அவசரநிலைக் காலத்தில், ஜனநாயகத்தை பாதுகாத்தவர்களுக்குப் பிரதமர் மரியாதை
June 25th, 10:53 am
இந்திய வரலாற்றின் மிக இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாகக் கருதப்படும் அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட காலத்தில், ஜனநாயக விழுமியங்களை உறுதியுடன் பாதுகாத்த அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தினார். இந்த காலக்கட்டம், மௌனமாக இருக்க மறுத்து, அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளக் கொள்கைகளை நிலைநிறுத்திய எண்ணற்ற குடிமக்களின் அசாத்திய துணிச்சலையும், மன உறுதியையும் வெளிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்திய அரசியலமைப்புச் சட்டம் நசுக்கப்பட்டதை நினைவூட்டுவதாக ‘அரசியல் சாசன படுகொலை தினம்’ அமையும்: பிரதமர்
July 12th, 05:06 pm
ஜூன் 25-ஆம் தேதியை அரசியல் சாசனப் படுகொலை தினமாக (சம்விதான் ஹத்யா திவாஸ்) அறிவிப்பது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் நசுக்கப்பட்ட காலத்தை நினைவூட்டுவதாக இந்த தினம் அமையும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.