சுதேசி தயாரிப்புகள், உள்ளூர் மக்களுக்கான குரல்: பிரதமர் மோடியின் ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பண்டிகை அழைப்பு.
September 28th, 11:00 am
இந்த மாத ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) உரையில், பகத் சிங் மற்றும் லதா மங்கேஷ்கரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்திய கலாச்சாரம், பெண்களுக்கு அதிகாரமளித்தல், நாடு முழுவதும் கொண்டாடப்படும் பல்வேறு பண்டிகைகள், ஆர்எஸ்எஸ்ஸின் 100 ஆண்டு பயணம், தூய்மை மற்றும் காதி விற்பனையில் ஏற்பட்ட எழுச்சி போன்ற முக்கிய தலைப்புகள் குறித்தும் அவர் பேசினார். நாட்டை தன்னிறைவு பெறுவதற்கான பாதை சுதேசியை ஏற்றுக்கொள்வதில் உள்ளது என்பதை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.‘உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுங்கள்’ – ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில், பிரதமர் மோடி சுதேசி பெருமையுடன் பண்டிகைகளைக் கொண்டாட வலியுறுத்துகிறார்.
August 31st, 11:30 am
இந்த மாத ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) உரையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய பாதுகாப்புப் படையினர் மற்றும் குடிமக்களுக்கு பிரதமர் மோடி மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் விளையாட்டு நிகழ்வுகள், சூரிய சக்தி, ‘ஆபரேஷன் போலோ’ மற்றும் இந்திய கலாச்சாரத்தின் உலகளாவிய பரவல் போன்ற முக்கியமான தலைப்புகளையும் அவர் தொட்டார். பண்டிகைக் காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதன் முக்கியத்துவத்தையும், தூய்மையைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் குடிமக்களுக்கு நினைவூட்டினார்.ஃபிஜி பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் வெளியிட்ட கருத்துக்களின் தமிழாக்கம்
August 25th, 12:30 pm
அந்த நேரத்தில், நாங்கள் இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மன்றத்தைத் (FIPIC) தொடங்கினோம். இந்த முயற்சி இந்திய-ஃபிஜி உறவுகளை மட்டுமல்லாமல், முழு பசிபிக் பிராந்தியத்துடனான எங்கள் உறவுகளையும் வலுப்படுத்தியுள்ளது. இன்று, பிரதமர் திரு ரபுகாவின் வருகையுடன், எங்கள் கூட்டாண்மையில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுகிறோம்.பிலிப்பைன்ஸ் அதிபருடனான செய்தியாளர்கள் சந்திப்பின் போது பிரதமர் வெளியிட்ட ஊடக செய்தி
August 05th, 11:06 am
முதலாவதாக, இந்தியாவிற்கு அதிபர் மற்றும் அவரது குழுவினரை நான் அன்புடன் வரவேற்கிறேன். இந்த ஆண்டு, இந்தியாவும் பிலிப்பைன்ஸும் தூதரக உறவுகளின் 75 ஆண்டுகளைக் கொண்டாடுகின்றன. இந்த சூழலில், இந்தப் பயணம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. நமது தூதரக உறவுகள் சமீபத்தியவை என்றாலும், நமது நாகரிக தொடர்பு பண்டைய காலத்துடன் தொடர்புடையது. ராமாயணத்தின் பிலிப்பைன்ஸ் பதிப்பு - மஹாராடியா லாவானா நமது ஆழமான வேரூன்றிய கலாச்சார பிணைப்புக்கு உள்ள சான்றாகும்.தாய்லாந்து அரசின் ராமகீன் சுவரோவியங்களை சித்தரிக்கும் ஐஸ்டாம்ப் வெளியீட்டை பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்
April 03rd, 09:14 pm
தாய்லாந்து அரசு ராமகீன் சுவரோவியங்களை சித்தரிக்கும் ஐஸ்டாம்ப் வெளியீட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.பிரதமர் தாய்லாந்து பிரதமருடன் கூட்டாக வெளியிட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம்
April 03rd, 03:01 pm
எனக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காகப் பிரதமர் ஷினவத்ராவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ராமாக்கியென் எனப்படும் மனங்கவரும் தாய்லாந்து ராமாயண நிகழ்ச்சியை பிரதமர் கண்டுகளித்தார்
April 03rd, 01:02 pm
இந்தியா, தாய்லாந்து இடையேயான ஆழ்ந்த கலாச்சார, நாகரீக உறவுகள் குறித்து பாராட்டு தெரிவித்த பிரதமர் திரு நரேந்திர மோடி, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இன்று ராமாக்கியென் என்ற மனங்கவரும் தாய்லாந்து ராமாயண நிகழ்ச்சியை கண்டுகளித்தார்.மனதின் குரல் நிகழ்ச்சியின் 120-வது அத்தியாயத்தில், 30.03.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 30th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று மிகவும் புனிதமான தினம், இன்றைய தினத்தன்று மனதின் குரலை ஒலிக்கச் செய்யும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்திருக்கிறது. இன்று சைத்ர மாத சுக்ல பக்ஷத்தின் பிரதிபதா திதியாகும். இன்றிலிருந்து சைத்ர நவராத்திரி தொடங்குகிறது. இன்றிலிருந்து பாரதிய நவவருஷமும் தொடங்குகிறது. இந்த முறை விக்ரம் சம்வந்த் 2082 தொடங்குகிறது. பிஹாரிலிருந்தும், மேற்கு வங்கத்திலிருந்தும், தமிழ்நாட்டிலிருந்தும், குஜராத்திலிருந்தும் என, இந்த வேளையிலே என் முன்பாக உங்களுடைய ஏராளமான கடிதங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றிலே பல கடிதங்கள் சுவாரசியமான முறையிலே மக்களுக்குத் தங்களுடைய மனதின் குரலைப் பதிவு செய்கின்றன. பல கடிதங்களில் நல்வாழ்த்துக்களும் உண்டு, பாராட்டுச் செய்திகளும் உண்டு. ஆனால் இன்று சில செய்திகளை உங்களுக்கு ஒலிக்கச் செய்யவேண்டும் என்று என் மனம் ஆசைப்படுகிறது.தாய்லாந்தில் நடைபெற்ற சம்வாத் நிகழ்ச்சியின் போது பிரதமர் ஆற்றிய உரை
February 14th, 08:30 am
தாய்லாந்தில் நடைபெறும் இந்த சம்வாத் (விவாத உரையாடல்) பதிப்பில் உங்கள் அனைவருடனும் இணைவது பெரும் கௌரவமாகும். இந்தியா, ஜப்பான் மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த பல புகழ்பெற்ற நிறுவனங்கள், தனிநபர்கள் இந்த நிகழ்வை சாத்தியமாக்க பாடுபடுகின்றனர். அவர்கள் அனைவரையும், அவர்களின் முயற்சிகளுக்காக நான் பாராட்டுகிறேன், மேலும் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தாய்லாந்து சம்வாத் நிகழ்வில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை
February 14th, 08:10 am
தாய்லாந்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சம்வாத் நிகழ்வில், பிரதமர் திரு நரேந்திர மோடி, காணொலிக் காட்சி மூலம் இன்று உரையாற்றினார். இந்த சம்வாத் நிகழ்வில், இணைவதை தமக்கான கௌரவமாககா கருதுவதாகத் தெரிவித்த திரு மோடி, இந்தியா, ஜப்பான், தாய்லாந்து ஆகியவற்றைச் சேர்ந்த பிரபல நிறுவனங்களும் தனிநபர்களும் பங்கேற்பது இந்த நிகழ்வை சாத்தியமாக்கியுள்ளது என்று குறிப்பிட்டார். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள ஸ்ரீ சனாதன தர்ம ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்தின் போது பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 02nd, 02:45 pm
மாண்புமிகு அதிபர் திரு பிரபோவோ அவர்களே, முருகன் கோவில் அறக்கட்டளையின் தலைவர் பா ஹாஷிம் அவர்களே, நிர்வாக அறங்காவலர் டாக்டர். கோபாலன் அவர்களே, தமிழ்நாடு மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த பிரமுகர்களே, ஆச்சார்யர்களே, புலம்பெயர்ந்த இந்தியர்களே, இந்தோனேசியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த குடிமக்களே!இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள ஸ்ரீ சனாதன தர்ம ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்தின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் கருத்துக்கள்
February 02nd, 02:30 pm
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள ஸ்ரீ சனாதன தர்ம ஆலயத்தின் மஹா கும்பாஹிஷேகத்தின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி செய்தி மூலம் தமது கருத்துக்களை தெரிவித்தார். அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, முருகன் கோவில் அறக்கட்டளையின் தலைவர் பா ஹாஷிம், நிர்வாக அறங்காவலர் டாக்டர். கோபாலன், தமிழகம் மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த பிரமுகர்கள், ஆச்சார்யர்கள், புலம்பெயர்ந்த இந்தியர்கள், இந்தோனேசியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.இந்தோனேசியா அதிபருடனான கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமரின் அறிக்கை
January 25th, 01:00 pm
இந்தியாவின் முதல் குடியரசு தினத்திற்கு இந்தோனேஷியா எங்கள் தலைமை விருந்தினராக இருந்தது. மேலும், நமது 75வது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்த வேளையில், இந்தோனேஷியா மீண்டும் இந்த முக்கியமான நிகழ்வில் பங்கேற்பதை மனதார ஏற்றுக்கொண்டது எங்களுக்கு மிகவும் பெருமைக்குரிய விஷயம். இந்தச் சந்தர்ப்பத்தில் அதிபர் பிரபோவோவை நான் இந்தியாவிற்கு அன்புடன் வரவேற்கிறேன்.லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசின் வியன்டியானுக்குப் பிரதமரின் பயணம் (அக்டோபர் 10 -11, 2024) : மேற்கொள்ளப்பட்ட முடிவுகளின் பட்டியல்
October 11th, 12:39 pm
இந்தியக் குடியரசின் பாதுகாப்பு அமைச்சகம், லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்அயோத்தியில் பாலராமர் பிரதிஷ்டையின்போது பிரதமர் திரு நரேந்திரமோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
January 22nd, 05:12 pm
வணக்கத்திற்குரிய சபையோர்களே, அனைத்து துறவிகள், முனிவர்கள், இங்கு கூடியுள்ள அனைத்து ராம பக்தர்கள், உலகின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் நம் அனைவருடனும் இணைந்துள்ளவர்கள், உங்கள் அனைவருக்கும் வணக்கம், அனைவருக்கும் ராம நாம வாழ்த்துக்கள்அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ ராம ஜன்மபூமி கோயிலில் ஸ்ரீ குழந்தை ராமரின் பிராணப் பிரதிஷ்டை விழாவில் பிரதமர் பங்கேற்றார்
January 22nd, 01:34 pm
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராம ஜன்மபூமி கோயிலில் குழந்தை ராமர் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பங்கேற்றார். ஸ்ரீ ராம் ஜன்மபூமி கோயில் கட்டுவதற்குப் பங்களித்தத் தொழிலாளர்களுடன் திரு மோடி கலந்துரையாடினார்.ஸ்ரீ ராமர் கோவில் பிரதிஷ்டையை முன்னிட்டு சிறப்பு தபால் தலை மற்றும் புத்தகம் வெளியீடு குறித்த பிரதமரின் காணொலி செய்தி
January 18th, 02:10 pm
ஸ்ரீ ராமர் கோவில் பிரதிஷ்டை தொடர்பான மற்றொரு அற்புதமான நிகழ்ச்சியில் இணைந்திருக்கும் பாக்கியம் இன்று, எனக்கு கிடைத்துள்ளது. இன்று, ஸ்ரீ ராம ஜன்மபூமி கோயிலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 6 சிறப்பு தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. பகவான் ஸ்ரீ ராமர் தொடர்பான தபால் தலைகள் உலகின் பல்வேறு நாடுகளில் முன்னதாக வெளியிடப்பட்டுள்ளன, இன்று அவரது தபால் தலைத் தொகுப்பும் வெளியிடப்பட்டுள்ளது. உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள ராமரின் பக்தர்கள் அனைவருக்கும், நாட்டுமக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயம் தொடர்பான ஆறு சிறப்புத் தபால் தலைகளை பிரதமர் வெளியிட்டார்
January 18th, 02:00 pm
ஸ்ரீ ராமஜென்மபூமி கோயில் தொடர்பான ஆறு சிறப்பு தபால் தலைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (18.01.2024) வெளியிட்டார். அத்துடன் உலகின் பல்வேறு நாடுகளில் முன்பு வெளியிடப்பட்ட ராமர் தொடர்பான இதேபோன்ற தபால் தலைகள் அடங்கிய தொகுப்பு நூலும் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு பாரதத்திலும் வெளிநாடுகளிலும் உள்ள ராமரின் பக்தர்கள் அனைவருக்கும் பிரதமர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.தேசிய சுங்கம், மறைமுக வரிகள், போதைப்பொருள் தடுப்பு அகாடமியைத் திறந்து வைத்துப் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
January 16th, 04:00 pm
ஆந்திரப் பிரதேச ஆளுநர் திரு எஸ். அப்துல் நசீர் அவர்களே, முதலமைச்சர் திரு ஜெகன் மோகன் ரெட்டி அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்கள் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களே, திரு பங்கஜ் செளத்ரி அவர்களே, திரு பகவத் கிஷன்ராவ் கரத் அவர்களே, பிரதிநிதிகளே, தாய்மார்களே, பெரியோர்களே.ஆந்திர மாநிலம், ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், பாலசமுத்திரத்தில் தேசிய சுங்கம், மறைமுக வரிகள், போதைப்பொருள் தடுப்பு அகாடமியின் புதிய வளாகத்தை பிரதமர் திறந்து வைத்தார்
January 16th, 03:30 pm
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், பாலசமுத்திரத்தில் தேசிய சுங்கம், மறைமுக வரிகள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு அகாடமியின் புதிய வளாகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார். இந்திய வருவாய்ப் பணியின் (சுங்கம் மற்றும் மறைமுக வரிகள்) 74, 75-வது பிரிவு பயிற்சி அதிகாரிகள், பூட்டானின் ராயல் குடிமைப் பணியின் பயிற்சி அதிகாரிகளுடனும் பிரதமர் கலந்துரையாடினார்.