பூட்டான் புறப்படுவதற்கு முன் பிரதமர் வெளியிட்ட அறிக்கை
November 11th, 07:28 am
பூட்டான் 4-ம் மன்னரின் 70-வது பிறந்த தினம் கொண்டாடப்படும் வேளையில் பூட்டான் மக்களுடன் இணைவது எனக்கு கிடைத்த கௌரவமாகும். பூட்டானின் உலகளாவிய அமைதி பிரார்த்தனை திருவிழாவில் இந்தியாவிலிருந்து புத்தரின் புனித பிப்ரவா நினைவுச் சின்னங்கள் இடம்பெறுவது நமது இருநாடுகளின் நாகரீகம் மற்றும் ஆன்மிக தொடர்புகளை பிரதிபலிக்கிறது. இப்பயணத்தின்போது புனட்சங்க்சு-II நீர்மின் திட்டம் தொடங்கப்படுவது நமது வெற்றிகரமான எரிசக்தி கூட்டமைப்பில் மற்றொரு மைல்கல்லாகும்.