58 am

பிரதமர் திரு நரேந்திர மோடி குஜராத்தில் அக்டோபர் 30, 31 அன்று பயணம் மேற்கொள்கிறார். அக்டோபர் 30 அன்று கெவாடியாவில் உள்ள ஏக்தா நகரில் மாலை 5.15 மணியளவில் மின்சார பேருந்து சேவைகளை கொடியசைத்து தொடங்கிவைக்கிறார். மாலை 6.30 மணியளவில் ஏக்தா நகரில் ரூ.1,140 கோடி மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

'வந்தே மாதரம்' என்ற பாடலின் உணர்வு இந்தியாவின் அழியாத உணர்வுடன் இணைக்கப்பட்டுள்ளது: ‘மன் கீ பாத்’தில் (மனதின் குரல்) பிரதமர் மோடி

October 26th, 11:30 am

இந்த மாத ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) உரையில், அக்டோபர் 31 அன்று சர்தார் படேலின் 150வது பிறந்தநாளில் பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். சத் பூஜை விழா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இந்திய நாய் இனங்கள், இந்திய காபி, பழங்குடி சமூகத் தலைவர்கள் மற்றும் சமஸ்கிருத மொழியின் முக்கியத்துவம் போன்ற சுவாரஸ்யமான தலைப்புகளையும் அவர் தொட்டார். 'வந்தே மாதரம்' பாடலின் 150வது ஆண்டு விழா குறித்து பிரதமர் சிறப்புரையாற்றினார்.

‘உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுங்கள்’ – ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில், பிரதமர் மோடி சுதேசி பெருமையுடன் பண்டிகைகளைக் கொண்டாட வலியுறுத்துகிறார்.

August 31st, 11:30 am

இந்த மாத ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) உரையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய பாதுகாப்புப் படையினர் மற்றும் குடிமக்களுக்கு பிரதமர் மோடி மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் விளையாட்டு நிகழ்வுகள், சூரிய சக்தி, ‘ஆபரேஷன் போலோ’ மற்றும் இந்திய கலாச்சாரத்தின் உலகளாவிய பரவல் போன்ற முக்கியமான தலைப்புகளையும் அவர் தொட்டார். பண்டிகைக் காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதன் முக்கியத்துவத்தையும், தூய்மையைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் குடிமக்களுக்கு நினைவூட்டினார்.

காந்தி நகரில் குஜராத் நகர வளர்ச்சிக் கதையின் 20 ஆண்டுகள் கொண்டாட்டத்தின் போது பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

May 27th, 11:30 am

குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத் அவர்களே, முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் பட்டேல் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களான மனோகர்லால் அவர்களே, சி ஆர் பாட்டீல் அவர்களே, குஜராத் அரசின் அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, குஜராத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இங்கு வந்துள்ள எனதருமை சகோதர, சகோதரிகளே!

குஜராத் நகர்ப்புற வளர்ச்சிக் கதையின் 20 ஆண்டுக் கால கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

May 27th, 11:09 am

குஜராத்தின் காந்திநகரில் இன்று நடைபெற்ற குஜராத் நகர்ப்புற வளர்ச்சிக் கதையின் 20 ஆண்டு கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வின் போது, 2005-ம் ஆண்டின் நகர்ப்புற வளர்ச்சியின் 20 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், 2025-ம் ஆண்டை நகர்ப்புற வளர்ச்சி ஆண்டாக அவர் தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், வதோதரா, தாஹோத், பூஜ், அகமதாபாத், காந்திநகர் ஆகிய இடங்களுக்கு கடந்த 2 நாட்களில் பயணம் செய்தபோது, ஆபரேஷன் சிந்தூர் வெற்றியின் முழக்கத்துடனும், பறக்கும் மூவர்ணக் கொடிகளுடனும் தேசபக்தியின் உற்சாகத்தை தாம் அனுபவித்து வருவதாகக் கூறினார். இது காண்பதற்கு ஒரு காட்சி என்றும், இந்த உணர்வு குஜராத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் இருப்பதாகவும் அவர் கூறினார். பயங்கரவாதத்தின் முள்ளை அகற்ற இந்தியா முடிவு செய்தது, அதை மிகுந்த உறுதியுடன் செய்தது என்று பிரதமர் கூறினார்.

உத்தரப் பிரதேசத்திற்கும், மத்தியப் பிரதேசத்திற்கும் ஏப்ரல் 11 அன்று பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்

April 09th, 09:43 pm

உத்தரப் பிரதேசத்திற்கும், மத்தியப் பிரதேசத்திற்கும் ஏப்ரல் 11 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார். ஏப்ரல் 11 அன்று காலை 11.00 மணிக்கு வாரணாசி செல்லும் அவர், ரூ.3880 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். நிறைவடைந்த திட்டங்களையும் தொடங்கிவைக்கிறார். பொதுக் கூட்டத்திலும் அவர் உரையாற்றுவார்.

தில்லியில் தலைமைச் செயலாளர்களின் நான்காவது தேசிய மாநாட்டிற்கு பிரதமர் தலைமை தாங்கினார்

December 15th, 10:15 pm

தில்லியில் இன்று நடைபெற்ற தலைமைச் செயலாளர்களின் 4-வது தேசிய மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். மூன்று நாள் மாநாடு 2024 டிசம்பர் 13 முதல் 15 வரை தில்லியில் நடைபெற்றது.

சர்தார் படேலின் பிறந்தநாளை முன்னிட்டுப் பிரதமர் அவரை நினைவு கூர்ந்துள்ளார்

October 31st, 08:07 am

சர்தார் படேலின் பிறந்தநாளை முன்னிட்டுப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். சர்தார் படேல், தனது அசைக்க முடியாத உத்வேகம், தொலைநோக்குப் பார்வை, அசாதாரண அர்ப்பணிப்பு ஆகியவற்றால் நமது தேசத்தின் இயங்குநிலையை வடிவமைத்தார் என்று திரு மோடி கூறினார்.

அக்டோபர் 30 மற்றும் 31 தேதிகளில் பிரதமர் குஜராத் மாநிலத்திற்குப் பயணம் மேற்கொள்கிறார்

October 29th, 02:20 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி அக்டோபர் 30 மற்றும் 31 தேதிகளில் குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறார். 30ம் தேதி காலை, 10:30 மணிக்கு, அம்பாஜி கோவிலில் பூஜை மற்றும் வழிபாடு செய்கிறார். பின்னர் நண்பகல் 12 மணியளவில் மெஹ்சானாவின் கெராலுவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டப் பணிகளுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். அக்டோபர் 31 ஆம் தேதி, காலை 8 மணியளவில், அவர் கெவாடியாவுக்குச் செல்கிறார், அங்கு அவர் ஒற்றுமை சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். அதைத் தொடர்ந்து தேசிய ஒற்றுமை தின கொண்டாட்டங்கள் நடைபெறும். பின்னர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி,, நிறைவடைந்த புதிய திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார். அதன்பின், காலை, 11:15 மணிக்கு, ஆரம்ப் 5.0-ல், 98-வது பொது அடித்தளப் பாடத்திட்டப் பிரிவில் பயிற்சி பெற்ற பயிற்சி அதிகாரிகளிடையே பிரதமர் உரையாற்றுகிறார்.