
புதுதில்லி விஞ்ஞான் பவனில் ஆச்சார்யா ஸ்ரீ வித்யானந்த் ஜி மகாராஜின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
June 28th, 11:15 am
பரம் ஷ்ரத்தேய ஆச்சார்யா ஸ்ரீ பிரக்யா சாகர் மகாராஜ் ஜி அவர்களே, ஷ்ரவணபெலகோலா சுவாமி சாருகீர்த்தி ஜியின் தலைவர் அவர்களே, என் சக நண்பர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களே, என் சக நாடாளுமன்ற உறுப்பினர் திரு நவீன் ஜெயின் அவர்களே, பகவான் மகாவீர் அஹிம்சா பாரதி அறக்கட்டளையின் தலைவர் திரு பிரியங்க் ஜெயின் அவர்களே, செயலாளர் திருமிகு மம்தா ஜெயின் அவர்களே, அறங்காவலர் திரு பியூஷ் ஜெயின் அவர்களேஇதர பிரமுகர்களே, மதிப்பிற்குரிய துறவிகளே, தாய்மார்களே, ஜெய் ஜினேந்திரா!ஆச்சார்ய வித்யானந்த் மகாராஜின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
June 28th, 11:01 am
புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று (28.06.2025) நடைபெற்ற ஆச்சார்யா வித்யானந்த் மஹாராஜின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், இந்தியாவின் ஆன்மீக பாரம்பரியத்தில் ஒரு முக்கியமான நிகழ்வை நாடு காண்கிறது என்றும், ஆச்சார்யா வித்யானந்த் முனிராஜின் நூற்றாண்டு விழாவின் புனிதத்தை இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது என்றும் குறிப்பிட்டார். மதிப்பிற்குரிய ஆச்சார்யாவின் அழியாத உத்வேகத்தால் நிறைந்த இந்த நிகழ்வு, ஒரு அசாதாரணமான மற்றும் எழுச்சியூட்டும் சூழலை உருவாக்குகிறது என்றும் அவர் கூறினார். அனைவருக்கும் பிரதமர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து, இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.