Making the life of farmers and the poor is the priority of the double engine government: PM Modi

January 25th, 02:00 pm

Prime Minister Narendra Modi inaugurated and laid the foundation stone for development projects worth over Rs 19,100 crores in Bulandshahr, Uttar Pradesh. Addressing the gathering, the Prime Minister expressed gratitude for the affection and trust shown by the people of Bulandshahr, especially the mothers and sisters who turned up in huge numbers. PM Modi thanked his good fortune for Lord Shri Ram’s darshan on the 22nd of January and the presence of the people of Uttar Pradesh on today’s occasion.

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் ரூ.19,100 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவுற்ற திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்

January 25th, 01:33 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷஹரில் ரூ.19,100 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை தொடங்கிவைத்தார். ரயில்வே, சாலை, எண்ணெய், எரிவாயு, நகர்ப்புற மேம்பாடு, வீட்டுவசதி போன்ற பல முக்கிய துறைகளுடன் இந்த திட்டங்கள் தொடர்புடையவையாகும்.

அயோத்தியில் பாலராமர் பிரதிஷ்டையின்போது பிரதமர் திரு நரேந்திரமோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்

January 22nd, 05:12 pm

வணக்கத்திற்குரிய சபையோர்களே, அனைத்து துறவிகள், முனிவர்கள், இங்கு கூடியுள்ள அனைத்து ராம பக்தர்கள், உலகின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் நம் அனைவருடனும் இணைந்துள்ளவர்கள், உங்கள் அனைவருக்கும் வணக்கம், அனைவருக்கும் ராம நாம வாழ்த்துக்கள்

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ ராம ஜன்மபூமி கோயிலில் ஸ்ரீ குழந்தை ராமரின் பிராணப் பிரதிஷ்டை விழாவில் பிரதமர் பங்கேற்றார்

January 22nd, 01:34 pm

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராம ஜன்மபூமி கோயிலில் குழந்தை ராமர் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பங்கேற்றார். ஸ்ரீ ராம் ஜன்மபூமி கோயில் கட்டுவதற்குப் பங்களித்தத் தொழிலாளர்களுடன் திரு மோடி கலந்துரையாடினார்.

பிரதமரின் ஜன்மன் திட்டத்தின் கீழ் 1 லட்சம் பயனாளிகளுக்கு முதல் தவணை வழங்கும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

January 15th, 12:15 pm

வாழ்த்துகள்! உத்தராயணம், மகர சங்கராந்தி, பொங்கல், பிஹு போன்ற கொண்டாட்டங்களால் தற்போது நாடு முழுவதும் ஒரு பண்டிகை சூழல் பரவியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் உங்களுடன் உரையாடுவதை ஒரு கொண்டாட்டமாக உணர்கிறேன். தற்போது, அயோத்தியில் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. அதே நேரத்தில், என் குடும்பத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படும் மிகவும் பின்தங்கிய ஒரு லட்சம் பழங்குடி சகோதர சகோதரிகள் தங்கள் வீடுகளில் மகிழ்ச்சியுடன் இதனைக் கொண்டாடி வருகின்றனர். இது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. இன்று வீடு கட்டுவதற்காக அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. இந்தக் குடும்பங்கள் அனைத்திற்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களுக்கு மகிழ்ச்சியான மகர சங்கராந்தி நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர்-ஜன்மனின் கீழ் 1 லட்சம் பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்டத்தின் பயனாளிகளுக்கு முதல் தவணையை பிரதமர் வெளியிட்டார்

January 15th, 12:00 pm

பிரதமரின் ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் (பி.எம்-ஜன்மன்) திட்டத்தின் கீழ், பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தின் முதல் தவணையை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்-ஜன்மனின் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

ஸ்ரீ ராம் லாலாவை வரவேற்கும் சுவாதி மிஸ்ராவின் பக்திப் பாடல் மெய்சிலிர்க்க வைக்கிறது: பிரதமர்

January 03rd, 08:07 am

ஸ்ரீ ராம் லாலாவை வரவேற்று சுவாதி மிஸ்ரா பாடிய பக்திப் பாடலை பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இந்தப் பாடல் மெய்சிலிர்க்க வைக்கிறது என்று திரு மோடி கூறியுள்ளார்.

அயோத்தியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

December 30th, 02:15 pm

அனைவருக்கும் வணக்கம்! ஜனவரி 22-ஆம் தேதி நடக்கவிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. எனவே, அயோத்திவாசிகளிடையே உற்சாகமும், மகிழ்ச்சியும் எழுவது மிகவும் இயல்பானது. உங்களைப் போலவே நானும் உற்சாகமாக இருக்கிறேன்.

பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில். ரூ.15,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார்

December 30th, 02:00 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அயோத்தி தாமில் ரூ.15,700 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, நிறைவைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அயோத்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் வளர்ச்சிக்காக சுமார் ரூ. 11,100 கோடி மதிப்புள்ள திட்டங்கள் மற்றும் உத்தரப்பிரதேசம் முழுவதும் சுமார் ரூ. 4600 கோடி மதிப்புள்ள பிற திட்டங்களும் இதில் அடங்கும்.

140 கோடி மக்கள் பல மாற்றங்களைச் செய்து வருகின்றனர்: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

November 26th, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலுக்கு உங்களை வரவேற்கிறேன். ஆனால் இன்று நவம்பர் மாதம் 26ஆம் தேதியை நம்மால் எப்படி மறக்க முடியும்!! இன்றைய நாளன்று தான் நாடெங்கிலும் மிகவும் கொடுமையான தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றது. தீவிரவாதிகள் மும்பை நகரையும், நாடு முழுவதையும், உலுக்கிப் போட்டார்கள். ஆனால் நமது பாரத நாட்டின் வல்லமை எத்தகையது என்றால், அந்தத் தாக்குதலிலிருந்து மீண்டு, இப்போது முழுத் தன்னம்பிக்கையோடு, தீவிரவாதத்தைக் காலில் போட்டு மிதித்து இருக்கிறோம். மும்பைத் தாக்குதலில் தனது இன்னுயிர்களை இழந்த அனைவருக்கும் நான் எனது சிரத்தாஞ்சலிகளை அர்ப்பணம் செய்கிறேன். இந்தத் தாக்குதலில் நமது வீரர்கள் வீரகதியை அடைந்தார்கள், தேசம் அவர்களை இன்று நினைவில் வைத்துப் போற்றுகிறது.