கிரேக்க பிரதமர் திரு கைரியாகோஸ் மிட்சோடாகிஸ் உடன் பிரதமர் சந்திப்பு
February 19th, 07:15 pm
செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, பிப்ரவரி 19, 2026 அன்று, ஹெலனிக் குடியரசின் (கிரேக்கம்) பிரதமர் திரு கைரியாகோஸ் மிட்சோடாகிஸை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். புதுதில்லியில் நடைபெறும் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாடு 2026-இல் பங்கேற்பதற்காக, கிரேக்க பிரதமர், பிப்ரவரி 18 முதல் 19 வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பிரதமர் திரு மிட்சோடாகிஸ் உடன் டிஜிட்டல் ஆளுமை அமைச்சர் திரு டிமிட்ரியோஸ் பாப்பாஸ்டர்கியோ மற்றும் மூத்த அதிகாரிகள் குழுவும் வந்திருந்தது.ஏஐ தாக்க உச்சிமாநாட்டிற்கு இடையே ஃபின்லாந்து பிரதமர் திரு பெட்டேரி ஆர்போவை பிரதமர் சந்தித்தார்
February 18th, 05:10 pm
செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டிற்கு இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி, ஃபின்லாந்து பிரதமர் திரு பெட்டேரி ஆர்போவை புதுதில்லியில் 2026 பிப்ரவரி 18 அன்று சந்தித்தார்.இந்தியா – பிரான்ஸ் கூட்டறிக்கை
February 18th, 08:10 am
பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், பிரான்ஸ் அதிபர் திரு இமானுவேல் மேக்ரான் 2026 பிப்ரவரி 17 முதல் 19 வரை இந்தியாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு, செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாடு 2026-ல் பங்கேற்றார். அப்போது பிப்ரவரி 17 அன்று மும்பையில் இந்தியா – பிரான்ஸ் புதிய கண்டுபிடிப்பு ஆண்டு 2026-ஐ இரு தலைவர்களும் இணைந்து தொடங்கி வைத்து இருதரப்பு பேச்சு நடத்தினார்கள். இது பிரான்ஸ் அதிபர் மேக்ரோனின் 4-வது இந்திய பயணமாகும். 2025 பிப்ரவரி மாதத்தில் பிரதமர் திரு மோடி, பிரான்சில் பயணம் மேற்கொண்டார்.பிப்ரவரி 17 அன்று மும்பையில் பிரான்ஸ் அதிபர் மேக்ரோனை பிரதமர் சந்திக்கிறார்
February 16th, 09:02 am
பிரதமர் திரு நரேந்திர மோடி பிப்ரவரி 17 அன்று மும்பைக்குச் சென்று பிரான்ஸ் அதிபர் திரு. இம்மானுவேல் மேக்ரோனைச் சந்திப்பார்.