Rashtra Prerna Sthal gives the message that every step, every effort must be dedicated to nation-building: PM Modi in Lucknow

December 25th, 06:16 pm

PM Modi inaugurated the Rashtra Prerna Sthal in Lucknow, Uttar Pradesh today. He paid respectful homage, offering salutations to Mahamana Malaviya ji, Atal ji, and Maharaja Bijli Pasi. He remarked that Atal ji and Malaviya ji dedicated their lives to safeguarding India’s identity, unity and pride. Quoting lines of Atal ji, the PM emphasized that Rashtra Prerna Sthal gives the message that every step, every effort must be dedicated to nation-building.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உத்வேகமளிக்கும் தேசிய நினைவிடத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார்

December 25th, 05:23 pm

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் வாழ்க்கை மற்றும் இலட்சியங்களைப் போற்றும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இன்று தேசிய நினைவிடத்தை திறந்து வைத்தார். வாஜ்பாயின் 101 - வது பிறந்த தினத்தைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இன்று லக்னோ நகரம் ஒரு புதிய உத்வேகத்திற்கு சாட்சியாக உள்ளது என்று குறிப்பிட்டார்., இந்தியாவில் மற்றும் உலகளவில் உள்ள மக்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தியாவிலும் லட்சக்கணக்கான கிறித்தவ குடும்பங்கள் இன்று இந்த பண்டிகையைக் கொண்டாடுகின்றன என்று திரு மோடி குறிப்பிட்டார். இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியைக் கொண்டுவர வேண்டும் என்பதே நம் அனைவரின் ஒன்றிணைந்த விருப்பம் என்றும் அவர் கூறினார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை உத்தரப்பிரதேசம் பயணம்

December 24th, 11:04 am

மறைந்த முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாயின் 101-வது பிறந்த தினமான நாளை (25.12.2025) பிரதமர் திரு நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவிற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள தேசிய நினைவிடத்தை நாளை பிற்பகல் 2.30 மணிக்கு பிரதமர் திறந்து வைத்து உரையாற்றவுள்ளார். இந்த தேசிய நினைவிடம் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், ஷியாமா பிரசாத் முகர்ஜி, தீன்தயாள் உபாத்யாயா ஆகிய தலைவர்களின் வாழ்க்கையையும் அவர்களது தத்துவங்களையும், சித்தாத்தங்களையும் எடுத்துரைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.