புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் அக்டோபர் 11 அன்று சிறப்பு வேளாண் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்
October 10th, 06:10 pm
புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் அக்டோபர் 11 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ள சிறப்பு வேளாண் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்பார். இந்நிகழ்ச்சியில் விவசாயிகளுடன் கலந்துரையாடும் பிரதமர் பின்னர் பொதுநிகழ்ச்சியில் பங்கேற்று அங்கு திரண்டிருப்போரிடையே உரையாற்றுவார்.பருப்பு உற்பத்தியில் தற்சார்பு நிலையை அடைவதற்கான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: ஆறு ஆண்டுகளில் பருப்பு உற்பத்தி 350 லட்சம் டன்னை எட்டும்
October 01st, 03:14 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், தன்னிறைவு நிலையை அடைவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய முயற்சியான பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. 2025-26 முதல் 2030-31 வரை ஆறு ஆண்டு காலத்திற்கு, 11,440 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.