Governor of West Bengal meets the Prime Minister
April 02nd, 01:16 pm
Governor of West Bengal, Shri R. N. Ravi met with the Prime Minister Shri Narendra Modi, today, at New Delhi.மதுரையில் பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 01st, 03:30 pm
புனிதமான, வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை நகரத்தில் இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரரை வணங்குகிறேன். இன்றைய நிகழ்வு தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு பெருமைமிக்க அத்தியாயத்தைக் குறிக்கிறது. நான்காயிரத்து நானூறு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பல திட்டங்களை தேசத்திற்கு அர்ப்பணித்துள்ளோம். இந்தத் திட்டங்கள் போக்குவரத்து இணைப்பை சிறப்பாக மாற்றும். பொருளாதாரத்தை மேம்படுத்தும். வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அத்துடன் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றி அமைக்கும். விவசாயிகள் சந்தைகளை அடைய சிறந்த சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு எளிதான பயண அனுபவம் ஏற்படும். வணிகங்களுக்கு விரைவான போக்குவரத்து கிடைக்கும். உயர்தர உள்கட்டமைப்பை உருவாக்குவது என்பது மக்களை மேம்படுத்துவதாகும்.மதுரையில் ₹4,400 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள உள்கட்டமைப்பு திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்
March 01st, 03:00 pm
தமிழ்நாட்டின் மதுரையில் இன்று ₹4,400 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். புனித நகரமான மதுரையில் மக்களிடையே உரையாற்றிய பிரதமர், இது தமிழகத்தின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு பெருமைமிக்க அத்தியாயம் என்று கூறினார். இந்தத் திட்டங்கள் போக்குவரத்து இணைப்பை மாற்றி அமைத்து, பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு, இளைஞர்களுக்கு குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புகளை உருவாக்கி, லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று அவர் கூறினார். மாநிலத்தில் உயர்தர உள்கட்டமைப்பை உருவாக்குவது மக்களை மேம்படுத்துவதாகும் என்று பிரதமர் தெரிவித்தார். இந்த மேம்பாடுகள் விவசாயிகள், சந்தைகளை அடைய சிறந்த சாலைகள், யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு எளிதான பயணம், வணிகங்களுக்கு விரைவான போக்குவரத்து ஆகியவற்றை வழங்கும் என்று திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார்.பிரதமருடன் தமிழ்நாடு ஆளுநர் சந்திப்பு
December 24th, 12:38 pm
தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என். ரவி இன்று புதுதில்லியில், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.தமிழ்நாடு ஆளுநர், பிரதமரை சந்தித்தார்
July 16th, 12:48 pm
தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர் என் ரவி, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.