This is the right time to Create In India, Create For The World: PM Modi at WAVES Summit
May 01st, 03:35 pm
At the inaugural address of WAVES 2025, PM Modi called it a landmark moment for the global creative community. He emphasized that the summit unites over 100 nations through storytelling, music, gaming, and innovation, showcasing India's leadership in culture and creativity.பிரதமர் திரு நரேந்திர மோடி வேவ்ஸ் 2025 உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார்
May 01st, 11:15 am
மும்பையில் உள்ள ஜியோ உலக மையத்தில் இந்தியாவின் முதலாவது உலக ஒலி, ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மகாராஷ்டிரா தினம் மற்றும் குஜராத் மாநில தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்தார். அனைத்து சர்வதேச பிரமுகர்கள், தூதர்கள் மற்றும் படைப்பாற்றல் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் வந்திருப்பதை குறிப்பிட்ட பிரதமர், இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் கலைஞர்கள், புதுமைப் படைப்பாளர்கள், முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோர் திறமையையும், படைப்பாற்றலையும் கொண்ட உலகளாவிய அமைப்புக்கு அடித்தளம் அமைக்க ஒன்றிணைந்துள்ளனர் என்று அவர் கூறினார். வேவ்ஸ் என்பது ஒரு சுருக்கப்பெயர் மட்டுமே அல்ல என்றும், இது கலாச்சாரம், படைப்பாற்றல் மற்றும் உலகளாவிய தொடர்பைக் குறிக்கும் ஒரு அலை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் இந்த உச்சிமாநாடு திரைப்படங்கள், இசை, கேமிங், அனிமேஷன், கதைசொல்லல் ஆகியவற்றின் விரிவான உலகத்தை எடுத்துக்காட்டுகிறது என்று அவர் தெரிவித்தார். கலைஞர்கள் மற்றும் படைப்பாளர்களை ஒருங்கிணைக்கவும் ஒத்துழைத்து செயல்படவும் உலகளாவிய தளத்தை இது வழங்குகிறது என அவர் கூறினார். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனைவரையும் பாராட்டிய பிரதமர், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள சிறப்பு விருந்தினர்களை அன்புடன் வரவேற்றார்.அரசியலமைப்புச் சட்டம் எங்களின் வழிகாட்டி வெளிச்சம்: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி
December 29th, 11:30 am
நண்பர்களே, அடுத்த மாதம் 13ஆம் தேதி முதல் பிரயாக்ராஜில் மகாகும்பமேளா நடைபெற இருக்கிறது. இந்த வேளையில், அங்கே சங்கமத்தின் கரையில் தடபுடலாக ஏற்பாடுகள் நடந்தேறி வருகின்றன. சில நாட்கள் முன்பாக நான் பிரயாக்ராஜ் சென்றிருந்த வேளையில், ஹெலிகாப்டர் மூலமாக மொத்த கும்பமேளாவும் நடைபெறவுள்ள இடத்தையும் பார்வையிட்ட போது மனதில் பெரும் நிறைவு உண்டானது. என்னவொரு விசாலம்!! என்னவொரு அழகு!! எத்தனை பிரும்மாண்டம்!! அடேயப்பா!!ராஜ் கபூரின் 100-வது பிறந்த நாளையொட்டி பிரதமர் மரியாதை
December 14th, 11:17 am
புகழ்பெற்ற ராஜ் கபூரின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். அவர் ஒரு தொலைநோக்கு சிந்தனை கொண்ட திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என்று அவரைப் பிரதமர் பாராட்டியுள்ளார். ராஜ் கபூர் வெறும் திரைப்படத் தயாரிப்பாளர் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்ற கலாச்சாரத் தூதராகத் திகழ்ந்தார் என்று குறிப்பிட்டுள் திரு நரேந்திர மோடி, அடுத்து வரும் தலைமுறைகளைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், நடிகர்களும் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.திரைப்பட ஜாம்பவான் ராஜ் கபூரின் நூற்றாண்டு குறித்து கபூர் குடும்பத்தினருடன் பிரதமர் நடத்திய உரையாடலின் தமிழாக்கம்
December 11th, 09:00 pm
கடந்த ஒரு வாரமாக, எங்கள் வாட்ஸ்அப் குடும்பக் குழு உங்களை எவ்வாறு அழைப்பது பிரதமர் ஜி அல்லது பிரதம மந்திரி ஜி என்று தீவிரமாக விவாதித்து வருகிறது !பிரபல நடிகர் ராஜ் கபூரின் நூற்றாண்டு கொண்டாட்டத்தையொட்டி கபூர் குடும்பத்தினருடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடினார்
December 11th, 08:47 pm
புகழ்பெற்ற நடிகர் ராஜ் கபூரின் 100-வது பிறந்த தினத்தை கொண்டாடும் வேளையில், பிரதமர் திரு. நரேந்திர மோடியுடன் கபூர் குடும்பத்தினர் மனம் நிறைந்த கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இந்தச் சிறப்பு கூட்டம் இந்திய சினிமாவுக்கு ராஜ் கபூரின் இணையற்ற பங்களிப்பைக் கௌரவித்தது. கபூர் குடும்பத்தினருடன் பிரதமர் மனம் திறந்து உரையாடினார்.