His Majesty The Fourth King of Bhutan has played a pivotal role in strengthening India and Bhutan friendship: PM Modi in Thimphu
November 11th, 12:00 pm
In his address at the Changlimethang Celebration Ground in Thimphu, Bhutan, PM Modi reaffirmed that those behind the recent Delhi blast will not be spared. He lauded His Majesty The King for leading Bhutan to new heights, highlighting his pivotal role in strengthening India and Bhutan friendship. The PM also inaugurated a hydroelectric project and recalled India’s support package of ₹10,000 crore announced last year for Bhutan’s Five-Year Plan.பூடானின் 4-வது மன்னரது 70-வது பிறந்தநாள் விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
November 11th, 11:39 am
உலகம் ஒரு குடும்பம் என்பதை எடுத்துரைக்கும் வசுதைவ குடும்பகம் என்ற தொன்மை சிந்தனையில் இந்தியா ஊக்கம் பெற்றுள்ளது என்றும், அனைவரும் இன்புற்றிருக்க நினைக்கும் இந்தியாவின் மந்திரம் உலக மகிழ்ச்சியை வலியுறுத்துவதாக பிரதமர் கூறினார். சொர்க்கத்திலும், விண்வெளியிலும், பூமியிலும், நீர், தாவரங்கள் மற்றும் அனைத்து உயிரினங்களிலும் அமைதியை விரும்பும் வேத மந்திரங்கள் இவற்றை வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார். இந்த உணர்வுகளுடன் பூடானின் உலகளாவிய அமைதி வழிபாட்டுத் திருவிழாவில் இந்தியா பங்கேற்கிறது என்று அவர் குறிப்பிட்டார். உலகம் முழுவதிலும் இருந்து உலகளாவிய அமைதிக்காக வழிபாடு செய்ய துறவிகள் வந்துள்ள நிலையில், இந்த கூட்டான உணர்வின் பகுதியாக இந்தியாவின் 140 கோடி மக்களும் உள்ளனர் என்று பிரதமர் கூறினார்.RJD and Congress are pushing Bihar’s youth towards crime and ‘rangdari’: PM Modi in Bettiah, Bihar
November 08th, 11:30 am
Addressing a massive rally in Bettiah, PM Modi accused the RJD and Congress of pushing the state’s youth towards crime and ‘rangdari’. Speaking about the GST Bachat Utsav, the PM highlighted that today, essential items carry either zero or minimal GST, making everyday goods much more affordable. Urging the crowd to take out their phones and switch on the flashlight, he said, “This light in your hands shows the path to a Viksit Bihar.”Bihar doesn't need ‘Katta Sarkar’: PM Modi in Sitamarhi
November 08th, 11:15 am
PM Modi addressed a large and enthusiastic gathering in Sitamarhi, Bihar, seeking blessings at the sacred land of Mata Sita and underlining the deep connection between faith and nation building. Recalling the events of November 8 2019, when he had prayed for a favourable Ayodhya judgment before inauguration duties the next day, he said today he had come to Sitamarhi to seek the people’s blessings for a Viksit Bihar. He reminded voters that this election will decide the future of Bihar’s youth and urged them to vote for progress.Unstoppable wave of support as PM Modi addresses rallies in Sitamarhi and Bettiah, Bihar
November 08th, 11:00 am
PM Modi today addressed large and enthusiastic gatherings in Sitamarhi and Bettiah, Bihar, seeking blessings in the sacred land of Mata Sita and highlighting the deep connection between faith and nation-building. Recalling the events of November 8, 2019, when he had prayed for a favourable Ayodhya verdict before heading for an inauguration the following day, he said he had now come to Sitamarhi to seek the people’s blessings for a Viksit Bihar.வாரணாசியிலிருந்து நான்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
November 08th, 08:39 am
உத்தரப்பிரதேசத்தின் துடிப்பான முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சக ஊழியர் மற்றும் வளர்ச்சியடைந்த பாரதத்தின் வலுவான அடித்தளத்தை அமைத்து வரும் குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு தலைமை தாங்குபவரான அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, எர்ணாகுளத்திலிருந்து தொழில்நுட்பம் மூலம் எங்களுடன் இணையும் கேரள ஆளுநர் திரு ராஜேந்திர அர்லேகர் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்கள் சுரேஷ் கோபி மற்றும் ஜார்ஜ் குரியன் அவர்களே, கேரளாவில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளே,பிரதமர் திரு நரேந்திர மோடி, வாரணாசியில், நான்கு புதிய வந்தே பாரத் விரைவு ரயில் சேவைகளை இன்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்
November 08th, 08:15 am
இந்தியாவின் நவீன ரயில் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து நான்கு புதிய வந்தே பாரத் விரைவு ரயில் சேவைகளைக் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு மோடி, இதில் பங்கேற்பதற்காக வந்துள்ள அனைத்து பிரமுகர்களையும் வரவேற்று, பாபா விஸ்வநாதரின் புனித நகரமான வாரணாசியின் அனைத்து குடும்பங்களுக்கும் தனது மரியாதைக்குரிய வாழ்த்துகளைத் தெரிவித்தார். தேவ் தீபாவளிப் பண்டிகையின் போது காணப்பட்ட அசாதாரண கொண்டாட்டங்கள் குறித்து குறிப்பிட்ட அவர், மேலும் இன்று ஒரு நல்ல தருணம் அமைத்திருக்கிறது என்றும், இந்த வளர்ச்சிக்கானத் திருவிழாவையொட்டி அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.அசாம் மாநிலம் தாரங்கில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை
September 14th, 11:30 am
பாரத் மாதா கி ஜே, பாரத் மாதா கி ஜே, பாரத் மாதா கி ஜே! அசாமின் பிரபல முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா அவர்களே, எனது அமைச்சரவை சகாவான திரு சர்பானந்த சோனாவால் அவர்களே, அசாம் மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களே, இதர அரசு பிரதிநிதிகளே, தொடர்ந்து பெய்து வரும் மழைக்கு இடையே எங்களை ஆசிர்வதிக்க பெருமளவில் குழுமியுள்ள எனது சகோதரர்களே, சகோதரிகளே, வணக்கம்,அசாமின் தர்ராங்கில் சுமார் ரூ.6,500 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
September 14th, 11:00 am
இந்தியா தற்போது உலகின் வேகமாக வளர்ந்து வரும் நாடாகும். அதேபோல, அஸ்ஸாம் நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். அஸ்ஸாம் ஒரு காலத்தில் வளர்ச்சியில் பின்தங்கியதாகவும், நாட்டின் பிற பகுதிகளுடன் வேகத்தை பராமரிக்க போராடியதாகவும் அவர் நினைவு கூர்ந்தார். இருப்பினும், இன்று, அஸ்ஸாம் கிட்டத்தட்ட 13 சதவீத வளர்ச்சி விகிதத்துடன் முன்னேறி வருகிறது. இதை ஒரு பெரிய சாதனையாகக் குறிப்பிட்ட திரு மோடி, அஸ்ஸாம் மக்களின் கடின உழைப்பும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சியும் இந்த வெற்றிக்குக் காரணம் என்று கூறினார். அஸ்ஸாம் மக்கள் இந்தக் கூட்டாண்மையை தொடர்ந்து வலுப்படுத்தி வருவதற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.ஜப்பான் பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் வெளியிட்ட கருத்துக்களின் தமிழாக்கம்
August 29th, 03:59 pm
இன்றைய எங்கள் கலந்துரையாடல், ஆக்கப்பூர்வமானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருந்தது. இரண்டு பெரிய பொருளாதாரங்கள் மற்றும் துடிப்பான ஜனநாயக நாடுகள் என்ற வகையில், எங்கள் கூட்டாண்மை, இரு நாடுகளுக்கும் மட்டுமல்ல, உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கும் மிகவும் முக்கியமானது என்பதை நாங்கள் இருவரும் ஒப்புக்கொள்கிறோம்.மேற்குவங்க மாநிலம் துர்காபூரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க நிகழ்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
July 18th, 02:35 pm
மேற்கு வங்க ஆளுநர் டாக்டர் சி வி ஆனந்த போஸ் அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சகாக்களான ஹர்தீப் சிங் பூரி, சந்தானு தாக்கூர், சுகந்த மஜூம்தார் அவர்களே, மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர் சுவேந்து அதிகாரி அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களான சௌமிக் பட்டாச்சார்யா, ஜோதிர்மய் சிங் மகத்தோ அவர்களே, ஏனைய மக்கள் பிரதிநிதிகளே, எனதருமை சகோதர சகோதரிகளே, வணக்கம்!மேற்கு வங்கத்தின் துர்காபூரில் சுமார் ₹5,400 கோடி மதிப்புள்ள மேம்பாட்டுப் பணிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்தவற்றைத் தொடங்கி வைத்தார்.
July 18th, 02:32 pm
மேற்கு வங்கத்தின் துர்காபூரில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி சுமார் 5,400 கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், எஃகு நகரம் என்று அழைக்கப்படும் துர்காபூர், இந்தியாவின் தொழிலாளர் சக்தியின் முக்கிய மையமாகவும் உள்ளது என்று குறிப்பிட்டார். இந்தியாவின் வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அவர் பாராட்டினார், மேலும் இன்று அந்தப் பங்கை மேலும் வலுப்படுத்த ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று கூறினார். இன்று தொடங்கப்பட்ட திட்டங்கள் பிராந்தியத்தில் இணைப்பை மேம்படுத்தும், எரிவாயு அடிப்படையிலான போக்குவரத்து மற்றும் எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை அதிகரிக்கும் மற்றும் எஃகு நகரமாக துர்காபூரின் அடையாளத்தை வலுப்படுத்தும் என்று திரு. மோடி குறிப்பிட்டார். இந்தத் திட்டங்கள் இந்தியாவில் தயாரித்தல், உலகத்திற்காக தயாரித்தல் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போகின்றன என்றும், மேற்கு வங்கத்தை முன்னேற்ற உதவும் என்றும் பிரதமர் கூறினார். பிராந்திய இளைஞர்களுக்கு ஏராளமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அவர் உறுதிப்படுத்தினார். இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக அனைவருக்கும் அவர் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.பீகார் மாநிலம் மோதிஹரியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
July 18th, 11:50 am
இந்த புனிதமான சாவான் மாதத்தில், பீகார் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன் ஆசீர்வதிக்கப்படுவதற்காக நான் பாபா சோமேஷ்வர்நாத்தின் பாதங்களை வணங்கி, அவரது ஆசிகளை வேண்டுகிறேன்.பிரதமர் திரு நரேந்திர மோடி பீகாரி்ன் மோத்திஹரியில் 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தும், முடிவுற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தும் வைத்தார்
July 18th, 11:30 am
பிரதமர் திரு நரேந்திர மோடி பீகாரின் மோத்திஹரியில் இன்று (18.07.2025) 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், முடிவுற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.பிரதமர் திரு நரேந்திர மோடி பீகார், மேற்கு வங்க மாநிலங்களுக்கு நாளை (ஜூலை 18-ம் தேதி) பயணம்
July 17th, 11:04 am
பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (ஜூலை 18 - ம் தேதி) பீகார், மேற்கு வங்க மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். காலை 11:30 மணியளவில், பீகாரில் உள்ள மோதிஹரியில் ரூ.7,200 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்றத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார், பின்னர் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் உரையாற்றுகிறார்.பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் 17வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது பிரதமர், உருகுவே அதிபரை சந்தித்தார்.
July 07th, 09:20 pm
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, உருகுவே குடியரசின் அதிபர் மாண்புமிகு திரு யமண்டு ஓர்சியை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.அர்ஜெண்டினா அதிபர் ஜேவியர் மிலேயை பிரதமர் சந்தித்தார்
July 06th, 01:48 am
பிரதமர் திரு நரேந்திர மோடி அர்ஜெண்டினா அதிபர் திரு ஜேவியர் மிலேயை சந்தித்தார். காசா ரோசாடாவுக்கு அவர் வந்தடைந்தபோது, அதிபர் மிலே அவரை அன்புடன் வரவேற்றார். முன்னதாக பியூனஸ் அயர்ஸ் வந்தடைந்த பிரதமருக்கு, பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. 57 ஆண்டுகளுக்குப் பிறகு அர்ஜெண்டினாவிற்கு இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும் என்பதால் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. இரு நாடுகளும் தூதரக உறவுகள் நிறுவப்பட்ட 75 ஆண்டுகளைக் கொண்டாடும் இந்த ஆண்டு இந்தியா-அர்ஜெண்டினா உறவுகளுக்கு இது ஒரு முக்கிய ஆண்டாகும். தமக்கும் தமது தூதுக்குழுவிற்கும் வழங்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.கானா குடியரசின் நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆற்றிய உரை
July 03rd, 03:45 pm
ஜனநாயகம், கண்ணியம் மற்றும் மீள்தன்மை ஆகியவற்றின் உணர்வை வெளிப்படுத்தும் ஒரு நிலமான கானாவில் இருப்பது ஒரு பாக்கியம். உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் பிரதிநிதியாக, 1.4 பில்லியன் இந்தியர்களின் நல்லெண்ணத்தையும் வாழ்த்துகளையும் நான் என்னுடன் கொண்டு வருகிறேன்.பிரதமர் திரு நரேந்திர மோடி கானா நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்
July 03rd, 03:40 pm
கானா நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03.07.2025) உரையாற்றினார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமராக திரு நரேந்திர மோடி உள்ளார். நாடாளுமன்றத் தலைவர் திரு அல்பன் கிங்ஸ்ஃபோர்ட் சுமனா பாக்பின் கூட்டிய இந்த அமர்வில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், இரு நாடுகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இந்த உரை இந்தியா-கானா உறவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிப்பதாக அமைந்தது. இரு நாடுகளையும் ஒன்றிணைக்கும் பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்களை இது பிரதிபலித்தது.கானா அதிபருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் வெளியிட்ட கருத்துக்களின் தமிழாக்கம்
July 03rd, 12:32 am
30 ஆண்டுகால நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஒரு இந்தியப் பிரதமர் கானாவுக்கு வருகை தந்துள்ளார்.