ஐந்தாவது இளவரசர் ரஹீம் ஆகா கான், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்
September 10th, 02:59 pm
ஆகா கான் மேம்பாட்டு கட்டமைப்பின் (ஏகேடிஎன்) தலைவரான ஐந்தாவது இளவரசர் ரஹீம் ஆகா கான், இன்று (10.09.2026) புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
August 15th, 04:44 pm
80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு. மோடி இன்று செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களிடையே உரையாற்றினார். தனது உரையில், கடந்த 12 ஆண்டுகளில் உற்பத்தித் துறை, டிஜிட்டல் வளர்ச்சி மற்றும் குடிமக்களுக்கான சேவைகள் வழங்குதல் ஆகிய துறைகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் குறித்த விரிவான அறிக்கையை அவர் முன்வைத்தார். அத்துடன், நாட்டின் லட்சியங்களை அடைவதற்கான ஏழு முக்கிய துறைகளை உள்ளடக்கிய 'சப்த தாரா' (Sapta Dhara) எனும் மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டத்தையும் அவர் அறிமுகப்படுத்தினார்.மாற்றத்தின் 12 ஆண்டுகள்: சுதந்திர தின உரையில் நாட்டின் முன்னேற்றத்தை எடுத்துரைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி
August 15th, 01:18 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தமது சுதந்திர தின உரையில், கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றத்தை எடுத்துரைத்தார். உற்பத்தித் துறை, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகள், எரிசக்திப் பாதுகாப்பு, இளைஞர் மேம்பாடு, புத்தாக்கம், சமூகப் பாதுகாப்பு, பிற முக்கியத் துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.Through the efforts and hard work of 140 crore citizens, we must achieve the goal of Viksit Bharat: PM Modi on 80th Independence Day at Red Fort
August 15th, 07:00 am
PM Modi, in his address to the nation on the 80th Independence Day from the Red Fort, spoke about the dream of building a Viksit Bharat by 2047, powered by the strength and resolve of 140 crore Indians. He highlighted key initiatives such as the SHANTI Act, Railway electrification, India’s trade deals, the end of Naxalism and more. He called upon the nation to embrace 'Shakti Ki Saptadhara'.நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி செங்கோட்டை கொத்தளத்தி்லிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்
August 15th, 06:50 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (15.08.2026) நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வேளையில், நாடு முழுவதும் உள்ள ஒவ்வொருவரின் இதயத் துடிப்பும், இல்லமும் மூவர்ணக் கொடியின் உணர்வாலும் புதிய தீர்மானங்களாலும் எதிரொலிப்பதாகக் குறிப்பிட்ட அவர், சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.இந்தியா தனது 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது.
August 15th, 06:45 am
செங்கோட்டையில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, 140 கோடி இந்தியர்களின் வலிமை மற்றும் உறுதியுடன் 2047-க்குள் 'விக்சித் பாரத்' (வளர்ந்த இந்தியா) எனும் இலக்கை அடைவது குறித்த தனது கனவை எடுத்துரைத்தார். 'சாந்தி' (SHANTI) சட்டம், ரயில்வே மின்மயமாக்கல், இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தங்கள், நக்சலிசத்தின் முடிவு உள்ளிட்ட முக்கிய முன்னெடுப்புகளை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், 'சக்தி கி சப்ததாரா' (சக்தியின் ஏழு நீரோடைகள்) எனும் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து
August 07th, 11:14 am
தேசிய கைத்தறித் தினத்தை முன்னிட்டு, நாட்டின் வளமான மற்றும் சிறப்பான கைத்தறிப் பாரம்பரியத்தைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்குத் தம் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் காலத்தால் அழியாத தொன்மையான பாரம்பரியத்தைத் தங்களின் இணையற்ற கைவினைத்திறனால் தலைமுறைகள் கடந்தும் பாதுகாத்து வளப்படுத்தி வரும் நெசவாளர்கள், கைவினைஞர்களின் திறமை, படைப்பாற்றல், அர்ப்பணிப்பு உணர்விற்குப் பிரதமர் தமது மரியாதையைச் செலுத்தியுள்ளார்.தேசிய ஒருங்கிணைந்த உயிரி எரிவாயு திட்டம் ‘கோபர்தன்’ : மத்திய அமைச்சரவை ஒப்புதல்
August 06th, 04:08 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ரூ.23,731 கோடி நிதி ஒதுக்கீட்டில் தேசிய சுழற்சி உயிரி ஆற்றல் திட்டத்திற்கு (கோபர்தன்) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தூய்மையான எரிசக்திப் பயணத்தில் இத்திட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும். வேளாண்மைக் கழிவுகள், சாணம், நகர்ப்புறக் கழிவுகள் உள்ளிட்டவற்றைத் தூய்மையான எரிபொருள், இயற்கை உரம், கிராமப்புற வருவாயாக மாற்ற இத்திட்டம் வழிவகுக்கும்.வளர்ச்சியடைந்த இந்தியா இலக்குகளை நோக்கி, ஊரக வளர்ச்சி, விவசாயம், சமூக நலன் மற்றும் அது சார்ந்த துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமர் தலைமையில் செயலாளர்களின் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம்
July 22nd, 07:37 pm
வளர்ச்சியடைந்த இந்தியா இலக்குகளை நோக்கி, ஊரக வளர்ச்சி, விவசாயம், சமூக நலன் மற்றும் அது சார்ந்த துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் பல்வேறு துறைகளின் செயலாளர்களின் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம், பிரதமரின் இல்லமான 7, லோக் கல்யாண் மார்க்கில் இன்று நடைபெற்றது.India-New Zealand relationship built on enduring friendship, shared values, common commitment: PM Modi in Auckland
July 11th, 01:15 pm
PM Modi addressed a vibrant community event in Auckland, praising the Indian diaspora as a strong bridge between India and New Zealand. He highlighted the elevation of bilateral ties to a Strategic Partnership, celebrated 100 years of sporting ties between the two countries and underscored the shared heritage and deepening partnership between the two nations.நியூசிலாந்தில் இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
July 11th, 12:35 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (11.07.2026) ஆக்லாந்தில் நடைபெற்ற “கியா ஓரா மோடி” என்ற நிகழ்வில், நியூசிலாந்தில் உள்ள இந்திய வம்சாவளியினர் பெருமளவில் பங்கேற்ற கூட்டத்தில் உரையாற்றினார். நியூசிலாந்து பிரதமர் திரு கிறிஸ்டோபர் லக்ஸனும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். 10,000-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினரின் அரவணைப்பு, ஆற்றல், உற்சாகத்தால் இக்கூட்டம் நிறைந்திருந்தது.ஹூக்ளியில் நடைபெற்ற மேற்கு வங்க தினக் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்
June 19th, 11:54 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நடைபெற்ற மேற்கு வங்க தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்றார். டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியுடன் தொடர்புடைய வரலாற்றுச் சிறப்புமிக்க இடமான ஹூக்ளி மாவட்டத்தின் தாரகேஸ்வரில் மாநில அளவிலான கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மேற்கு வங்கம்: பாரம்பரியம், நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சி என்பது இந்த ஆண்டுக்கான மேற்கு வங்க தினத்தின் கருப்பொருளாகும். இது மாநிலத்தின் கலாச்சாரச் வளம், சமூக நல்லிணக்கம், வளர்ச்சி சார்ந்த விருப்பங்களை பிரதிபலிப்பதாக உள்ளது.‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில், கோடை வெப்பத்தைத் தணிப்பதற்கான ஆலோசனைகளைப் பிரதமர் மோடி பகிர்ந்துகொள்கிறார், மேலும் குடிமக்களை நீரேற்றத்துடன் இருக்குமாறு அறிவுறுத்துகிறார்.
May 31st, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்களனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. தேசத்தின் பல்வேறு பாகங்களில் நமது நாட்டுமக்கள், தேசத்தின் நலனுக்காக, சமூகநலனுக்காக செயல்படுத்திவரும் அற்புதமான விஷயங்களைப் பற்றிக் கேள்விப்படும்போது, நமக்குள் ஒரு புதிய உத்வேகம் பிறக்கிறது. இன்று நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே தடகளப் போட்டிகளில் தேசம் செய்திருக்கும் சாதனையைப் பற்றியே நான் பகிர இருக்கிறேன். சில நாட்கள் முன்பாக, ஜார்க்கண்டின் ராஞ்சியிலே, தேசிய முதுநிலைத் தடகளக் கூட்டமைப்புப் போட்டிகள் நடைபெற்றன. இதிலே நாடெங்கிலுமிருந்தும் சுமார் 800 தடகள வீரர்கள் கலந்து கொண்டனர். நான்கு தனித்தனிப் போட்டிகளில் முந்தைய தேசியப் பதிவுகள் முறியடிக்கப்பட்டன. குரிந்தர்வீர் சிங், விஷால் டீகே, தேஜஸ்வின் ஷங்கர், தேவ்மீனா, குல்தீப் குமார் ஆகிய நண்பர்கள் பல்வேறு பிரிவுகளில் புதிய சாதனைகளைப் படைத்தார்கள். நான் முதன்மையாக இவர்கள் அனைவருக்கும் பலப்பல நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மே 10 அன்று கர்நாடகா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்குப் பிரதமர் பயணம்
May 09th, 11:17 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, 2026-ம் ஆண்டு மே 10-ம் தேதி, கர்நாடகா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்குச் செல்கிறார். காலை 11 மணியளவில், பெங்களுருவில் நடைபெறும் 'வாழும் கலை' அமைப்பின் 45-வது ஆண்டு விழாக் கொண்டாட்டங்களில் பங்கேற்கும் பிரதமர், அங்கு திரண்டிருக்கும் மக்களிடையே உரையாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து, பிரதமர் ஹைதராபாத் செல்கிறார். பிற்பகல் 3 மணியளவில், ஹைதராபாத்தில் ரூ 9,400 கோடி மதிப்பிலான, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டி, அவற்றை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். பின்னர் இந்த நிகழ்ச்சியில்,அவர் உரையாற்றுகிறார். பிற்பகல் 3:45 மணியளவில், ஹைதராபாத்தில் அமைந்துள்ள 'சிந்து மருத்துவமனையை' பிரதமர் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கிறார்.Gujarat’s biggest strength is that it has kept development moving continuously for the past 25 years: PM Modi in Vav-Tharad
March 31st, 05:00 pm
PM Modi launched and dedicated multiple development projects in Vav-Tharad, Gujarat, worth nearly ₹20,000 crore. Addressing a large gathering, he highlighted initiatives across roads, railways, power, water supply, urban development, healthcare and tourism aimed at boosting connectivity, improving public services and accelerating socio-economic growth in the region while strengthening the vision of a Viksit Bharat.PM Modi lays foundation stone, inaugurates, and dedicates to the Nation development projects worth more than ₹20,000 crore in Vav-Tharad,Gujarat
March 31st, 04:32 pm
PM Modi launched and dedicated multiple development projects in Vav-Tharad, Gujarat, worth nearly ₹20,000 crore. Addressing a large gathering, he highlighted initiatives across roads, railways, power, water supply, urban development, healthcare and tourism aimed at boosting connectivity, improving public services and accelerating socio-economic growth in the region while strengthening the vision of a Viksit Bharat.Prime Minister Narendra Modi to inaugurate Samrat Samprati Museum and Kaynes Semicon Plant in Gujarat
March 30th, 11:05 am
PM Modi will visit Gujarat on 31st March 2026. He will inaugurate the Samrat Samprati Museum in Gandhinagar, showcasing the rich historical, cultural and spiritual legacy of Jainism. In a major step under the India Semiconductor Mission (ISM), the PM will inaugurate the Kaynes Semicon Plant at Sanand, Ahmedabad and will also visit Vav-Tharad to launch multiple development projects worth more than ₹20,000 crore.2026-27 நிதியாண்டு முதல் 2030-31 நிதியாண்டு வரையிலான சிறிய நீர்மின் உற்பத்தி மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
March 18th, 04:12 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு 2026-27 நிதியாண்டு முதல் 2030-31 நிதியாண்டு வரையிலான சிறிய நீர்மின் உற்பத்தி மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கென 2584.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் 1500 மெகாவாட் உற்பத்தித் திறனுடன் கூடிய சிறிய அளவிலான நீர் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை
March 11th, 05:45 pm
திரு பியூஷ் கோயல் அவர்களே, டாக்டர் எல்.முருகன் அவர்களே, திரு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களே, திரு நயினார் நாகேந்திரன் அவர்களே, திரு தங்கம் தென்னரசு அவர்களே, தமிழ்நாட்டைச் சேர்ந்த எனதருமை சகோதர, சகோதரிகளே வணக்கம்!திருச்சிராப்பள்ளியில் ரூ. 5650 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்
March 11th, 05:30 pm
தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஏராளமான மாற்றகரமான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திருச்சி மாநகருக்கு வந்திருந்தார். தூய்மையான எரிசக்தி, பெட்ரோலியம் சார்ந்த உற்பத்தி மற்றும் நெடுஞ்சாலைகள், ரயில்வே, கிராமப்புற சாலைகளின் வாயிலாக மேம்படுத்தப்பட்ட பன்முக இணைப்பு போன்ற துறைகளில் 5650 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் இதில் அடங்கும். “இந்தத் திட்டங்கள் எரிசக்தி அணுகல் மற்றும் இணைப்பை ஊக்குவிப்பதுடன், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும்”, என்று நிகழ்ச்சியில் பேசுகையில் பிரதமர் கூறினார்.