பிரதமர் ஆகஸ்ட் 12-ம் தேதி அன்று மத்தியப் பிரதேசம் செல்கிறார்

August 10th, 04:50 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி 2023 ஆகஸ்ட் 12 ஆம் தேதி அன்று மத்தியப்பிரதேசத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். பிற்பகல் 2:15 மணியளவில் சாகர் மாவட்டத்திற்குச் செல்கிறார். அங்கு அவர் சந்த் சிரோமணி குருதேவ் ஸ்ரீ ரவிதாஸ் ஜி நினைவிடத்தில் பூமி பூஜை செய்கிறார். பிற்பகல் 3:15 மணியளவில், தனாவில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார், அங்கு அவர் சந்த் சிரோமணி குருதேவ் ஸ்ரீ ரவிதாஸ் ஜி நினைவிடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.