கனடா பிரதமர் வருகையையடுத்து, இருநாடுகளுக்கும் இடையேயான புதுப்பிக்கப்பட்ட கூட்டாண்மைக்கு வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டிருப்பதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார்

March 03rd, 10:16 pm

கனடா பிரதமர் திரு மார்க் கார்னியின் இந்திய வருகையையடுத்து, இருநாடுகளுக்கும் இடையேயான புதுப்பிக்கப்பட்ட கூட்டாண்மைக்கு வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டிருப்பதாகப் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

India’s democracy and demography are a beacon of hope for the world: PM Modi’s statement to the media ahead of the Budget Session of Parliament

January 29th, 10:15 am

In his remarks ahead of the Budget Session of Parliament, PM Modi emphasized that the India–EU FTA is free trade for an ambitious India, for aspirational youth, and for an Atmanirbhar Bharat, bringing immense opportunities for India’s fishermen, farmers, youth and those in the services sector. He called upon all Members of Parliament to join in accelerating the era of solutions, empowering decisions and advancing last-mile delivery successfully.

2026 பட்ஜெட் அமர்வின் தொடக்கத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ள கருத்துக்கள்

January 29th, 10:00 am

2026 பட்ஜெட் அமர்வு தொடங்குவதற்கு முன்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஊடகவியலாளர்கள் இடையே இன்று உரையாற்றினார். அதில், குடியரசுத் தலைவரின் உரை 140 கோடி மக்களின் நம்பிக்கையின் வெளிப்பாடாகவும், அவர்களுடைய கடின உழைப்பின் காரணமாகவும் அமைந்தது என்றும், இளைஞர்களின் விருப்பங்களை துல்லியமாக பிரதிபலிப்பதாக அவர் கூறினார். 2026-ம் ஆண்டின் தொடக்க அமர்விலேயே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை குடியரசுத்தலைவர் வழங்கினார் என்று அவர் சுட்டிக்காட்டினார். குடியரசுத்தலைவர் எளிய வார்த்தைகளில் வெளிப்படுத்தியுள்ள எதிர்பார்ப்புகளை குறிப்பிட்ட திரு. மோடி, இதை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிச்சயமாக கவனத்துடன் எடுத்துக்கொண்டு இந்த அமர்வை மிக முக்கியமான ஒன்றாக இடம்பெறச் செய்ய வேண்டுமென்று தெரிவித்தார். இந்த பட்ஜெட் அமர்வு 21-ம் நூற்றாண்டின் முதல் கால் பகுதி நிறைவையும், இரண்டாவது கால் பகுதி தொடக்கத்தையும் குறிப்பதாக அவர் கூறினார். 2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்கு அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியம் என்று சுட்டிக்காட்டிய அவர், இந்த பட்ஜெட் நூற்றாண்டின் இரண்டாவது கால் பகுதியின் முதல் பட்ஜெட் என்று குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக நாட்டின் முதலாவது பெண் நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்வது இந்திய நாடாளுமன்ற வரலாற்றின் பெருமைமிகு தருணத்தை பதிவு செய்வதாக பிரதமர் கூறினார்.

முன்னாள் பிரதமர் சௌத்ரி சரண் சிங் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

December 23rd, 09:39 am

முன்னாள் பிரதமர் பாரத ரத்னா சௌத்ரி சரண் சிங்கின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். விளிம்பு நிலையில் உள்ள மக்களின் நலனுக்காகவும், விவசாயிகளின் வளம் மற்றும் வேளாண் துறை வளர்ச்சிக்காகவும் அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் பிரதமருடன், பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாகப் பேச்சு

December 10th, 07:56 pm

இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகு உடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொலைபேசி வாயிலாக உரையாடினார்.

Prime Minister Congratulates Australian Prime Minister H.E. Mr. Anthony Albanese and Ms. Jodie Haydon on their Wedding

November 29th, 09:05 pm

Prime Minister Shri Narendra Modi today extended his heartfelt congratulations to his good friend, Prime Minister of Australia, H.E. Mr. Anthony Albanese and Ms. Jodie Haydon on the occasion of their wedding.

Prime Minister meets the Prime Minister of Japan on the sidelines of the G20 Leaders’ Summit in Johannesburg

November 23rd, 09:46 pm

PM Modi held a bilateral meeting with the PM of Japan, Sanae Takaichi on the sidelines of the G20 Leaders’ Summit in Johannesburg, South Africa. The leaders underscored their commitment to deepening the India-Japan partnership for regional and global peace, prosperity and stability. PM Takaichi expressed strong support for the AI Summit to be hosted by India in February 2026.

ஜி-20 உச்சி மாநாட்டின் இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி, இத்தாலி பிரதமரைச் சந்தித்துப் பேசினார்

November 23rd, 09:44 pm

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டிற்கு இடையே, பிரதமர் திரு நரேந்திர மோடி, இத்தாலி பிரதமர் திருமிகு ஜார்ஜியோ மெலோனி-ஐ சந்தித்துப் பேசினார். இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் கனடாவில் உள்ள கானனாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டின் போது இரு தலைவர்களும் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Prime Minister meets Prime Minister of Canada on the sidelines of G20 Summit in Johannesburg

November 23rd, 09:41 pm

PM Modi met Canada PM Mark Carney on the sidelines of the G20 Leaders’ Summit in Johannesburg. The two leaders welcomed the adoption of Australia-Canada-India Technology and Innovation (ACITI) Partnership and appreciated the renewed momentum in ties since their June 2025 meeting in Kananaskis. PM Modi extended an invitation to Canada PM to visit India.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

November 19th, 07:53 am

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியா-ஜப்பான் இடையேயான உறவு குறித்து ஜப்பான் பிரதமருடன் விவாதித்தார்

October 29th, 01:14 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி ஜப்பான் பிரதமர் சனே தக்காய்சியுடன் உரையாடினார். பிரதமராக பொறுப்பேற்றுள்ள தக்காய்சிக்கு அவரது பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய திரு மோடி வாழ்த்து தெரிவித்தார்.

ஜப்பான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமிகு சானே தக்காய்ச்சிக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

October 21st, 11:24 am

ஜப்பான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமிகு சானே தக்காய்ச்சிக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். தமது எக்ஸ் தள செய்தியில், இந்தியா-ஜப்பான் இடையே சிறப்பு உத்திசார்ந்த மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான தமது உறுதிப்பாட்டைப் பிரதமர் மோடி வெளிப்படுத்தினார்.

The entire world today sees India as a reliable, responsible and resilient partner: PM Modi at NDTV World Summit 2025

October 17th, 11:09 pm

In his address at the NDTV World Summit 2025, PM Modi remarked that over the past eleven years, India has shattered every doubt and overcome every challenge. He highlighted that India has transitioned from being part of the “Fragile Five” to becoming one of the top five global economies. The PM noted that while over 125 districts were affected by Maoist violence 11 years ago, today it's reduced to just 11 districts.

புதுதில்லியில் நடைபெற்ற என்டிடிவி உலக மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

October 17th, 08:00 pm

புதுதில்லியில் நடைபெற்ற என்டிடிவி உலக மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (17.10.2025) உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியாது என்றும், 140 கோடி மக்களின் வலுவான ஆதரவுடன் நாடு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். உலக நாடுகள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்தியா முன்னேற்றப் பாதையில் விரைவாக சென்றுகொண்டிருக்கும் நாடாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். உலகின் 5 பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

கென்யாவின் முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்காவின் மறைவிற்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கல்

October 15th, 02:41 pm

கென்யாவின் முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்காவின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். “கென்யாவின் முன்னாள் பிரதமரும் எனது நெருங்கிய நண்பருமான ரெய்லா ஒடிங்காவின் மறைவு மிகுந்த மனவேதனை அளிப்பதாக உள்ளது. இந்தியா – கென்யா இடையேயான நட்புறவுக்கு காரணமாக அவர் திகழ்ந்தார். குஜராத் முதலமைச்சராக பொறுப்பு வகித்த நாட்களில் அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்புக் கிடைத்தது. எங்களது இந்த நட்பு பல ஆண்டுகளுக்கு தொடர்ந்தது” என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். இந்தியா மீது சிறப்பான அன்பை அவர் கொண்டிருந்தார் என்றும் நமது நாட்டின் கலாச்சார மாண்புகள், தொன்மையான ஞானம் ஆகியவற்றின் மீது ஈர்ப்புக் கொண்டவர் என்றும் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கான அவர் மேற்கொண்ட முயற்சிகளில் இது பிரதிபலித்தது என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் திரு டிரம்பின் காசா அமைதி திட்டத்தின் கீழ் இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகு மேற்கொண்டு வரும் செயல்பாடுகளுக்கு பிரதமர் வாழ்த்து

October 09th, 10:17 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது அமெரிக்க அதிபர் திரு டிரம்பின் காசா அமைதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மரியாதை செலுத்தினார்

September 26th, 08:51 am

இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் பிறந்த நாளையொட்டி அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

நேபாளத்தில் இடைக்கால அரசின் பிரதமராகப் பதவியேற்றுள்ள திருமதி சுசிலா கார்க்கிக்கு பிரதமர் வாழ்த்து

September 13th, 08:57 am

நேபாள நாட்டின் இடைக்கால அரசின் பிரதமராகப் பதவியேற்றுள்ள திருமதி சுசிலா கார்க்கிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். நேபாள மக்களின் அமைதி, வளம் மற்றும் முன்னேற்றத்துக்கு இந்தியா அர்ப்பணிப்புடன் உள்ளது என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

நார்வே பிரதமராக ஜோனாஸ் கஹர் ஸ்டோர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு பிரதமர் வாழ்த்து

September 10th, 06:22 pm

நார்வே பிரதமர் திரு ஜோனாஸ் கஹர் ஸ்டோர் மீண்டும் அந்நாட்டு பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தமது வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டார். பல்வேறு துறைகளில் நார்வேயுடனான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை திரு மோடி வலியுறுத்தியுள்ளார்.

PM Modi arrives in London, United Kingdom

July 24th, 12:15 pm

Prime Minister Narendra Modi arrived in United Kingdom a short while ago. In United Kingdom, PM Modi will hold discussions with UK PM Starmer on India-UK bilateral relations and will also review the progress of the Comprehensive Strategic Partnership.