உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
January 28th, 09:36 pm
உத்தராகண்ட் ஆளுநர் திரு குர்மீத் சிங் அவர்களே, முதல்வர் திரு புஷ்கர் தாமி அவர்களே, எனது அமைச்சரவை நண்பர்கள் திரு அஜய் தம்தா அவர்களே, திருமிகு ரக்ஷா கட்சே அவர்களே, உத்தராகண்ட் சட்டமன்ற சபாநாயகர் திருமிகு ரிது கந்தூரி அவர்களே, மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் திருமிகு ரேகா ஆர்யா அவர்களே, காமன்வெல்த் விளையாட்டுகள் தலைவர் திரு கிறிஸ் ஜென்கின்ஸ் அவர்களே. ஐ.ஓ.ஏ தலைவர் திருமிகு பி.டி. உஷா அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு மகேந்திர பட் அவர்களே, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க நாடு முழுவதிலுமிருந்து வந்துள்ள வீரர்களே, ஏனைய விருந்தினர்களே!டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
January 28th, 09:02 pm
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். துவக்க விழாவில் பங்கேற்றவர்களிடையே உரையாற்றிய அவர், உத்தராகண்ட் இன்று இளைஞர்களின் சக்தியால் பிரகாசமாக உள்ளது என்றார். பாபா கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் அன்னை கங்கையின் ஆசீர்வாதத்துடன் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்குகின்றன என்றும் அவர் கூறினார். உத்தராகண்ட் மாநிலம் உருவான 25-வது ஆண்டு இது என்று குறிப்பிட்ட திரு மோடி, நாடு முழுவதிலும் உள்ள இளைஞர்கள் இந்த இளம் மாநிலத்தில் தங்களது திறனை வெளிப்படுத்துவார்கள் என்று குறிப்பிட்டார். தேசிய விளையாட்டுப் போட்டிகளின் இந்தப் பதிப்பில் பல உள்ளூர் விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் பயன்பாடு இருப்பதால் 'பசுமை விளையாட்டுகள்' என்ற கருப்பொருளில் இங்கு போட்டிகள் நடப்பதாகவும் அவர் மேலும் கூறினார். இந்தக் கருப்பொருளைப் பற்றி மேலும் விவரித்த பிரதமர், கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் கூட மின்னணுக் கழிவுகளால் தயாரிக்கப்பட்டவை என்றும், பதக்கம் வென்ற ஒவ்வொருவரின் பெயரிலும் ஒரு மரக்கன்று நடப்படும் என்றும், இது ஒரு சிறந்த முயற்சி என்றும் குறிப்பிட்டார். தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் அவர் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். இத்தகைய பிரம்மாண்டமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததற்காக உத்தராகண்ட் அரசுக்கும், மக்களுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.வாரணாசியில் வாக்காளர்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார்
May 30th, 02:32 pm
பிரதமர் நரேந்திர மோடி தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசி வாக்காளர்களுடன் காணொலிச் செய்தி மூலம் உரையாடினார். இந்த நகரத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது பாபா விஸ்வநாதரின் அளப்பரிய அருளாலும், காசி மக்களின் ஆசீர்வாதத்தாலும் மட்டுமே சாத்தியம் என்று தெரிவித்தார். புதிய காசியுடன் புதிய மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான வாய்ப்பாக இந்தத் தேர்தலைக் குறிப்பிட்ட பிரதமர், காசியில் வசிப்பவர்கள், குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள், ஜூன் 1-ம் தேதி சாதனை எண்ணிக்கையில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.ஜி20 நாடாளுமன்ற சபாநாயகர்களின் 9-வது மாநாட்டைத் தொடங்கி வைத்து பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
October 13th, 01:00 pm
இந்தியாவின் 140 கோடி மக்களின் சார்பாக ஜி20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சிமாநாட்டிற்கு வருகை தந்த பிரமுகர்களை வரவேற்கிறேன். இந்த உச்சிமாநாடு உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடாளுமன்ற நடைமுறைகளின் 'மகா கும்பமேளா' ஆகும். இன்று கலந்து கொண்டுள்ள அனைத்துப் பிரதிநிதிகளும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்றக் கட்டமைப்பின் அனுபவத்தைக் கொண்டுள்ளனர். இன்றைய நிகழ்வு மிகுந்த திருப்தி அளிக்கிறது.அமேதி நாடாளுமன்றத் தொகுதி விளையாட்டுப் போட்டி 2023 நிறைவு விழாவில் பிரதமர் உரை
October 13th, 12:40 pm
அமேதி நாடாளுமன்றத் தொகுதி விளையாட்டுப் போட்டி 2023 நிறைவு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.