யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான பிரம்பனன் கோவில் வளாகத்தை பிரதமர் பார்வையிட்டார்
July 08th, 01:46 pm
யோக்யகர்த்தாவில் உள்ள தனித்துவமிக்க யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான பிரம்பனன் கோவில் வளாகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். இந்தோனேஷியா அதிபர் திரு பிரபோவோ சுபியாண்டோவும் பிரதமருடன் சென்றிருந்தார். கோவில் வளாகத்தில் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் பாதுகாப்பு மற்றும் சீரமைப்புத் திட்டத்தை தொடங்கி வைக்கும் வகையில், நினைவுப் பலகையை இருதலைவர்களும் திறந்து வைத்தனர்.India-Indonesia Joint Statement on the State Visit by Prime Minister of India to Indonesia
July 07th, 05:15 pm
At the invitation of Indonesian President Prabowo Subianto, PM Modi is on a State Visit to Indonesia from 6-8 July 2026. PM Modi's visit reflects the shared commitment of the two leaders to achieve a substantial upward trajectory in the India-Indonesia Comprehensive Strategic Partnership. The two leaders held discussions at Istana Merdeka in Jakarta, covering the full spectrum of bilateral relations.Our shared democratic values and common aspirations will take India-Indonesia relations to new heights: PM Modi at Indonesia Parliament
July 07th, 03:15 pm
Addressing the Parliament of Indonesia in Jakarta, PM Modi spoke about the deep civilisational and democratic ties between India and Indonesia. He also highlighted their maritime partnership, proposed the Ganga-Mahakam Vision and called for closer cooperation across development, security and the Global South, while reaffirming a free, open, inclusive and rules-based Indo-Pacific.இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் பிரதமர் உரையாற்றினார்
July 07th, 03:00 pm
ஜகார்த்தாவில் உள்ள இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் இந்திய பிரதமர் உரையாற்றுவது இதுவே முதல் முறையாகும். இந்தோனேஷிய அதிபர் திரு பிரபோவோ சுபியாந்தோவின் கனிவான பங்கேற்புக்கும், நாடாளுமன்ற அவைத்தலைவர் திருமதி புவான் மகாராணியின் அன்பான அழைப்புக்கும் இந்தியா-இந்தோனேஷியா கூட்டாண்மைக்கு அவர் ஆற்றிய அர்த்தமுள்ள பங்களிப்புக்கும் நன்றி தெரிவித்துப் பிரதமர் தமது உரையை தொடங்கினார். இந்தியாவின் 140 கோடி மக்கள் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், ஜனநாயகத்தின் தாயான இந்தியா, இந்தோனேஷியாவுடன் ஜனநாயக உறவுகளை வலுப்படுத்த ஆர்வமாக உள்ளது என்றார். இரு நாடுகளுக்கும் இடையேயான ஆழமான நாகரிகம் மற்றும் கடல்சார் உறவுகளை எடுத்துரைத்த பிரதமர், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியப் பெருங்கடல் இந்தியாவையும் இந்தோனேஷியாவையும் சிந்தனைகள், வர்த்தகம், கலாச்சாரம், நம்பிக்கை ஆகியவற்றின் பரிமாற்றம் மூலம் இணைத்து வந்துள்ளது என்பதை நினைவு கூர்ந்தார். 'வசுதைவ குடும்பகம்' (உலகம் ஒரு குடும்பம்) மற்றும் 'பின்னேக துங்கல் இகா' (வேற்றுமையில் ஒற்றுமை) ஆகிய பகிரப்பட்ட கொள்கைகளைக் குறிப்பிட்ட அவர், இந்த விழுமியங்கள் இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவுக்கு தொடர்ந்து வழிகாட்டி வருவதாகக் குறிப்பிட்டார். இரு நாடுகளின் பகிரப்பட்ட வரலாற்றுப் பாதைகள், பகிரப்பட்ட சவால்கள், பகிரப்பட்ட மக்களின் விருப்பங்கள் ஆகியவை இந்தியாவையும் இந்தோனேஷியாவையும் இயற்கையான, நம்பகமான கூட்டாளிகளாக ஒன்றிணைக்கின்றன என்றும் அவர் கூறினார்.இந்தோனேஷிய அதிபருடன் பிரதமர் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தினார்
July 07th, 02:51 pm
அரசுமுறைப் பயணமாக இந்தோனேஷியா சென்றுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அதிபர் திரு பிரபோவோ சுபியாண்டோ, அதிபர் மாளிகையில் இன்று பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தார். இந்தியாவின் 76-வது குடியரசு தினக் கொண்டாட்டங்களின் தலைமை விருந்தினராக, அதிபர் பிரபோவோ 2025 ஜனவரியில் மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்திற்குப் பின், இரு தலைவர்களுக்கும் இடையேயான முதல் சந்திப்பு இதுவாகும்.ஜகார்த்தா வந்தடைந்தார் பிரதமர் மோடி
July 06th, 05:03 pm
பிரதமர் மோடி இந்தோனேசியாவின் ஜகார்த்தா சென்றடைந்தார். விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ அன்பான, வரவேற்பு சைகையில் வரவேற்றார்.இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் பயணத்தையொட்டி பிரதமர் வெளியிட்ட அறிக்கை
July 06th, 09:00 am
2026 ஜூலை 6 முதல் 11 வரை இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகளில் நான் பயணம் மேற்கொள்கிறேன்.