80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
August 15th, 04:44 pm
80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு. மோடி இன்று செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களிடையே உரையாற்றினார். தனது உரையில், கடந்த 12 ஆண்டுகளில் உற்பத்தித் துறை, டிஜிட்டல் வளர்ச்சி மற்றும் குடிமக்களுக்கான சேவைகள் வழங்குதல் ஆகிய துறைகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் குறித்த விரிவான அறிக்கையை அவர் முன்வைத்தார். அத்துடன், நாட்டின் லட்சியங்களை அடைவதற்கான ஏழு முக்கிய துறைகளை உள்ளடக்கிய 'சப்த தாரா' (Sapta Dhara) எனும் மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டத்தையும் அவர் அறிமுகப்படுத்தினார்.மாற்றத்தின் 12 ஆண்டுகள்: சுதந்திர தின உரையில் நாட்டின் முன்னேற்றத்தை எடுத்துரைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி
August 15th, 01:18 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தமது சுதந்திர தின உரையில், கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றத்தை எடுத்துரைத்தார். உற்பத்தித் துறை, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகள், எரிசக்திப் பாதுகாப்பு, இளைஞர் மேம்பாடு, புத்தாக்கம், சமூகப் பாதுகாப்பு, பிற முக்கியத் துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.ஓராண்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவுத் துறையில் திறன் பயிற்சி அளிக்கப்படும் என்று பிரதமர் அறிவிப்பு
August 15th, 01:01 pm
நாட்டின் 80-வது சுதந்திர தினத்தன்று செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, செயற்கை நுண்ணறிவு, கல்வி, விளையாட்டு, குடிமைப் பாதுகாப்பு, குறைக்கடத்தி உற்பத்தி, அணுசக்தி, பெண்கள் தலைமையிலான வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு முன்முயற்சிகள் மற்றும் இலக்குகளை அறிவித்தார்.குஜராத் மாநிலம், ஹஜிராவில் நடைபெற்ற கண்காட்சியில், பிரதமர் பங்கேற்பு
June 05th, 10:08 pm
குஜராத் மாநிலம் ஹஜிராவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (05-06-2026) கலந்து கொண்டார். பாதுகாப்புத் துறையில், 'மேக் இன் இந்தியா' (இந்தியாவில் உற்பத்தி செய்வோம்) என்ற முன்முயற்சியின் கீழ், அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த இந்தியாவின் வளர்ந்து வரும் திறன்களை அவர் பார்வையிட்டார்.சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் – உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் மாநாடு 2024-ல் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமைக்கு தொழில்துறை தலைவர்கள் பாராட்டு
October 15th, 02:23 pm
புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற, சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் – உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் பேரவை (ITU-WTSA) 2024-ல் இந்தியா மொபைல் காங்கிரஸின் 8-வது பதிப்பை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் பேரவை (WTSA) என்பது ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்பாடு செய்யப்படும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனமான சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் தரப்படுத்தல் பணிக்கான மாநாடு ஆகும். இந்தியா மற்றும் ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் – உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் பேரவை (ITU-WTSA) நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். தொலைத்தொடர்பு, டிஜிட்டல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பத் துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 190-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை ஒன்றிணைத்த ஒரு முக்கிய உலகளாவிய நிகழ்வு இதுவாகும்.செயற்கை நுண்ணறிவு குறித்த வருடாந்திர உலகளாவிய கூட்டாண்மை உச்சிமாநாட்டை (ஜிபிஏஐ) டிசம்பர் 12 அன்று பிரதமர் தொடங்கி வைப்பார்
December 11th, 04:27 pm
ஜி.பி.ஏ.ஐ என்பது 29 உறுப்பு நாடுகளைக் கொண்ட பல்வேறு சம்பந்தப்பட்டவர்களின் முன்முயற்சியாகும், இது செயற்கை நுண்ணறிவு தொடர்பான முன்னுரிமைகளில் அதிநவீன ஆராய்ச்சி மற்றும் பயன்பாட்டு நடவடிக்கைகளை ஆதரிப்பதன் மூலம் செயற்கை நுண்ணறிவு குறித்த கோட்பாடு மற்றும் நடைமுறைக்கு இடையேயான இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2024-ம் ஆண்டில் ஜி.பி.ஏ.ஐ.யின் முன்னணி தலைமைத்துவமாக இந்தியா உள்ளது.டிசம்பர் 3-ந் தேதி பிரதமர் இன்பினிட்டி அமைப்பை தொடங்கி வைக்கிறார்
November 30th, 11:26 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஃபின்டெக் தொடர்பான இன்பினிட்டி அமைப்பை டிசம்பர் 3-ந் தேதி காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்.எண்ணெய் நிறுவனங்களின் சிஇஓ-க்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
October 09th, 02:26 pm
எண்ணெய் நிறுவனங்களின் சிஇஓ-க்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். உயிரி எரிசக்தியின் தேவையை எடுத்துரைத்து, எரிசக்தி கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், கிழக்கு இந்தியாவில் உள்ள எரியாற்றலை பெறுவது குறித்தும் வலியுறுத்தினார். இந்தியா சுத்தமான ஆற்றல் மிக்க எரிசக்தியை நோக்கி முன்னேறி வருகிறது என்றும், அதன் பலன் சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் குறிப்பாக ஏழை மக்களுக்கு சென்றடைய வேண்டும் என தெரிவித்தார்.