தாய்லாந்து ராஜமாதா ராணி சிரிகிட் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

October 26th, 03:39 pm

தாய்லாந்து ராஜமாதா ராணி சிரிகிட் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இரங்கல் செய்தியில், பொது சேவைக்கு அரசி தனது வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் பங்காற்றியமைக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார். அவரது மரபு உலகம் முழுவதும் உள்ள தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.