PM Modi addresses an enthusiastic public rally in Madurai, Tamil Nadu
March 01st, 04:30 pm
PM Modi addressed a massive public rally in Madurai, beginning his speech with deep reverence for Tamil Nadu’s spiritual heritage. He said he had just visited Tirupparankundram and received the darshan of Bhagwan Murugan, describing it as a truly pine experience. He said he prayed for the prosperity of Tamil Nadu and the entire nation.தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
July 26th, 08:16 pm
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களான கிஞ்சரப்பு ராமமோகன் நாயுடு அவர்களே, டாக்டர் எல்.முருகன் அவர்களே, தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு அவர்களே, டாக்டர் டி.ஆர்.பி.ராஜா அவர்களே, பி.கீதா ஜீவன் அவர்களே, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களே, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் அவர்களே, தமிழ்நாட்டைச் சேர்ந்த சசோதர சகோதரிகளே!பிரதமர் திரு. நரேந்திர மோடி, தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் ₹4800 கோடிக்கும் அதிக மதிப்புள்ள மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டிற்கு அர்ப்பணித்தார்
July 26th, 07:47 pm
தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் இன்று சுமார் ₹4800 கோடி மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியதுடன், நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டிற்கு அர்ப்பணித்தார். பல்வேறு துறைகளில் அமைந்துள்ள தொடர்ச்சியான முக்கிய திட்டங்கள், பிராந்திய இணைப்பை கணிசமாக மேம்படுத்தும், தளவாடத் திறனை அதிகரிக்கும், தூய்மையான எரிசக்தி உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் மற்றும் தமிழ்நாடு முழுவதும் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும். கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, கார்கிலின் துணிச்சல்மிகு வீரர்களுக்கு திரு. மோடி மரியாதை செலுத்தினார். தீரம் நிறைந்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தியதுடன், தேசத்திற்காக தங்கள் இன்னுயிரை நீத்த தியாகிகளுக்கு மனமார்ந்த அஞ்சலி செலுத்தினார்.இலங்கை அதிபர் உடனிருந்த கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதமர் வெளியிட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம்
December 16th, 01:00 pm
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள அதிபர் திசநாயகவை நான் அன்புடன் வரவேற்கிறேன். அதிபராக உங்களின் முதலாவது வெளிநாட்டுப் பயணத்திற்கு இந்தியாவைத் தேர்ந்தெடுத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதிபர் திசநாயகவின் வருகை எங்கள் உறவுகளில் புதிய உத்வேகத்தையும் சக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. எங்கள் கூட்டாண்மைக்கான எதிர்கால தொலைநோக்கை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். எங்கள் பொருளாதார கூட்டணியில் முதலீடு சார்ந்த வளர்ச்சி, இணைப்பு ஆகியவற்றுக்கு நாங்கள் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். எங்கள் கூட்டணியின் முக்கிய தூண்களாக கட்டமைப்பு, டிஜிட்டல் மற்றும் எரிசக்தி இணைப்பு இருக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். இரு நாடுகளுக்கும் இடையே மின்சாரத் தொகுப்பு இணைப்பு மற்றும் பல்பொருள் பெட்ரோலிய குழாய்கள் அமைப்பதை நோக்கி நாங்கள் பணியாற்றுவோம். சம்பூர் சூரிய மின்சக்தி திட்டம் துரிதப்படுத்தப்படும். இதற்கும் கூடுதலாக, இலங்கையின் மின் உற்பத்தி நிலையங்களுக்கு திரவ இயற்கை எரிவாயு வழங்கப்படும். இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்த பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்ற இரு தரப்பினரும் முயற்சி செய்யப்படும்.ஜனவரி 20-21 தேதிகளில் பிரதமர், தமிழ்நாட்டில் உள்ள பல கோயில்களில் வழிபாடு மேற்கொள்கிறார்
January 18th, 06:59 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 ஜனவரி 20 மற்றும் 21-ம் தேதிகளில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு முக்கிய கோயில்களுக்கு பயணம் செய்து வழிபாடு செய்கிறார்.