தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் 1 அன்று பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்

February 27th, 04:40 pm

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2026 மார்ச் 1 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார். ராஜஸ்தான் மற்றும் குஜராத் பயணத்திற்குப் பின், பிப்ரவரி 28 அன்று இரவு 9 மணியளவில் பிரதமர் சென்னை வருகிறார்.

In this decade of the 21st century, India is riding the Reform Express: PM Modi at ET Now Global Business Summit

February 13th, 08:30 pm

PM Modi addressed the ET Now Global Business Summit 2026 in New Delhi, highlighting the theme ‘A Decade of Disruption, A Century of Change.’ He noted that despite global shocks—from the pandemic to wars and supply chain breakdowns, India’s decade has been defined by strong growth, effective delivery, and a vibrant democracy. Recalling that India was the 11th-largest economy a decade ago, he said the nation is now rapidly moving toward becoming the world’s third-largest economy.

எகனாமிக் டைம்ஸ் நவ் சர்வதேச வர்த்தக உச்சி மாநாட்டில், பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

February 13th, 08:00 pm

புதுதில்லியில் இன்று நடைபெற்ற எகனாமிக் டைம்ஸ் நவ் சர்வதேச வர்த்தக உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த சர்வதேச வர்த்தக உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட அவர், 'பத்தாண்டு கால இடையூறு, ஒரு நூற்றாண்டுக்கான மாற்றம்' என்ற கருப்பொருளில் உரையாற்றினார். 21 - ம் நூற்றாண்டின் கடந்த பத்தாண்டுகளில், உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய பெருந்தொற்று, பதற்றமான சூழல், பல்வேறு பிராந்தியங்களில் போர்கள், மற்றும் உலகளவிலான சமநிலையைப் பாதிக்கும் வகையில், விநியோக நடைமுறைகளில் முறிவுகள் உள்ளிட்ட முன்னெப்போதும் இல்லாத அளவிலான இடையூறுகள் ஏற்பட்டுள்ளன என்பதை அவர் விரிவாக எடுத்துரைத்தார். நெருக்கடியான சூழல்கள் நாட்டின் உண்மையான வலிமையை வெளிப்படுத்துகின்றன என்றும், இத்தகைய இடையூறுகள் இருந்த போதிலும், இந்தியா கடந்த பத்தாண்டு காலத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி, சிறந்த விநியோக செயல்பாடுகள் மற்றும் ஜனநாயக நடைமுறைகளை வலுப்படுத்துதல் போன்றவற்றால் முன்னேற்றம் அடைந்து வருகிறது என்பதில் அவர் பெருமிதம் தெரிவித்தார். கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு, இந்தியா உலகளவில் பதினொன்றாவது பெரிய பொருளாதார நாடு என்ற நிலையில் இருந்தது. கடும் சவால்களுக்கு இடையே நாட்டின் பொருளாதாரத்தில் சரிவு ஏற்படும் என்ற அச்சம் இருந்தது. ஆனால், தற்போது இந்தியா விரைவான வளர்ச்சியுடன், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்து வருகிறது என்பதை திரு மோடி நினைவு கூர்ந்தார். இந்த நூற்றாண்டிற்கான மாற்றத்தின் முக்கிய அடித்தளமாக இந்தியா திகழும் என்பதை சுட்டிக் காட்டிய பிரதமர், இந்தியா தற்போது உலக நாடுகளின் முன்னேற்றத்திற்கு பதினாறு சதவீதத்திற்கும் கூடுதலாக பங்களித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். மேலும், இந்த பங்களிப்பு ஆண்டுதோறும் அதிகரிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்தியா உலகளவில் வளர்ச்சிக்கான உத்வேகத்துடன், உலகப் பொருளாதாரத்தின் புதிய ஊக்கியாக இருக்கும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

49-வது பிரகதி கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்

September 24th, 09:56 pm

மத்திய மற்றும் மாநில அரசுகளை உள்ளடக்கிய, ஐ.சி.டி அடிப்படையிலான, செயலில் ஆளுகை மற்றும் சரியான நேரத்தில் செயல்படுத்தலுக்கான பல-மாதிரி தளமான பிரகதியின் 49-வது கூட்டத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமை தாங்கினார். முக்கிய திட்டங்களை துரிதப்படுத்துவது, இடர்பாடுகளை உடனடியாகத் தீர்ப்பது,உரிய காலத்திற்குள் திட்டம் முடிக்கப்படுவதை உறுதி செய்வதில் மத்திய மாநில அரசுகளை இந்தத் தளம் ஒன்று சேர்க்கிறது.

பிரதமர் திரு நரேந்திர மோடி செப்டம்பர் 25 அன்று உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார்

September 24th, 06:25 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி செப்டம்பர் 25 அன்று உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார். கிரேட்டர் நொய்டாவில் செப்டம்பர் 25 காலை 9.30 மணியளவில் உத்தரப்பிரதேச சர்வதேச வர்த்தக கண்காட்சி 2025-ஐ அவர் தொடங்கிவைப்பார். அங்கு திரண்டிருப்போரிடையே அவர் உரையாற்றுவார்.

மொரீஷியஸ் பிரதமரின் இந்தியப் பயணத்தின் பலன்கள்

September 11th, 02:10 pm

அரசு முறைப் பயணமாக மொரீஷியஸ் பிரதமர் திரு நவீன் சந்திர ராம்கூலம் இந்தியா வந்துள்ளார். அவரது இந்தப் பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட முக்கிய ஒப்பந்தங்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு:

தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

July 26th, 08:16 pm

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களான கிஞ்சரப்பு ராமமோகன் நாயுடு அவர்களே, டாக்டர் எல்.முருகன் அவர்களே, தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு அவர்களே, டாக்டர் டி.ஆர்.பி.ராஜா அவர்களே, பி.கீதா ஜீவன் அவர்களே, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களே, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் அவர்களே, தமிழ்நாட்டைச் சேர்ந்த சசோதர சகோதரிகளே!

பிரதமர் திரு. நரேந்திர மோடி, தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் ₹4800 கோடிக்கும் அதிக மதிப்புள்ள மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டிற்கு அர்ப்பணித்தார்

July 26th, 07:47 pm

தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் இன்று சுமார் ₹4800 கோடி மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியதுடன், நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டிற்கு அர்ப்பணித்தார். பல்வேறு துறைகளில் அமைந்துள்ள தொடர்ச்சியான முக்கிய திட்டங்கள், பிராந்திய இணைப்பை கணிசமாக மேம்படுத்தும், தளவாடத் திறனை அதிகரிக்கும், தூய்மையான எரிசக்தி உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் மற்றும் தமிழ்நாடு முழுவதும் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும். கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, கார்கிலின் துணிச்சல்மிகு வீரர்களுக்கு திரு. மோடி மரியாதை செலுத்தினார். தீரம் நிறைந்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தியதுடன், தேசத்திற்காக தங்கள் இன்னுயிரை நீத்த தியாகிகளுக்கு மனமார்ந்த அஞ்சலி செலுத்தினார்.

பீகார், ஒடிசா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு ஜூன் 20, 21 தேதிகளில் பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்

June 19th, 05:48 pm

பீகார், ஒடிசா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு ஜூன் 20,21 தேதிகளில் பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் மேற்கொள்வார். ஜூன் 20 அன்று பீகார் மாநிலம் சிவானுக்கு பயணம் மேற்கொள்ளும் அவர், நண்பகல் 12 மணி வாக்கில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவிருக்கும் பிரதமர் நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைப்பார். இந்த நிகழ்வில் திரண்டிருப்போரிடையே அவர் உரையாற்றுவார்.

பிரதமர், மே 26, 27 ஆகிய தேதிகளில் குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறார்

May 25th, 09:14 am

பிரதமர் திரு நரேந்திர மோடி மே 26, 27 ஆகிய தேதிகளில் குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறார். அவர் தாஹோத் நகருக்குச் சென்று காலை 11:15 மணியளவில், ரயில் என்ஜின் உற்பத்தி தொழிற்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். மின்சார ரயில் என்ஜின் ஒன்றையும் கொடியசைத்துத் தொடங்கிவைப்பார். பின்னர், தாஹோதில் சுமார் ரூ.24,000 கோடி மதிப்பிலான பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுவதோடு நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். பிரதமர் பொது நிகழ்ச்சியிலும் உரையாற்றுவார்.

பிரதமர் மே 22 அன்று ராஜஸ்தானில் பயணம் மேற்கொள்கிறார்

May 20th, 01:06 pm

காலை 11:30 மணியளவில், அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட தேஷ்னோக் நிலையத்தையும், பிகானிர்-மும்பை விரைவு ரயிலையும் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். அதை தொடர்ந்து, பலானாவில் ரூ.26,000 கோடிக்கும் மேல் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்து, நாட்டிற்கு அர்ப்பணிப்பார். மேலும் அங்கு ஒரு பொது நிகழ்ச்சியில் உரையாற்ற உள்ளார்.

மின்சாரத் துறைக்கு நிலக்கரி ஒதுக்கீடு செய்வதற்கான திருத்தப்பட்ட ஷக்தி கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்

May 07th, 12:07 pm

மத்திய/மாநில அரசுகளின் அனல்மின் திட்டங்கள், தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு புதிதாக நிலக்கரி இணைப்புகளை வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

ஏப்ரல் 24-ம் தேதி பிரதமர் பீகார் செல்கிறார்

April 23rd, 06:30 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி ஏப்ரல் 24-ம் தேதி பீகாருக்கு பயணம் மேற்கொள்கிறார். காலை 11:45 மணியளவில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியில் ரூ.13,480 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

ஈடி நவ் உலகளாவிய வணிக உச்சிமாநாட்டில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

February 15th, 08:30 pm

கடந்த முறை ஈடி நவ் உச்சிமாநாட்டில் நான் பங்கேற்ற போது, தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில், எங்களின் மூன்றாவது பதவிக்காலத்தில் புதிய வேகத்துடன் பாரதம் செயலாற்றும் என்று நான் பணிவுடன் குறிப்பிட்டிருந்தேன். அந்த வேகம் தற்போது, நடைமுறையாகியிருப்பதில் நான் திருப்தியடைந்துள்ளேன். நாடும் அதற்கு ஆதரவாக இருக்கிறது. புதிய அரசு அமைந்தபின், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநில மக்களின் வாழ்த்துகளை பிஜேபி- என்டிஏ தொடர்ந்து பெற்று வருகிறது. ஜூன் மாதத்தில் வளர்ச்சியடைந்த இந்தியா லட்சியத்தை ஒடிசா மக்கள் வேகப்படுத்தினர். பின்னர், ஹரியானா மக்கள் தங்களின் ஆதரவை அளித்தனர். தற்போது, தில்லி மக்கள் அமோக ஆதரவை அளித்துள்ளனர். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்கு நாட்டுமக்கள் எவ்வாறு தோளோடு தோள் சேர்ந்து நிற்கிறார்கள் என்பதற்கு இவை அங்கீகாரமாகும்.

எகனாமிக் டைம்ஸ் நவ் உலக வர்த்தக உச்சி மாநாடு 2025-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

February 15th, 08:00 pm

புதுதில்லியில் நடைபெற்ற எக்கனாமிக் டைம்ஸ் நவ் உலகளாவிய வர்த்தக உச்சி மாநாடு 2025-ல் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, கடந்த எக்னாமிக் டைம்ஸ் நவ் உச்சிமாநாட்டின் போது, இந்தியா புதிய வேகத்தில் பணியாற்றி வருவதாக தெரிவித்ததை நினைவு கூர்ந்தார். இந்த வேகம் இப்போது தெளிவாகத் தெரிவது குறித்தும், மக்களிடம் இருந்து ஆதரவு கிடைத்திருப்பது குறித்தும் அவர் திருப்தி தெரிவித்தார். வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற உறுதிப்பாட்டிற்கு மகத்தான ஆதரவை அளித்த ஒடிசா, மகாராஷ்டிரா, ஹரியானா, புதுதில்லி மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைவதில் மக்கள் எவ்வாறு தோளோடு தோள் நின்று செயல்படுகிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று என்று அவர் கூறினார்.

In Kargil, we didn't just win a war; we showcased the incredible strength of truth, restraint, and capability: PM Modi in Ladakh

July 26th, 09:30 am

PM Modi paid homage to the bravehearts who made the supreme sacrifice in the line of duty on the occasion of 25th Kargil Vijay Diwas in Ladakh. “In Kargil, we not only won the war, we presented an incredible example of 'truth, restraint and strength”, Prime Minister Modi remarked.

கார்கில் வெற்றி தினத்தை பிரதமர் லடாக் பயணம் போரில் உயிர்த்தியாகம் புரிந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்

July 26th, 09:20 am

25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார். போரில் உயிர்த்தியாகம் புரிந்த துணிச்சல்மிக்க வீரர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார். தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கார்கில் போர் குறித்து கேட்டறிந்த பிரதமர், அழியாத நினைவு குடிலையும், வீர பூமியையும் பார்வையிட்டார்.

பட்ஜெட் 2024-25 குறித்து பிரதமர் தெரிவித்த கருத்துகளின் தமிழாக்கம்

July 23rd, 02:57 pm

வளர்ச்சியின் புதிய உச்சங்களுக்கு நாட்டை உயர்த்துவதற்கான முக்கிய பட்ஜெட்டுக்காக அனைத்து மக்களுக்கும் எனது வாழ்த்துகளை நான் தெரிவித்துக்கொள்கிறேன். நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும், அவரது ஒட்டுமொத்த அணியினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

2024-25 பட்ஜெட் குறித்து பிரதமர் கருத்து

July 23rd, 01:30 pm

மக்களவையில் இன்று மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் பிப்ரவரி 11 அன்று பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்

February 09th, 05:25 pm

பிரதமர் மேற்கொண்ட முன்முயற்சிகளுக்கு அந்த்யோதயாவின் தொலைநோக்குப் பார்வை வழிகாட்டியாக உள்ளது. வளர்ச்சியின் பயன்கள் பழங்குடியின சமூகத்தினரைச் சென்றடைவதை உறுதி செய்வது முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகளில் ஒன்றாகும், அவர்களில் பெரும்பகுதியினர் சுதந்திரம் அடைந்து பல தசாப்தங்களுக்குப் பிறகும் இந்த நன்மைகளைப் பெற முடியவில்லை. இதன் அடிப்படையில், இந்தப் பிராந்தியத்தில் உள்ள குறிப்பிடத்தக்க பழங்குடியின மக்களுக்குப் பயனளிக்கும் பல்வேறு திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுவார்.