ஐரோப்பிய தொழில் துறை வட்டமேஜை மாநாட்டில் பிரதமர் விடுத்த பத்திரிகை செய்தியின் தமிழாக்கம்
May 17th, 11:43 pm
சற்று நேரத்திற்கு முன்புதான், ஸ்வீடன் நாட்டின் மிக உயரிய விருதான 'ராயல் ஆர்டர் ஆஃப் தி போலார் ஸ்டார்' (துருவ நட்சத்திரத்தின் அரச விருது) எனக்கு வழங்கப்பட்டது. இந்த அங்கீகாரம் எனக்கு மட்டுமே உரியதல்ல; இது நூற்றி நாற்பது கோடி இந்தியர்களுக்குக் கிடைத்த பெருமையாகும். மேலும், இந்தியா - ஸ்வீடன் உறவுகளை வளர்த்து, அதற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த ஸ்வீடனில் உள்ள நமது நண்பர்கள் அனைவருக்கும் செலுத்தப்படும் ஒரு மரியாதையாகும்.சுவீடன் நாட்டின் உயரிய விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது!
May 17th, 11:13 pm
சுவீடன் நாட்டின் கோதன்பர்க் நகரில் நடைபெற்ற விழாவில், பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் மிக உயரிய மற்றும் பழமையான விருதுகளில் ஒன்றான 'ராயல் ஆர்டர் ஆஃப் தி போலார் ஸ்டார், டிகிரி கமாண்டர் கிராண்ட் கிராஸ்' என்ற விருது வழங்கப்பட்டது. சுவீடனின் பட்டத்து இளவரசி விக்டோரியா இந்த விருதை பிரதமருக்கு வழங்கி கௌரவித்தார்.