India's Digital Public Infrastructure has today become a subject of global discussion: PM Modi at the Rising Bharat Summit
February 27th, 08:30 pm
PM Modi addressed the Rising Bharat Summit, centering his remarks on the theme of Strength Within. Highlighting India's journey over the last 11 years, the PM spoke extensively on reclaiming national potential, economic self-reliance, and the roadmap for a developed India by 2047. He noted that in previous industrial revolutions, India and the Global South were merely followers, while in the era of AI, India is a partner in decisions and is shaping them.PM Modi addresses Network18 Rising Bharat Summit
February 27th, 08:00 pm
PM Modi addressed the Rising Bharat Summit, centering his remarks on the theme of Strength Within. Highlighting India's journey over the last 11 years, the PM spoke extensively on reclaiming national potential, economic self-reliance, and the roadmap for a developed India by 2047. He noted that in previous industrial revolutions, India and the Global South were merely followers, while in the era of AI, India is a partner in decisions and is shaping them.Assam has picked up a new momentum of development: PM Modi at the foundation stone laying of Ammonia-Urea Fertilizer Project in Namrup
December 21st, 04:25 pm
In a major boost to the agricultural sector, PM Modi laid the foundation stone of Ammonia-Urea Fertilizer Project at Namrup in Assam. He highlighted the start of new industries, the creation of modern infrastructure, semiconductor manufacturing, new opportunities in agriculture, the advancement of tea gardens and their workers as well as the growing potential of tourism in Assam. The PM reiterated his commitment to preserving Assam’s identity and culture.அசாம் மாநிலம் நம்ரூப்பில் உரத் தொழிற்சாலைக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்
December 21st, 12:00 pm
அசாம் மாநிலம் திப்ரூகரில் உள்ள நம்ரூப்பில், அசாம் பள்ளத்தாக்கு உர- வேதியியல் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்படும் அமோனியா-யூரியா உரத் தொழிற்சாலைத் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (21.12.2025) அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில் உரையாற்றிய திரு நரேந்திர மோடி, இது சாவோலுங் சுகபா, மகாவீர் லச்சித் போர்புகான் போன்ற சிறந்த வீரர்களின் பூமி என்று குறிப்பிட்டார். பீம்பர் டியூரி, ஷாஹீத் குஷால் குன்வர், மோரன் மன்னர் போடோசா, மாலதி மேம், இந்திரா மிரி, ஸ்வர்கதேவ் சர்பானந்த சிங் மற்றும் வீரம் மிக்க சதி சாதனி ஆகியோரின் பங்களிப்புகளையும் அவர் எடுத்துரைத்தார். அசாம் புனித மண்ணுக்கு தலைவணங்குவதாக பிரதமர் கூறினார்.நவம்பர் 9 -ம் தேதி பிரதமர் டேராடூனுக்கு பயணம்
November 08th, 09:26 am
பிரதமர் திரு நரேந்திர மோடி நவம்பர் 9-ம் தேதி மதியம் 12:30 மணியளவில் டேராடூனில் உத்தராகண்ட் மாநிலம் உதயமானதன் வெள்ளி விழாக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பார். இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவு அஞ்சல்தலையையும் வெளியிடும் பிரதமர், கூட்டத்தில் உரையாற்றுவார்.For the past 11 years, the government's continuous effort has been to empower farmers and increase investment in agriculture: PM Modi
October 11th, 12:30 pm
At a programme in Delhi, PM Modi launched projects and schemes worth over Rs 35,400 crore in the Agriculture and Allied Sectors. The PM Dhan Dhaanya Krishi Yojana aims to enhance agricultural productivity, promote crop persification and sustainable practices in selected districts. He also launched the Dalhan Aatmanirbharta Mission, focused on boosting productivity and expanding the cultivation of pulses. PM Modi emphasised, “On one hand, we must be self-reliant; on the other, we must produce for the global market as well..”வேளாண் துறையில் ₹35,440 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் இரண்டு முக்கிய திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
October 11th, 12:00 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (11.10.2025) புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற சிறப்பு வேளாண் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பொது நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பு பிரதமர் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு பிரதமரின் காணொலி செய்தி
August 23rd, 11:00 am
தேசிய விண்வெளி தினத்தில் உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள். இந்த ஆண்டு, விண்வெளி தினத்தின் கருப்பொருள் ' ஆர்யபட்டாவிலிருந்து ககன்யான் வரை; பண்டைய ஞானத்திலிருந்து எல்லையற்ற சாத்தியக்கூறுகள்' என்பதாகும். இது கடந்த காலத்தின் நம்பிக்கையையும் எதிர்காலத்தின் உறுதியையும் உள்ளடக்கியது. இன்று, இவ்வளவு குறுகிய காலத்தில், தேசிய விண்வெளி தினம் நமது இளைஞர்களுக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கும் ஒரு சந்தர்ப்பமாக மாறியுள்ளது என்பதை நாம் காண்கிறோம். இது உண்மையில் தேசத்திற்கு மிகுந்த பெருமை சேர்க்கும் விஷயமாகும். தேசிய விண்வெளி தினத்தில் விண்வெளித் துறையுடன் தொடர்புடைய அனைவருக்கும், நமது விஞ்ஞானிகளுக்கும், அனைத்து இளைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சமீபத்தில், பாரதம் 'வானியல் மற்றும் வானியற்பியல் குறித்த சர்வதேச ஒலிம்பியாட்'-ஐ நடத்தியது. இந்தப் போட்டியில், உலகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 300 இளைஞர்கள் பங்கேற்றனர். நமது இந்திய இளைஞர்களும் பதக்கங்களை வென்றனர். இந்த ஒலிம்பியாட், விண்வெளித் துறையில் இந்தியாவின் வளர்ந்து வரும் தலைமையின் அடையாளமாகும்.தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்
August 23rd, 10:30 am
2025-ம் ஆண்டு தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் உரையாற்றினார். இந்த நிகழ்வில், பிரதமர் தமது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார், இந்த ஆண்டின் கருப்பொருளான “ஆர்யபட்டாவிலிருந்து ககன்யான் வரை” என்பது, இந்தியாவின் கடந்த காலத்தின் நம்பிக்கையையும் அதன் எதிர்காலத்திற்கான உறுதியையும் பிரதிபலிக்கிறது. குறுகிய காலத்தில், தேசிய விண்வெளி தினம் இந்திய இளைஞர்களுக்கு உற்சாகத்தையும் ஈர்ப்பையும் அளிக்கும் ஒரு தருணமாக மாறியுள்ளது, இது தேசிய அளவில் பெருமைக்குரிய விஷயம் என்று அவர் குறிப்பிட்டார். விஞ்ஞானிகள் மற்றும் இளைஞர்கள் உள்பட விண்வெளித் துறையுடன் தொடர்புடைய அனைவருக்கும் பிரதமர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தியா தற்போது சர்வதேச வானியல் மற்றும் வானியற்பியல் ஒலிம்பியாட்டை நடத்துகிறது என்றும், அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 300 இளைஞர்கள் இதில் பங்கேற்பதாகவும் திரு மோடி குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் பல இந்திய பங்கேற்பாளர்கள் பதக்கங்களை வென்றதில் திரு மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த ஒலிம்பியாட் விண்வெளித் துறையில் இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய தலைமையின் சின்னம் என்றும் அவர் கூறினார். இளைஞர்களிடையே விண்வெளியில் ஆர்வத்தை மேலும் தூண்டுவதற்காக, இந்திய விண்வெளி ஹேக்கத்தான் மற்றும் ரோபாட்டிக்ஸ் சவால் போன்ற முயற்சிகளை இஸ்ரோ தொடங்கியுள்ளது என்று பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து மாணவர்கள் மற்றும் வெற்றியாளர்களை அவர் வாழ்த்தினார்.புதுதில்லியில் நடைபெற்ற எம்.எஸ். சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை
August 07th, 09:20 am
எனது அமைச்சரவை சகா திரு சிவராஜ் சிங் சௌஹான், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் சௌமியா சுவாமிநாதன், நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் ரமேஷ் சந்த், சுவாமிநாதன் குடும்பத்தைச் சேர்ந்த பலர் இங்கு இருப்பதையும் நான் காண்கிறேன். அவர்களுக்கும் எனது மரியாதைக்குரிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து விஞ்ஞானிகள், சிறப்பு விருந்தினர்கள், பெண்கள் மற்றும் தாய்மார்களே!பிரதமர் திரு நரேந்திர மோடி எம் எஸ் சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டில் உரையாற்றினார்
August 07th, 09:00 am
பிரதமர் திரு நரேந்திர மோடி எம் எஸ் சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டை இன்று (07 ஆகஸ்ட், 2025) தொடங்கி வைத்து உரையாற்றினார். புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் வளாகத்தில் நடைபெற்று வரும் இம்மாநாட்டில் மறைந்த பேராசிரியர் எம் எஸ் சுவாமிநாதனுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார். தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய அவரது பங்களிப்பு ஒரே சகாப்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். புகழ்பெற்ற விஞ்ஞானியான எம் எஸ் சுவாமிநாதன் அறிவியலை பொதுச் சேவைக்கான ஊடகமாக மாற்றியுள்ளார் என்று குறிப்பிட்டார். நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவர் தனது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளதை பிரதமர் சுட்டிக் காட்டினார். நாட்டின் கொள்கைகளை வகுப்பதிலும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளிலும் மேலும் பல நூற்றாண்டுகளுக்கு அவரது சீரிய சிந்தனைகள் தொடர்ந்து வழிகாட்டியாக அமையும் என்று பிரதமர் கூறினார். எம் எஸ் சுவாமிநாதனின் நூற்றாண்டு பிறந்த தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்தார்.உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் வளர்ச்சிப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுதல் மற்றும் தொடக்க விழாவில் பிரதமரின் உரையின் தமிழாக்கம்
August 02nd, 11:30 am
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, துணை முதலமைச்சர் திரு கேசவ் பிரசாத் மௌரியா அவர்களே, திரு பிரஜேஷ் பதக் அவர்களே, வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் அவர்களே, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எங்களுடன் இணைந்திருக்கும் ஆளுநர்களே, அமைச்சர்களே, உத்தரப்பிரதேச பாஜக தலைவர் திரு பூபேந்திர சிங் சௌத்ரி அவர்களே, நாடுளுமன்ற, சட்டமன்ற உறுப்பினரும் கே, என் அன்பான விவசாய சகோதர சகோதரிகளே, குறிப்பாக எனது எஜமானர்களான காசி மக்களே!உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் சுமார் ரூ.2,200 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார்
August 02nd, 11:00 am
திரு.நரேந்திர மோடி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, புனிதமான சாவான் மாதத்தில் வாரணாசியைச் சேர்ந்த குடும்பங்களைச் சந்தித்தது குறித்த மன நிறைவை வெளிப்படுத்தினார். வாரணாசி மக்களுடனான தமது ஆழமான உணர்ச்சிபூர்வமான தொடர்பை எடுத்துரைத்த திரு மோடி, நகரத்தின் ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் தமது மரியாதைக்குரிய வாழ்த்துகளைத் தெரிவித்தார். புனிதமான சாவான் மாதத்தில் காணொலி மூலம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுடன் இணைவதில் திரு மோடி திருப்தி தெரிவித்தார்.கடந்த 11 ஆண்டுகளாக, எங்களின் பல்வேறு முயற்சிகள் விவசாயிகளின் முன்னேற்றத்தை ஊக்குவித்துள்ளன, மேலும் விவசாயத் துறையின் ஒட்டுமொத்த மாற்றத்தையும் உறுதி செய்துள்ளன: பிரதமர்
June 07th, 11:40 am
கடந்த 11 ஆண்டுகளில் விவசாயிகளுக்கான அரசின் ஆதரவு முயற்சிகளின் நீண்டகாலத் தாக்கத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி சுட்டிக் காட்டியுள்ளார். இது விவசாய சமூகத்திற்கு கண்ணியம் மற்றும் முன்னேற்றத்துக்கான குறிப்பிடத்தக்க வளர்ச்சி கட்டத்தைக் குறிக்கிறது.ஆந்திரப் பிரதேசம் அமராவதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
May 02nd, 03:45 pm
ஆந்திர ஆளுநர் திரு சையத் அப்துல் நசீர் அவர்களே, முதலமைச்சரும் எனது நண்பருமான திரு சந்திரபாபு நாயுடு அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களே, ஆற்றல் மிக்க துணை முதலமைச்சர் திரு பவன் கல்யாண் அவர்களே, மாநில அமைச்சர்களே, அனைத்து நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களே மற்றும் ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகளே!ஆந்திர மாநிலம் அமராவதியில் ரூ.58,000 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார், நிறைவடைத திட்டங்களைத் தொடங்கி வைத்தார்
May 02nd, 03:30 pm
ஆந்திரப் பிரதேச மாநிலம் அமராவதியில் ரூ.58,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டியதுடன், நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அமராவதி என்ற புனித பூமியில் நிற்கும்போது, வெறும் ஒரு நகரத்தை மட்டுமல்ல, ஒரு புதிய அமராவதி, ஒரு புதிய ஆந்திரா என்ற கனவை நனவாக்குவதையும் தான் காண்கிறேன் என்று பிரதமர் தெரிவித்தார். அமராவதி, பாரம்பரியமும் முன்னேற்றமும் கைகோர்த்துச் செல்லும் ஒரு பூமி, அதன் புத்த பாரம்பரியத்தின் அமைதியையும், வளர்ந்த இந்தியாவைக் கட்டமைக்கும் ஆற்றலையும் தழுவிச் செல்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். இன்று, திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்றும், இந்தத் திட்டங்கள் வெறும் கான்கிரீட் கட்டமைப்புகளைப் பற்றியது மட்டுமல்ல, ஆந்திரப் பிரதேசத்தின் அபிலாஷைகள் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையின் வலுவான அடித்தளமாகும் என்றும் அவர் மேலும் கூறினார். பிரதமர் மோடி ஆந்திரப் பிரதேச மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்து, பகவான் வீரபத்ரர், பகவான் அமரலிங்கேஸ்வரர் மற்றும் திருப்பதி பாலாஜி ஆகியோரை பிரார்த்தனை செய்தார். முதலமைச்சர் திரு. சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் திரு. பவன் கல்யாண் ஆகியோருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
April 06th, 02:00 pm
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி அவர்களே, எனது மத்திய அமைச்சரவை சகாக்கள் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, டாக்டர் எல் முருகன் அவர்களே, தமிழ்நாடு அரசின் அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, இதர பிரமுகர்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே!ராமேஸ்வரத்தில் ₹8,300 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியதுடன், நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார்
April 06th, 01:30 pm
தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் ₹ 8,300 கோடி மதிப்பிலான பல்வேறு ரயில் மற்றும் சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். முன்னதாக, இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலமான புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்த அவர், சாலை பாலத்திலிருந்து ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்து பாலத்தின் செயல்பாட்டைப் பார்வையிட்டார். முன்னதாக, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பிரதமர் சுவாமி தரிசனம் செய்து பூஜை வழிபாட்டை மேற்கொண்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு நரேந்திர மோடி, இன்று, ஸ்ரீ ராம நவமியின் புனித தருணமாக அமைந்துள்ளது என்று கூறினார். அயோத்தியில் உள்ள அற்புதமான ராமர் கோவிலில், இன்று, சூரியனின் தெய்வீக கதிர்கள் குழந்தை ராமரை ஒரு பெரிய திலகத்துடன் அலங்கரித்தன என்று அவர் கூறினார். பகவான் ஸ்ரீ ராமரின் வாழ்க்கையும், அவரது ஆட்சியிலிருந்து நல்லாட்சியின் உத்வேகமும் தேசத்தைக் கட்டமைப்பதற்கான குறிப்பிடத்தக்க அடித்தளமாக செயல்படுகின்றன என்று அவர் கூறினார். தமிழ்நாட்டின் சங்க கால இலக்கியங்களிலும் பகவான் ஸ்ரீ ராமர் பற்றி குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறிய அவர், புனித பூமியான ராமேஸ்வரத்திலிருந்து ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு அனைத்து மக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.பீகார் மாநிலம் பாகல்பூரில் வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
February 24th, 02:35 pm
மேஹி மகரிஷி தவம் செய்த இடமாகவும், உலகப் புகழ்பெற்ற விக்ரமசீலா மகாவிகார் அமைந்துள்ள வசுபூஜ்ய பூமியிலிருந்தும், பாபா புத்தநாதரின் புனித பூமியிலிருந்தும் வந்துள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துகள்!பிரதமர் திரு நரேந்திர மோடி பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் 19-வது தவணையை விடுவித்து, பீகார் மாநிலம் பாகல்பூரில் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்
February 24th, 02:30 pm
இன்று இந்த நிகழ்ச்சியில் பீகார் மண்ணில் 10,000-வது உழவர் உற்பத்தியாளர் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வேளையில், நாடு முழுவதிலும் உள்ள உழவர் உற்பத்தியாளர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்