இந்தியாவின் உற்பத்தித் துறையில் சமீபத்திய ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின் மாற்றகரமான தாக்கத்தை பிரதமர் குறிப்பிட்டுள்ளார்

September 04th, 08:49 pm

இந்தியாவின் உற்பத்தித் துறையில் சமீபத்திய ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின் மாற்றகரமான தாக்கத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார். எளிமைப்படுத்தப்பட்ட வரி அடுக்குகள், சீரமைக்கப்பட்ட டிஜிட்டல் இணக்கம் மற்றும் கட்டண செயல்திறன்கள் முதலியவற்றை அறிமுகப்படுத்தியுள்ள அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், உள்நாட்டு உற்பத்தியை கணிசமாக ஊக்குவித்து, போட்டித் தன்மையை மேம்படுத்த உள்ளன.