India and Indonesia are connected not only by our history but also by a shared future: PM Modi at community programme in Jakarta
July 07th, 11:47 pm
Addressing the Indian community in Jakarta, PM Modi thanked the diaspora for their warm welcome and praised their contribution to Indonesia's progress and their role as a living bridge between the two nations. He spoke about India's rapid transformation and called upon the community to contribute towards the shared aspirations of Viksit Bharat 2047 and Indonesia Emas 2045.ஜகார்த்தாவில் இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் உரையாற்றினார்
July 07th, 05:30 pm
ஜகார்த்தாவில் இந்தியச் சமூகத்தினர் தமக்கு அளித்த வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்துகொண்டார். அங்கு கூடியிருந்த ஏராளமான இந்திய வம்சாவளியினர் மற்றும் அவர்களது இந்தோனேசிய நண்பர்கள், பிரதமருக்கு உற்சாகமான மற்றும் அன்பான வரவேற்பை அளித்தனர். இந்தோனேசிய அதிபர் மாண்புமிகு திரு பிரபோவோ சுபியாண்டோவும் பிரதமருடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.மனதின் குரல் நிகழ்ச்சியின் 135-வது அத்தியாயத்தில் 28.06.2026 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
June 28th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்களோடு இணைவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. 2026ஆம் ஆண்டின் முதல் பாதி, நிறைவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. கடந்த இந்த 6 மாதங்களில் நாம் மனதின் குரலிலே, நாட்டுமக்களின் அநேக சாதனைகள் குறித்து விவாதங்களில் ஈடுபட்டிருக்கிறோம். ஜூன் மாதத்தில் கூட தேசத்தின் சில சாதனைகள் அரங்கேறியிருக்கின்றன. இவை நாட்டுமக்களை பெருமிதத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. இந்த வெற்றிகள் தேசத்தின் பாதுகாப்பு மற்றும் தற்சார்போடு தொடர்புடையவை. தற்போது தான் கோல்காத்தாவிலே, கடற்படையோடு தொடர்புடைய ஒரு நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. அங்கே ஐஎன்எஸ் தூனாகிரி, ஐஎன்எஸ் சன்ஷோதக் மற்றும் ஐஎன்எஸ் அக்ரய் ஆகிய போர்க்கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்பட்டன. இந்தக் கப்பல்களின் வடிவமைப்பும், தயாரிப்பும், அனைத்துமே நம் நாட்டிலேயே ஆனவை.சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் 11 ஆண்டுகால நிறைவையொட்டி, அதன் தாக்கம் குறித்து பிரதமர் தெரிவித்துள்ள கருத்துக்கள்
May 09th, 06:10 pm
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால், 11 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட, முக்கிய சமூகப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டங்களின் தாக்கம் குறித்து, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று எடுத்துரைத்தார்.PM Modi’s interaction with the BJP Karyakartas from Tamil Nadu
April 13th, 04:00 pm
PM Modi interacted with BJP Karyakartas from Tamil Nadu during the ‘Mera Booth, Sabse Mazboot Samvaad’, acknowledging their relentless grassroots efforts in strengthening the NDA’s outreach across the state.Rashtra Prerna Sthal gives the message that every step, every effort must be dedicated to nation-building: PM Modi in Lucknow
December 25th, 06:16 pm
PM Modi inaugurated the Rashtra Prerna Sthal in Lucknow, Uttar Pradesh today. He paid respectful homage, offering salutations to Mahamana Malaviya ji, Atal ji, and Maharaja Bijli Pasi. He remarked that Atal ji and Malaviya ji dedicated their lives to safeguarding India’s identity, unity and pride. Quoting lines of Atal ji, the PM emphasized that Rashtra Prerna Sthal gives the message that every step, every effort must be dedicated to nation-building.உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உத்வேகமளிக்கும் தேசிய நினைவிடத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார்
December 25th, 05:23 pm
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் வாழ்க்கை மற்றும் இலட்சியங்களைப் போற்றும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இன்று தேசிய நினைவிடத்தை திறந்து வைத்தார். வாஜ்பாயின் 101 - வது பிறந்த தினத்தைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இன்று லக்னோ நகரம் ஒரு புதிய உத்வேகத்திற்கு சாட்சியாக உள்ளது என்று குறிப்பிட்டார்., இந்தியாவில் மற்றும் உலகளவில் உள்ள மக்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தியாவிலும் லட்சக்கணக்கான கிறித்தவ குடும்பங்கள் இன்று இந்த பண்டிகையைக் கொண்டாடுகின்றன என்று திரு மோடி குறிப்பிட்டார். இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியைக் கொண்டுவர வேண்டும் என்பதே நம் அனைவரின் ஒன்றிணைந்த விருப்பம் என்றும் அவர் கூறினார்.அசாம் மாநிலம் தாரங்கில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை
September 14th, 11:30 am
பாரத் மாதா கி ஜே, பாரத் மாதா கி ஜே, பாரத் மாதா கி ஜே! அசாமின் பிரபல முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா அவர்களே, எனது அமைச்சரவை சகாவான திரு சர்பானந்த சோனாவால் அவர்களே, அசாம் மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களே, இதர அரசு பிரதிநிதிகளே, தொடர்ந்து பெய்து வரும் மழைக்கு இடையே எங்களை ஆசிர்வதிக்க பெருமளவில் குழுமியுள்ள எனது சகோதரர்களே, சகோதரிகளே, வணக்கம்,அசாமின் தர்ராங்கில் சுமார் ரூ.6,500 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
September 14th, 11:00 am
இந்தியா தற்போது உலகின் வேகமாக வளர்ந்து வரும் நாடாகும். அதேபோல, அஸ்ஸாம் நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். அஸ்ஸாம் ஒரு காலத்தில் வளர்ச்சியில் பின்தங்கியதாகவும், நாட்டின் பிற பகுதிகளுடன் வேகத்தை பராமரிக்க போராடியதாகவும் அவர் நினைவு கூர்ந்தார். இருப்பினும், இன்று, அஸ்ஸாம் கிட்டத்தட்ட 13 சதவீத வளர்ச்சி விகிதத்துடன் முன்னேறி வருகிறது. இதை ஒரு பெரிய சாதனையாகக் குறிப்பிட்ட திரு மோடி, அஸ்ஸாம் மக்களின் கடின உழைப்பும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சியும் இந்த வெற்றிக்குக் காரணம் என்று கூறினார். அஸ்ஸாம் மக்கள் இந்தக் கூட்டாண்மையை தொடர்ந்து வலுப்படுத்தி வருவதற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.தேசிய விருது பெற்ற ஆசிரியர்கள் உடனான சந்திப்பில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
September 04th, 05:35 pm
நமது பாரம்பரியத்தில் ஆசிரியர்களுக்கான மரியாதை இயற்கையாகவே உள்ளது. மேலும் அவர்கள் சமூகத்தின் மகத்தான சக்தியாகவும் உள்ளனர். ஆசீர்வதிப்பதற்கு ஆசிரியர்களை எழுந்து நிற்கச் செய்வது தவறாகும். இத்தகைய பாவத்தை செய்வதற்கு நான் விரும்பவில்லை. ஆனால் நான் உங்களுடன் நிச்சயமாக உரையாட விரும்புகிறேன். என்னைப் பொருத்தவரை உங்கள் அனைவரையும் சந்திப்பது சிறப்பான அனுபவமாகும். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கே உரித்தான ஒரு கதையைக் கொண்டு இருப்பீர்கள். ஏனெனில் அப்படி இல்லாமல் இந்த நிலையை நீங்கள் அடைந்திருக்க மாட்டீர்கள். அந்தக் கதைகள் அனைத்தையும் அறிவதற்கு போதிய நேரத்தைக் கண்டறிவது சிரமமாகும். ஆனால், உங்களிடமிருந்து என்னால் கற்றுக் கொள்ள முடிவது குறைவாக இருந்தாலும் அது உண்மையில் ஊக்கமளிப்பதாக இருக்கும். அதற்காக உங்கள் அனைவரையும் நான் மனமார வாழ்த்துகிறேன். இந்த தேசிய விருதைப் பெற்றிருப்பது முடிவல்ல. இந்த விருதுக்குப் பின் அனைவரின் கவனமும் உங்கள் மீது இருக்கும். இதன் பொருள், உங்களைப் பற்றிய கவனம், குறிப்பிடத்தக்க வகையில் விரிவடைந்திருக்கும். இதற்கு முன்பு, உங்களின் செல்வாக்கு ஒரு வரம்புக்கு உட்பட்டு இருந்திருக்கும். ஆனால், இந்த அங்கீகாரத்திற்குப் பின், அது மேலும் அதிகரிக்கும். வளர்ச்சியடையும். இது தொடக்கம் என்று நான் நம்புகிறேன். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்குள் இருப்பது எதுவாக இருந்தாலும் சாத்தியமான வரை நீங்கள் மாணவர்களுடன் அதனை பகிர வேண்டும். அவ்வாறு நீங்கள் செய்யும் போது தான், உங்களின் மனதிருப்தி உணர்வு அதிகரிக்கும். இந்தத் திசையில் நீங்கள் தொடர்ந்து பாடுபடவேண்டும். இந்த விருதுக்கான உங்களின் தெரிவு, உங்களின் கடின உழைப்பிற்கும் உறுதியான அர்ப்பணிப்புக்கும் சான்றாகும். அதனால் மட்டுமே இது சாத்தியமாகி உள்ளது. ஒரு ஆசிரியர் என்பவர் நிகழ்காலத்திற்கு மட்டுமானவர் அல்ல, அவர் நாட்டின் எதிர்கால தலைமுறையையும் கட்டமைக்கிறார், எதிர்காலத்தை மெருகூட்டுகிறார். நாட்டிற்கான சேவையில் மற்ற எதையும் விட, இது சற்றும் குறைவானதல்ல என்று நான் நம்புகிறேன். உங்களைப் போன்ற கோடிக்கணக்கான ஆசிரியர்கள் இதே அர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும் நாட்டுக்கான சேவையில் ஈடுபட்டுள்ளனர். இங்கு வருவதற்கான வாய்ப்பை அனைவரும் பெற்றிருக்கவில்லை. ஒரு வேளை பலர், முயற்சி செய்யாமல் இருந்திருக்கலாம் அல்லது சிலர் கவனம் செலுத்தாமல் கூட இருந்திருக்கலாம். இத்தகைய திறன்களுடன் ஏராளமானவர்கள் உள்ளனர். அனைவரின் கூட்டு முயற்சிகளால் தான் நாடு தொடர்ந்து வளர்ச்சியடைவதையும், புதிய தலைமுறைகள் தொடர்ந்து வளர்வதையும் உறுதி செய்ய முடிகிறது. நாட்டுக்காக, நாட்டுக்குள் வாழ்கின்ற அனைவரும் இதற்கு பங்களிக்கின்றனர்.பிரதமர் நரேந்திர மோடி தேசிய விருது பெற்ற ஆசிரியர்களிடையே உரையாற்றினார்
September 04th, 05:33 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் இன்று தேசிய விருது பெற்ற ஆசிரியர்களிடையே உரையாற்றினார். ஆசிரியர்களை கௌரவிப்பது வெறும் சடங்கல்ல என்றும் அவர்கள் தங்களின் வாழ்நாளையே அர்பணித்துள்ளதை அங்கீகரிப்பதாகும் என்றும் அவர் தெரிவித்தார். தேசிய ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் பிரதமர் தமது மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். அவர்களுடைய கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கான அங்கீகாரமே இந்த விருதுக்கான தேர்வு என்று அவர் கூறினார்.பீகார் மாநில வாழ்வாதார கடன் கூட்டுறவு சங்கத்தின் தொடக்க விழாவில் காணொலி காட்சி மூலம் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
September 02nd, 01:00 pm
மக்கள் செல்வாக்குள்ள பீகார் முதலமைச்சர் திரு நிதீஷ் குமார் அவர்களே, துணை முதலமைச்சர்கள் சாம்ராட் சௌத்ரி அவர்களே, விஜய் குமார் அவர்களே, இதர விருந்தினர்களே, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பீகாரைச் சேர்ந்த லட்சக்கணக்கான எனது சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் எனது மதிப்புமிகு வாழ்த்துகள்.பிரதமர் திரு நரேந்திர மோடி பீகார் மாநில வாழ்வாதார கடன் கூட்டுறவு கூட்டமைப்பை தொடங்கி வைத்தார்
September 02nd, 12:40 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி பீகார் மாநில வாழ்வாதார கடன் கூட்டுறவு கூட்டமைப்பை இன்று காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்த புனிதமிக்க செவ்வாய்க்கிழமையில் உயர்ந்த நம்பிக்கைக்குரிய முன்முயற்சி தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறினார். வாழ்வாதார கடன் கூட்டுறவு கூட்டமைப்பு மூலம் பீகாரின் அன்னையர்கள் மற்றும் சகோதர, சகோதரிகளுக்கு புதிய வசதி அளிக்கப்படுவதாக அவர் அறிவித்தார். இந்த முன்முயற்சி, கிராமங்களில் வாழ்வாதார கடன் தொடர்புடைய பெண்கள் எளிதாக நிதி ஆதரவைப் பெற்று தங்களுடைய பணி மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்த உதவிடும் என்று பிரதமர் குறிப்பிட்டார். ஜீவிகா வாழ்வாதார கடன் முறை முழுவதுமாக மின்னணு மயமாக்கப்பட்டுள்ளதாகவும், நேரடி வருகையை தவிர்த்து மொபைல் ஃபோன் வாயிலாக அனைத்தையும் தற்போது மேற்கொள்ள முடியும் என்று தமது மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தினார். வாழ்வாதார கடன் கூட்டுறவு கூட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளதற்காக பீகார் மாநில அன்னையர்கள் மற்றும் சகோதரிகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். இந்த சிறப்பான முன்முயற்சிக்காக திரு நிதிஷ் குமாருக்கும், பீகார் அரசுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் வளர்ச்சிப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுதல் மற்றும் தொடக்க விழாவில் பிரதமரின் உரையின் தமிழாக்கம்
August 02nd, 11:30 am
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, துணை முதலமைச்சர் திரு கேசவ் பிரசாத் மௌரியா அவர்களே, திரு பிரஜேஷ் பதக் அவர்களே, வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் அவர்களே, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எங்களுடன் இணைந்திருக்கும் ஆளுநர்களே, அமைச்சர்களே, உத்தரப்பிரதேச பாஜக தலைவர் திரு பூபேந்திர சிங் சௌத்ரி அவர்களே, நாடுளுமன்ற, சட்டமன்ற உறுப்பினரும் கே, என் அன்பான விவசாய சகோதர சகோதரிகளே, குறிப்பாக எனது எஜமானர்களான காசி மக்களே!உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் சுமார் ரூ.2,200 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார்
August 02nd, 11:00 am
திரு.நரேந்திர மோடி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, புனிதமான சாவான் மாதத்தில் வாரணாசியைச் சேர்ந்த குடும்பங்களைச் சந்தித்தது குறித்த மன நிறைவை வெளிப்படுத்தினார். வாரணாசி மக்களுடனான தமது ஆழமான உணர்ச்சிபூர்வமான தொடர்பை எடுத்துரைத்த திரு மோடி, நகரத்தின் ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் தமது மரியாதைக்குரிய வாழ்த்துகளைத் தெரிவித்தார். புனிதமான சாவான் மாதத்தில் காணொலி மூலம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுடன் இணைவதில் திரு மோடி திருப்தி தெரிவித்தார்.சில்வசாவில் வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை
March 07th, 03:00 pm
நீங்கள் அனைவரும் ரும் நலமாக இருக்கிறீர்களா? இன்று இங்கு மிகுந்த உற்சாகம் காணப்படுகிறது. நீங்கள் அனைவரும் சேர்ந்து எனக்கு இங்கு வரும் இந்த வாய்ப்பை வழங்கியுள்ளீர்கள். யூனியன் பிரதேசத்தின் அனைத்து தொழிலாளர்களுக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். பல பழைய நண்பர்களுக்கும் வணக்கம் சொல்லும் வாய்ப்பு கிடைத்தது.பிரதமர் திரு நரேந்திர மோடி, தாத்ரா, நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசம் சில்வாசாவில் ரூ.2580 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்தார்
March 07th, 02:45 pm
யூனியன் பிரதேசமான தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூவில் ரூ.2580 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சில்வாசாவில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு முன்னதாக சில்வாசாவில் நமோ மருத்துவமனையையும் அவர் தொடங்கி வைத்தார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், இந்தப் பிராந்தியத்துடன் தொடர்பு கொள்ள, வாய்ப்பளித்த தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அர்ப்பணிப்பு உணர்வுள்ள தொழிலாளர்களுக்கு தமது நன்றியைத் தெரிவித்தார். மக்களுடன் அவர் கொண்டிருந்த அரவணைப்பு மற்றும் நீண்டகாலத் தொடர்பை சுட்டிக் காட்டிய அவர், பிராந்தியத்துடனான தமது பிணைப்பு பல தசாப்தங்கள் பழமையானது என்று பகிர்ந்து கொண்டார். 2014-ல் தமது அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அவர் எடுத்துரைத்தார்.ஹரியானா மாநிலம் பானிபட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை
December 09th, 05:54 pm
ஹரியின் இருப்பிடம் ஹரியானா, இங்கே, உள்ள அனைவரும் 'ராம் ராம்' என ஒருவருக்கொருவர் மனமார வாழ்த்திக் கொள்கின்றனர்.எல்.ஐ.சியின் பீமா சகி திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
December 09th, 04:30 pm
மகளிருக்கு அதிகாரமளித்தல் மற்றும் நிதி உள்ளடக்கம் குறித்த உறுதிப்பாட்டின் அடிப்படையில், ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பீமா சகி திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி ஹரியானா மாநிலம் பானிபட்டில் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது, கர்னாலில் உள்ள மஹாராணா பிரதாப் தோட்டக்கலை பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார். அப்போது உரையாற்றிய திரு மோடி, மகளிருக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கி இந்தியா மற்றொரு வலுவான அடியை எடுத்து வைக்கிறது என்று கூறினார். இன்று மாதத்தின் 9 வது நாளாக இருப்பது சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் எண் 9 நமது புனிதங்களில் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது மற்றும் நவராத்திரியின் போது வணங்கப்படும் நவ துர்க்கையின் ஒன்பது வடிவங்களுடன் தொடர்புடையது என்று அவர் கூறினார். இன்றைய தினம் பெண் சக்தியை வழிபடும் நாளாகவும் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.TMC is running a mobocracy, not a republic: PM Modi in Bolpur
May 03rd, 10:45 am
Tapping into the vivacious energy of Lok Sabha Elections, 2024, Prime Minister Narendra Modi graced public meeting in Bolpur. Addressing the crowd, he outlined his vision for a Viksit Bharat while alerting the audience to the opposition's agenda of looting and piding the nation. Promising accountability, he assured the people that those responsible for looting the nation would be held to account.