Prime Minister Narendra Modi to inaugurate Samrat Samprati Museum and Kaynes Semicon Plant in Gujarat
March 30th, 11:05 am
PM Modi will visit Gujarat on 31st March 2026. He will inaugurate the Samrat Samprati Museum in Gandhinagar, showcasing the rich historical, cultural and spiritual legacy of Jainism. In a major step under the India Semiconductor Mission (ISM), the PM will inaugurate the Kaynes Semicon Plant at Sanand, Ahmedabad and will also visit Vav-Tharad to launch multiple development projects worth more than ₹20,000 crore.மார்ச் 14 அன்று மேற்கு வங்கத்திற்குச் செல்கிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி
March 12th, 05:30 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி 2026 மார்ச் 14 அன்று மேற்கு வங்கத்திற்குச் செல்கிறார். அன்று பிற்பகல் சுமார் 2 மணியளவில், கொல்கத்தாவில் சுமார் ₹18,680 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவார்."வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தொழில்நுட்பம், சீர்திருத்தங்கள் மற்றும் நிதி" குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
February 27th, 01:01 pm
இந்த ஆண்டின் முதல் பட்ஜெட் இணையவழிக் கருத்தரங்கிற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். கடந்த சில ஆண்டுகளில், பட்ஜெட் இணையவழிக் கருத்தரங்கு என்பது ஒரு வலுவான பாரம்பரியமாக மாறியுள்ளது. பெரும்பாலும், பட்ஜெட் என்பது வெவ்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது; சில நேரங்களில் பங்குச் சந்தையின் நகர்வுகள் குறித்தும், சில நேரங்களில் வருமான வரி முன்மொழிவுகள் குறித்தும் விவாதங்கள் மையமாக இருக்கின்றன. உண்மை என்னவென்றால், ஒரு நாட்டின் பட்ஜெட் என்பது குறுகிய கால வர்த்தக ஆவணம் அல்ல; அது ஒரு கொள்கைக்கான வழிகாட்டி. எனவே, பட்ஜெட்டின் செயல்திறனை வலுவான அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பிட வேண்டும். உள்கட்டமைப்பை விரிவுபடுத்துதல், கடன் வழங்கும் முறையை எளிதாக்குதல், தொழில் தொடங்குவதை எளிதாக்குதல் , நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல், பொதுமக்களின் வாழ்க்கையை எளிதாக்குதல் மற்றும் அவர்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற கொள்கைகளின் அடிப்படையில் அது அமைய வேண்டும். பட்ஜெட்டில் எடுக்கப்படும் இது போன்ற முடிவுகள் பொருளாதாரத்திற்கு நிரந்தர பலத்தை அளிக்கின்றன. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், எந்தவொரு பட்ஜெட்டையும் தனிமைப்படுத்தப்பட்டதாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட நிகழ்வாகவோ பார்க்கக்கூடாது.வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தொழில்நுட்ப சீர்திருத்தங்கள் மற்றும் நிதி குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
February 27th, 11:30 am
இந்தக் கருத்தரங்கில் உரையாற்றிய பிரதமர், உள்கட்டமைப்பு விரிவாக்கம், கடன் வழங்குவதை எளிதாக்குதல், எளிதாக வணிகம் செய்வதை மேம்படுத்துதல், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல் போன்ற உறுதியான அளவீடுகள் மூலமும், குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குதல், அவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலமும், பட்ஜெட்டின் பயன்பாடு மதிப்பிடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இந்த அம்சங்கள் தொடர்பான பட்ஜெட் முடிவுகள் பொருளாதாரத்திற்கு நிரந்தர வலிமையை அளிப்பதாக அவர் கூறினார்.Andhra Pradesh is the land of 'Swabhimaan' and 'Sanskriti', it is also a hub of science and innovation: PM Modi in Kurnool
October 16th, 03:00 pm
PM Modi launched multiple development projects worth around Rs 13,430 crore in Kurnool, Andhra Pradesh. These initiatives will strengthen connectivity, boost industrial growth, and improve the ease of living for citizens. The PM remarked that the state possesses visionary leadership along with full support from the Central Government. He informed that Google is set to establish India’s first AI Hub in the state.பிரதமர் திரு நரேந்திர மோடி ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலில் ரூ.13,430 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
October 16th, 02:30 pm
ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலில் இன்று சுமார் ரூ.13,430 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியதுடன் நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், அஹோபிலம் நரசிம்ம சுவாமிக்கும், மகாநந்தி ஸ்ரீ மகாநந்தீஸ்வர சுவாமிக்கும் மரியாதை செலுத்தினார். அனைவரின் நல்வாழ்விற்காக மந்திராலயத்தின் குரு ஸ்ரீ ராகவேந்திர சுவாமியிடமிருந்தும் அவர் ஆசிர்வாதம் பெற்றார்.ஆகஸ்ட் 25, 26 தேதிகளில் பிரதமர் குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறார்
August 24th, 01:08 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி 2025 ஆகஸ்ட் 25, 26 தேதிகளில் குஜராத்திற்குச் செல்கிறார். ஆகஸ்ட் 25-ம் தேதி மாலை சுமார் 6 மணியளவில் அகமதாபாத்தில் உள்ள கோடல்தாம் மைதானத்தில் ₹5,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றவுள்ளார்.தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
July 26th, 08:16 pm
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களான கிஞ்சரப்பு ராமமோகன் நாயுடு அவர்களே, டாக்டர் எல்.முருகன் அவர்களே, தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு அவர்களே, டாக்டர் டி.ஆர்.பி.ராஜா அவர்களே, பி.கீதா ஜீவன் அவர்களே, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களே, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் அவர்களே, தமிழ்நாட்டைச் சேர்ந்த சசோதர சகோதரிகளே!பிரதமர் திரு. நரேந்திர மோடி, தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் ₹4800 கோடிக்கும் அதிக மதிப்புள்ள மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டிற்கு அர்ப்பணித்தார்
July 26th, 07:47 pm
தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் இன்று சுமார் ₹4800 கோடி மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியதுடன், நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டிற்கு அர்ப்பணித்தார். பல்வேறு துறைகளில் அமைந்துள்ள தொடர்ச்சியான முக்கிய திட்டங்கள், பிராந்திய இணைப்பை கணிசமாக மேம்படுத்தும், தளவாடத் திறனை அதிகரிக்கும், தூய்மையான எரிசக்தி உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் மற்றும் தமிழ்நாடு முழுவதும் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும். கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, கார்கிலின் துணிச்சல்மிகு வீரர்களுக்கு திரு. மோடி மரியாதை செலுத்தினார். தீரம் நிறைந்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தியதுடன், தேசத்திற்காக தங்கள் இன்னுயிரை நீத்த தியாகிகளுக்கு மனமார்ந்த அஞ்சலி செலுத்தினார்.48வது பிரகதி கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்
June 25th, 09:11 pm
மத்திய மற்றும் மாநில அரசுகளின் முயற்சிகளை தடையின்றி ஒருங்கிணைப்பதன் மூலம், செயல்மிகு நிர்வாகம் மற்றும் சரியான நேரத்தில் செயல்படுத்தலை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட தகவல் தொழில்நுட்பம் சார்ந்த, பன்முக தளமான பிரகதியின் 48வது கூட்டம் சவுத் பிளாக்கில் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையில் இன்று நடைபெற்றது.46-வது பிரகதி கலந்துரையாடலுக்கு பிரதமர் தலைமை தாங்கினார்
April 30th, 08:41 pm
மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்புடன் முனைப்பான ஆளுமை மற்றும் உரிய நேரத்தில் அமலாக்கத்திற்கான தகவல் தொடர்பு தொழில்நுட்ப அடிப்படையிலான பன்முக தளமான பிரகதியின் 46-வது பதிப்பின் கூட்டம் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது.தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
April 06th, 02:00 pm
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி அவர்களே, எனது மத்திய அமைச்சரவை சகாக்கள் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, டாக்டர் எல் முருகன் அவர்களே, தமிழ்நாடு அரசின் அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, இதர பிரமுகர்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே!ராமேஸ்வரத்தில் ₹8,300 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியதுடன், நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார்
April 06th, 01:30 pm
தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் ₹ 8,300 கோடி மதிப்பிலான பல்வேறு ரயில் மற்றும் சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். முன்னதாக, இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலமான புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்த அவர், சாலை பாலத்திலிருந்து ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்து பாலத்தின் செயல்பாட்டைப் பார்வையிட்டார். முன்னதாக, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பிரதமர் சுவாமி தரிசனம் செய்து பூஜை வழிபாட்டை மேற்கொண்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு நரேந்திர மோடி, இன்று, ஸ்ரீ ராம நவமியின் புனித தருணமாக அமைந்துள்ளது என்று கூறினார். அயோத்தியில் உள்ள அற்புதமான ராமர் கோவிலில், இன்று, சூரியனின் தெய்வீக கதிர்கள் குழந்தை ராமரை ஒரு பெரிய திலகத்துடன் அலங்கரித்தன என்று அவர் கூறினார். பகவான் ஸ்ரீ ராமரின் வாழ்க்கையும், அவரது ஆட்சியிலிருந்து நல்லாட்சியின் உத்வேகமும் தேசத்தைக் கட்டமைப்பதற்கான குறிப்பிடத்தக்க அடித்தளமாக செயல்படுகின்றன என்று அவர் கூறினார். தமிழ்நாட்டின் சங்க கால இலக்கியங்களிலும் பகவான் ஸ்ரீ ராமர் பற்றி குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறிய அவர், புனித பூமியான ராமேஸ்வரத்திலிருந்து ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு அனைத்து மக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.Cabinet approves Pune Metro Phase-1 project extension towards south from Swargate to Katraj spanning 5.46 km
August 16th, 09:35 pm
Pune Metro Phase-1 Project Extension: The Cabinet, chaired by PM Modi, has given the green light for the extension of Pune Metro's Phase-1 from Swargate to Katraj. This extension spans 5.46 km and will further improve the metro connectivity in Pune, easing the commute for residents in the southern part of the city.BJP government is boosting tourism in Uttarakhand, creating new job opportunities: PM Modi at Rishikesh
April 11th, 12:45 pm
Ahead of the Lok Sabha Elections of 2024, Prime Minister Narendra Modi extended his heartfelt gratitude to all the people who gathered in the Rishikesh rally upon the PM’s arrival. The PM said, “You have come in such large numbers to bless us in Rishikesh, the gateway to Char Dham, situated in the proximity of Mother Ganga.” The PM discussed several key aspects related to Uttarakhand’s vision and the milestones achieved already.PM Modi addresses an enthusiastic crowd at a public meeting in Rishikesh, Uttarakhand
April 11th, 12:00 pm
Ahead of the Lok Sabha Elections of 2024, Prime Minister Narendra Modi extended his heartfelt gratitude to all the people who gathered in the Rishikesh rally upon the PM’s arrival. The PM said, “You have come in such large numbers to bless us in Rishikesh, the gateway to Char Dham, situated in the proximity of Mother Ganga.” The PM discussed several key aspects related to Uttarakhand’s vision and the milestones achieved already.சிலிகுரியில் நடைபெற்ற 'வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த மேற்கு வங்கம்' நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை
March 09th, 04:10 pm
மேற்கு வங்க ஆளுநர் திரு. சி.வி. ஆனந்த போஸ் அவர்களே, அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களே, நிசித் பிரமானிக் அவர்களே, ஜான் பர்லா அவர்களே, மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி அவர்களே, நாடாளுமன்றத்தில் உள்ள எனது சகாக்களே, சுகந்தா மஜும்தார், குமாரி தேபஸ்ரீ சவுத்ரி அவர்களே, காகன் முர்மு அவர்களே, ராஜு பிஸ்தா அவர்களே, டாக்டர் ஜெயந்தகுமார் ராய் அவர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, சிறப்பு விருந்தினர்களேமேற்கு வங்கத்தின் சிலிகுரியில் 'வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த மேற்கு வங்கம்' நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்
March 09th, 03:45 pm
மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் இன்று நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த மேற்கு வங்கம் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். மேற்கு வங்கத்தில் ரூ.4,500 கோடிக்கும் அதிக மதிப்பிலான ரயில் மற்றும் சாலைத் துறையின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.பீகார் மாநிலம் பெகுசாராயில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 02nd, 08:06 pm
ஜெய் மங்லா கர் மந்திர் மற்றும் நௌலாகா மந்திரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட தெய்வங்களுக்கு எனது மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று, 'வளர்ச்சியடைந்த இந்தியா வளர்ச்சியடைந்த பீகார்' வளர்ச்சிக்கு பங்களிக்கும் உறுதியுடன் நான் பெகுசராய்க்கு வந்துள்ளேன். இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தை சந்திப்பது எனக்கு கிடைத்த பாக்கியம்.பீகார் மாநிலம் பெகுசாராயில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டப் பணிகளுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்
March 02nd, 04:50 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி பீகாரின் பெகுசாராயில் ரூ. 13,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். நாடு முழுவதும் சுமார் ரூ. 1.48 லட்சம் கோடி மதிப்பிலான பல்வேறு எண்ணெய் மற்றும் எரிவாயுத் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.