வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மாநாடு 2025 பிரதமர் நவம்பர் 3 ஆம் தேதி துவக்கி வைக்கிறார்

November 02nd, 09:29 am

நாட்டின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சூழலுக்கு மிகப் பெரிய உந்துதல் அளிக்கும் விதமாக, பிரதமர் அவர்கள் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு திட்ட நிதியையும் தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டமானது, நாட்டில் தனியார் துறையை மையமாகக் கொண்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் சூழலை வலுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

இந்திய மொபைல் மாநாட்டின் 9-வது பதிப்பை பிரதமர் அக்டோபர் 8 அன்று தொடங்கி வைக்கிறார்

October 07th, 10:27 am

ஆசியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு, ஊடகம் மற்றும் தொழில்நுட்ப நிகழ்வான இந்திய மொபைல் மாநாட்டின் 9-வது பதிப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி யஷோபூமியில் 2025 அக்டோபர் 8 அன்று காலை மணி 9.45-க்கு தொடங்கிவைக்கிறார். தொலைத்தொடர்புத் துறை, இந்திய செல்லுலார் சேவையாளர்கள் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு அக்டோபர் 8 முதல் 11 வரை நடைபெறவுள்ளது. மாற்றத்திற்கான புதுமைக் கண்டுபிடிப்புகள் என்ற தலைப்பில், டிஜிட்டல் மாற்றத்திற்கான புதுமைக் கண்டுபிடிப்புகளில் இந்தியாவின் உறுதிப்பாடு குறித்து எடுத்துரைக்கப்பட உள்ளது.

இந்தியா-சிங்கப்பூர் கூட்டறிக்கை

September 04th, 08:04 pm

அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்திருந்த சிங்கப்பூர் பிரதமர் மாண்புமிகு திரு லாரன்ஸ் வோங்-ன் பயணத்தின் போது, இந்தியா மற்றும் சிங்கப்பூரிடையே விரிவான உத்திசார் கூட்டண்மைக்கான செயல்திட்டம் குறித்த கூட்டறிக்கை

சிங்கப்பூர் பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் கூறிய கருத்துக்களின் தமிழாக்கம்

September 04th, 12:45 pm

சிங்கப்பூர் பிரதமராக பதவியேற்ற பிறகு இந்தியாவிற்கு தமது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள அந்நாட்டு பிரதமர் வோங்கை வரவேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்த ஆண்டு நமது தூதரக உறவுகள் ஏற்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இந்த பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இந்தியா – ஜப்பான் பொருளாதார மன்றத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

August 29th, 11:20 am

உங்களில் பலரை நான் நன்றாக அறிவேன், குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த போதும், பிறகு தில்லியில் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகும், உங்களில் பலருடன் நான் நெருங்கிய நட்பு கொண்டுள்ளேன். இன்று உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தியா-ஜப்பான் பொருளாதார மன்றக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பு

August 29th, 11:02 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் திரு. ஷிகெரு இஷிபா ஆகியோர் ஆகஸ்ட் 29, 2025 அன்று டோக்கியோவில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் கெய்டன்ரென் [ஜப்பான் வணிக கூட்டமைப்பு] ஏற்பாடு செய்த இந்தியா-ஜப்பான் பொருளாதார மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தியா-ஜப்பான் வணிகத் தலைவர்கள் மன்றத்தின் தலைமை நிர்வாக அதிகாரிகள் உட்பட இந்தியா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த முன்னணி தொழில்துறை பிரமுகர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Science for Self-Reliance is our mantra: PM Modi

September 26th, 05:15 pm

PM Modi dedicated to the nation three PARAM Rudra Supercomputers worth around Rs 130 crore. Developed indigenously under the National Supercomputing Mission, these supercomputers have been deployed in Pune, Delhi and Kolkata to facilitate pioneering scientific research. The PM also inaugurated a High-Performance Computing system tailored for weather and climate research.

மூன்று பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்களை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார்

September 26th, 05:00 pm

சுமார் ரூ.130 கோடி மதிப்பிலான மூன்று பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார். தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் இயக்கத்தின் (NSM) கீழ் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த சூப்பர் கம்ப்யூட்டர்கள், முன்னோடி அறிவியல் ஆராய்ச்சிக்கு உதவுவதற்காக புனே, டெல்லி மற்றும் கொல்கத்தாவில் நிறுவப்பட்டுள்ளன. வானிலை மற்றும் பருவநிலை ஆராய்ச்சிக்காக வடிவமைக்கப்பட்ட உயர் செயல்திறன் கொண்ட கம்ப்யூட்டிங் (HPC) அமைப்பையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.