இந்தியாவின் 100-வது ராம்சர் தளமாக ஜெயபிரகாஷ் நாராயண் பறவைகள் சரணாலயம் அறிவிக்கப்பட்டிருப்பதற்கு பிரதமர் பாராட்டு
June 05th, 11:58 am
உத்தரப்பிரதேசத்தின் பல்லியாவில் உள்ள ஜெயபிரகாஷ் நாராயண் பறவைகள் சரணாலயம் நாட்டின் 100-வது ராம்சர் தளமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ராம்சர் தளங்களின் 100 என்பதை எட்டியிருப்பது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (05.06.2026) மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.பாட்னா பறவைகள் சரணாலயம் மற்றும் சாரி-தாந்த் ஆகிய இடங்களில் புதிய ராம்சர் தளங்கள் அமைக்கப்பட்டதற்கு பிரதமர் வரவேற்பு
January 31st, 10:52 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச மாநிலத்தின் இட்டா மாவட்டத்தில் உள்ள பாட்னா பறவைகள் சரணாலயம் மற்றும் குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் உள்ள சாரி-தாந்த் ஆகியவை ராம்சர் தளங்களாக சேர்க்கப்பட்டுள்ளதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். உள்ளூர் மக்களுக்கும், ஈரநிலப் பாதுகாப்பு மீது ஆர்வமுள்ள அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்த திரு மோடி, இத்தகைய அங்கீகாரங்கள், பல்லுயிர் பெருக்கம் மற்றும் முக்கிய சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதில் உள்ள நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாக உள்ளன என்று கூறியுள்ளார்.இந்தியாவின் ஈரநிலப் பாதுகாப்பு இயக்கத்தில் ஒரு மைல்கல்லாகப் பீகாரின் புதிய ராம்சர் தளங்கள்- பிரதமர் பாராட்டு
September 27th, 06:00 pm
பீகாரின் பக்சர் மாவட்டத்தில் கோகுல் ஜலஷே (448 ஹெக்டேர்), மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உதய்பூர் ஜீல் (319 ஹெக்டேர்) ஆகிய இரண்டு புதிய ராம்சர் தளங்கள் சேர்க்கப்பட்டது, இந்தியாவின் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வுக்கு பெருமை சேர்க்கும் தருணம் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பாராட்டியுள்ளார்.